காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய மறவாதீர்!

By Saravana

டெல்லியில், இன்று காலை நிகழ்ந்த கார் விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கக் கூடும் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீட் பெல்ட் அணியாததால் விலை மதிப்பற்ற உயிர்கள் நொடியில் பிரிந்துவிடுகின்றன. சீட் பெல்ட் அவசியத்தை உணராமல் பலர் தங்களது உயிரை இலவசமாக எமனுக்கு இறையாக்குக்கின்றனர்.


 டிரைவருக்கு மட்டுமில்லை...

டிரைவருக்கு மட்டுமில்லை...

சீட் பெல்ட் அணிந்திருந்தால் கோபிநாத் முண்டே காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சீட் பெல்ட்டின் பயன் மற்றும் அவசியத்தை தெரிந்துகொள்ளலாம்.

 டிரைவருக்கு மட்டுமில்லை...

டிரைவருக்கு மட்டுமில்லை...

காரில் செல்லும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்லுங்கள். டிரைவர் மட்டுமின்றி, சக பயணியும் சீட் பெல்ட் அணிவது விலை மதிப்பற்ற உயிர்களை காக்கக்கூடும்.

முக்கிய பயன்

முக்கிய பயன்

விபத்தின்போது சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே உயிர் காக்கும் காற்றுப் பைகள் மூலம் பாதுகாப்பு கிடைக்கும். இல்லையெனில், காற்றுப் பைகள் விரிந்து எஜமானரை காப்பாற்ற முயன்றாலும் பயனில்லை.

 அபாயம்

அபாயம்

அதிவேகத்தில் செல்லும்போது விபத்து நிகழ்ந்தால் காரிலிருந்து தூக்கி வீசப்படும் நிலை இருக்கிறது. இதனை சீட் பெல்ட் கண்டிப்பாக தவிர்க்கும். சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவதால் உயிரிழப்பு தவிர்க்கும் வாய்ப்பு இருப்பதோடு, பெரிய காயங்களிலிருந்தும் தவிர்க்க ஏதுவாகிறது. சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும் அதன் அவசியம் குறித்தும் ஏற்கனவே நாம் செய்திகளை வழங்கியிருக்கிறோம்.

 அலட்சியம்

அலட்சியம்

குறைந்த தூர பயணம் என்கிற நினைப்பிலும், அலட்சியத்தாலும் பலர் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுகின்றனர். விபத்து என்பது நாள், நேரம் பார்த்து நடப்பதில்லை. எனவே, காரில் ஏறி அமர்ந்தவுடன் உடனடியாக சீட் பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

சுய விழிப்புணர்வு

சுய விழிப்புணர்வு

சீட் பெல்ட் அணிவது குறித்து போலீசாரும், தன்னார்வ அமைப்புகளும் பிரச்சாரம் செய்தாலும், சுய விழிப்புணர்வு இருப்பது அவசியம். காரில் ஏறியவுடன் முதலில் சீட் பெல்ட் அணிந்தவுடன் காரை நகர்த்துவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

 காயம் ஏற்படும் வாய்ப்பு

காயம் ஏற்படும் வாய்ப்பு

விபத்து நிகழும்போது சில சமயங்களில் சீட் பெல்ட்டுகளால் தோலில் சிராய்ப்புகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. ஆனால், உயிரைவிட இந்த காயங்கள் பெரியதாக கருத முடியாது. எனவே, சீட் பெல்ட் அணியாமல் ஹாயாக செல்வதாக நினைத்துக் கொண்டு உயிருக்கு உலை வைத்துக் கொள்ள வேண்டாம். ஓட்டுபவரை தவிர நம்பி வருபவர்களின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. நல்ல நேரம் பார்த்து விபத்துக்கள் நடப்பதில்லை. எனவே, சீட் பெல்ட் அணிந்து கொண்டு கார் ஓட்டுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இந்த செய்தியை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வெளியிட்டிருக்கிறோம். நீங்கள் சீட் பெல்ட் அணிந்து செல்பவராக இருந்தாலும், இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டும் நண்பர்கள், உறவினர்களிடம் சீட் பெல்ட் அவசியத்தை அறிவுறுத்துங்கள்.

Most Read Articles
Story first published: Tuesday, June 3, 2014, 10:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X