காரில் பிரேக் ஃபெயிலியர் ஏற்படுவதற்கு முன்னும், பின்னும் ஏற்படும் அறிகுறிகள்!

Posted By:

காரின் பாதுகாப்புக்கு மிக இன்றியமையாத விஷயம் பிரேக் சிஸ்டம். குறைந்தது 6 மாதத்திற்கு ஒருமுறை பிரேக் சிஸ்டத்தை பரிசோதித்து விடுவது நல்லது. சில வேளைகளில் பராமரிப்பு குறைவாக இருக்கும்போதும், பழைய கார்களிலும் பிரேக் ஃபெயிலியர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அவ்வாறு பிரேக் ஃபெயிலியர் ஏற்படுவதற்கு முன் தென்படும் அறிகுறிகள், அல்லது கார் ஓடிக் கொண்டிருக்கும்போது பிரேக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதே உணர்ந்து கொள்வதற்கான அறிகுறிகள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம். பிரேக் ஃபெயிலியர் ஆனதை உணர்ந்து கொண்டால், பதட்டப்படாமல் செயல்பட்டு காரை நிறுத்தும் முயற்சிகளில் இறங்க வேண்டும். பிரேக் ஃபெயிலியர் ஆனதற்கான அறிகுறிகளை ஸ்லைடரில் காணலாம்.

 எச்சரிக்கை விளக்கு

எச்சரிக்கை விளக்கு

பிரேக் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதை மீட்டர் கன்சோலில் இருக்கும் பிரேக் சிஸ்டத்தின் எச்சரிக்கை விளக்கு ஒளிர்வதை வைத்து உறுதி செய்து கொள்ளலாம். ஹேண்ட்பிரேக் போடும்போதும் இந்த எச்சரிக்கை விளக்கு எரியும். ஆனால், ஹேண்ட்பிரேக்கில் இல்லாதபோதும் எரிந்தால் பிரேக் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

 தினசரி செக்கப்

தினசரி செக்கப்

காரில் ஏறி அமர்ந்து எஞ்சினை ஸ்டார்ட் செய்தவுடன், பிரேக் பெடலை இயக்கி பார்க்கவும். வழக்கமாக இல்லாமல், மிதிக்கும்போது பிரேக் பெடல் தரையை தொடும் நிலைக்கு சென்றால், பிரேக்கின் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு, பிரேக் பிடிக்காது என்பதை உணர்ந்துகொள்ளலாம். மேலும், காரை மெதுவாக நகர்த்தி பிரேக்கை செக்கப் செய்வதும் ஒரு முறை. காரை 10 கிமீ.,க்கும் குறைவான வேகத்தில் இயக்கி சோதித்து பார்க்கவும்.

அதிர்வுகள்

அதிர்வுகள்

பிரேக் பெடலில் காலை வைத்திருக்கும்போது அதிக அதிர்வுகள் தெரிந்தாலும், பிரேக்கில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்பது உணர்ந்து கொள்ளலாம். உடனடியாக, சர்வீஸ் மையத்திற்கு சென்று பிரேக் சிஸ்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

அலைகழியும்...

அலைகழியும்...

பிரேக் பிடிக்கும்போது வாகனம் ஒரு பக்கமாக இழுத்துச் சென்றாலும், பிரேக் சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

பெடல் செயலிழப்பு

பெடல் செயலிழப்பு

மிதிக்கும்போது பெடல் தரையை தொடும் அளவுக்கு சென்றாலும், பிரேக் செயலிழந்துவிட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். மேனுவல் கியர்பாக்ஸ் கார் என்றால், க்ளட்ச்சை மிதித்து காரை இரண்டாவது கியருக்கு கொண்டு வந்து வேகத்தை குறைக்கவும். பின்னர், மெதுவாக ஹேண்ட்பிரேக்கை பிடித்து காரை நிறுத்த முயற்சிக்கலாம். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில் மேனுவல் ஆப்ஷன் இருந்தால், அதற்கு மாற்றிக் கொண்டு வேகத்தை குறைத்து ஹேண்ட் பிரேக்கை பயன்டுத்தவும்.

வித்தியாசமான சப்தம்

வித்தியாசமான சப்தம்

பிரேக் பேடுகள் அதிகமாக தேய்ந்து மெலிந்துவிடும்போது, பிரேக் ஷூக்களில் போதிய பிடிப்பு இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. அந்த சமயத்தில், பிரேக்கிலிருந்து வித்தியாசமான சப்தங்கள் வரும். இதுபோன்று, சப்தம் வந்தால், உடனடியாக காரை நிறுத்தி சோதித்து பார்க்கவும். மேலும், பிரச்னை குறித்து ஆய்வு செய்தபின் காரை எடுக்கவும்.

வித்தியாசமான வாடை

வித்தியாசமான வாடை

சில சமயம் பிரேக் பாகங்கள் தேய்மானத்தால், ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வித்தியாசமான வாடை வெளிவரும். அவ்வாறு, வந்தால் அது டயர் வெப்பமடைந்து வருவதாக நினைத்து பலர் கண்டு கொள்ளாமல் இருப்பர். ஆனால், அதுபோன்ற, வித்தியாசமான வாடை வந்தால் பிரேக் சிஸ்டத்தை உடனடியாக ஆய்வு செய்வது அவசியம். இதுவும் பிரேக் ஃபெயிலியருக்கு வழி வகுக்கும்.

 
English summary
Here are some signs of brake problems. If you experience any of these, you should visit your repair shop as soon as possible:
Please Wait while comments are loading...

Latest Photos