Just In
- 13 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!
நம் நாட்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களுக்கான வரவேற்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் கார்கள் வாங்கும்போது சில விஷயங்களை தெரிந்து கொண்டு காரை ஓட்ட துவங்கினால், பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

இத செய்யாதீங்க
அதிக மைலேஜ் கிடைக்கும் என்று கருதி, மலைச் சாலைகள் மற்றும் சரிவான பகுதிகளில் இறங்கும்போது நியூட்ரல் மோடில் வைத்து சிலர் இறக்குகின்றனர். சில வேளைகளில் காரை கட்டுப்படுத்துவதற்கு சிரமமாகிவிடும்.

இப்போது வரும் ஆட்டோமேட்டிக் கார்கள் இதுபோன்ற சமயங்களில் எரிபொருள் சப்ளையை முற்றிலுமாக தவிர்க்கும் நுட்பத்தை பெற்றிருக்கின்றன. எனவே, எரிபொருள் விரயமாகும் என்ற கூற்றை மனதிலிருந்து எடுத்துவிடுங்கள். மேலும், டிரைவிங் மோடில் வைத்தே ஓட்டுவது பாதுகாப்பானது.

நியூட்ரல் மோடு
கார் வேகம் குறைந்து நிறத்துவதற்கு முன்பாகவே சிலர் டிரைவிங் மோடிலிருந்து நியூட்ரல் மோடிற்கு கியரை மாற்றிவிடுகின்றனர். ஆனால், இது மிகவும் தவறான செயல்.

கார் ஓடிக் கொண்டிருக்கும்போது நியூட்ரலுக்கு மாற்றும்போது கியர்பாக்ஸ் உதிரிபாகங்களில் அதிக உராய்வு ஏற்பட்டு சீக்கிரமாகவே தேய்மானம் அடையும். கார் முற்றிலும் நின்றவுடன்தான் டிரைவிங் மோடிலிருந்து நியூட்ரல் கியருக்கு மாற்ற வேண்டும்.

ஹேண்ட்பிரேக்
பலரும் பார்க்கிங் மோடில் வைத்து காரை நிறுத்திவிட்டு செல்கின்றனர். பார்க்கிங் மோடில் வைத்தவுடன், கார் நகராது என்று கருதி இவ்வாறு செய்கின்றனர்.

பார்க்கிங் கியர் மோடில் வைத்திருந்தாலும், கூடவே ஹேண்ட் பிரேக்கையும் போட்டு வைப்பதுதான் பாதுகாப்பான வழி. பார்க்கிங் கியர் மோடு வழங்குவதைவிட அதிக பிடிப்பை ஹேண்ட்பிரேக் வழங்கும்.

வகைகள்
ஏஎம்டி, சிவிடி, டிஎஸ்ஜி என இப்போது பல வகைகளில் ஆட்டோமேட்டிக் கார்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு காருக்கும் ஓட்டும்போது சில வித்தியாசங்கள் இருக்கும். ஏஎம்டி கார்களில் ஹைட்ராலிக் முறையில் கியர் மாற்றம் நடப்பதால், சிறிய அதிர்வு தெரியும்.

எனவே, ஆட்டோமேட்டிக் கார்களின் இயக்கத்தன்மையை புரிந்து கொண்டு,அது பிடிபடும் வரை கவனமாக ஓட்டுவது சிறந்தது.

ஓவர்டேக்
மேனுவல் கார்களில் ஓவர்டேக் செய்யும்போது சற்று எளிதாக இருக்கும். ஆனால், புதிதாக ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது ஓவர்டேக் செய்வதில் மிகுந்த கவனம் தேவை.

மேனுவல் கார்களைவிட சில ஆட்டோமேட்டிக் கார்கள் பிக்கப் சற்று மந்தமாக இருக்கும். எனவே, அதனை கணித்து ஓவர்டேக் செய்வது நல்லது. இல்லையெனில், விபரீதத்தில் முடியும் அபாயம் இருக்கிறது.

அடிப்படை விஷயம்
மேனுவல் கார்களை ஓட்டியிருந்தாலும் கூட புதிதாக ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டுபவர்கள் பொதுவான தவறு ஒன்றை செய்கின்றனர். அதாவது, ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது பிரேக் பெடலுக்கு இடது காலையும், ஆக்சிலரேட்டர் பெடலுக்கு வலது காலையும் பயன்படுத்துகின்றனர் இது தவறு.

ஆட்டோமேட்டிக் கார்களில் பிரேக் பெடல் மற்றும் ஆக்சிலரேட்டர் பெடலுக்கு வலது காலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இடதுகாலுக்கு இங்கு வேலையில்லை. ஆக்சிலரேட்டர் பெடலில் கால் இருக்கும்போது பிரேக் பெடலில் மற்றொரு கால் இருக்கக்கூடாது. இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம்கூட.

எஞ்சின் ரேவ்
மேனுவல் கியர்பாக்ஸ் போன்று நியூட்ரலில் வைத்து ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார் ஆக்சிலரேட்டரை அதிகம் கொடுத்து ரேவ் செய்ய வேண்டாம். இது நிச்சயம் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சினில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சிக்னலில்...
சிக்னலில் நிற்கும்போது கார் நியூட்ரல் மோடிற்கு மாற்றலாம். இது எல்லா ஆட்டோமேட்டிக் கார்களுக்கும் பொருந்தாது. ஆனால், சிக்னலில் நிற்கும்போது பார்க்கிங் மோடில் மட்டுமே வைக்க வேண்டாம். இது கியர்பாக்ஸ் பாகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

டிராஃபிக்கில்...
ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது டிராஃபிக்கில் ஆக்சிலரேட்டரை அதிகம் கொடுக்க தேவையில்லை. பிரேக் பெடலை லேசாக விட்டாலே கார் தானாக நகரும். இதற்கு தக்கவாறே ஐட்லிங் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.

நிதானம்...
ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது அவசரப்படாமல் நிதானமாக இயக்கினால் மிகச் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தரும். எந்த காராக இருந்தாலும், புதிதாக ஓட்டும்போது சில வாரங்கள் வரை அதன் இயக்கத்தன்மை பிடிபடும் வரை நிதானமாக ஓட்டுவது நல்லது.