கார்ல கியர் மாத்தும் போது எல்லாரும் பண்ணுற தப்பு இதான்! இதைச் சரி பண்ணலேன்னா கதை கந்தல் தான்!

காரில் மேனுவல் கியர் ஆப்ஷன்தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் மேனுவல் கியர் கார் ஓட்டும் போது பலர் சில தவறுகளை நீண்ட ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கின்றனர். இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

உலகின் மிகப்பெரிய ஆட்டோ சந்தையில் இந்தியாவும் ஒன்று, இங்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான கார்கள் விற்பனையாகிறது. ஏராளமான மக்கள் இந்தியாவில் கார்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். தற்போது உலகம் முழுவதும் ஆட்டோமெட்டிக் கியர் என்ற தொழிற்நுட்பம் பிரபலமாகி வருகிறது. இதுவரை மேனுவல் கியர் மட்டுமே இருந்தது. ஆட்டோமெட்டிக் எல்லாம் உயர் ரக கார்களில் மட்டுமே இருக்கும் அம்சமாக இருந்த நிலையில் தற்போது குறைந்த விலை கார்களில் கூட ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்கள் வந்துவிட்டன.

கார்ல கியர் மாத்தும் போது எல்லாரும் பண்ணுற தப்பு இதான்! இதைச் சரி பண்ணலேன்னா கதை கந்தல் தான்!

என்னதான் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்கள் வந்தாலும் மக்கள் மேனுவல் கியரை தான் அதிகம் விரும்புகின்றனர். ஆட்டோமெட்டிக் கியர் தான் காருக்கு சிறப்பான மைலேஜ் மற்றும் இன்ஜினிற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கினாலும் மக்கள் நீண்ட ஆண்டுகளாக மேனுவல் கியரில் பழகிவிட்டதால் பலர் மேனுவல் கியர் காரையே விரும்புகின்றனர். பலர் இன்னும் மேனுவல் கியரில் செய்யக்கூடாது பல தவறுகளைச் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி அதிகமாக மேனுவல் கியர் பயன்படுத்துபவர்கள் செய்யும் தவறுகளையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் காணலாம்.

கிளட்ச் லிவர்

மேனுவல் கியரை பொருத்தவரை கிளட்ச் ஒரு முக்கியமான பகுதி இது இன்ஜினையும் கியர் பாக்ஸையும் இணைக்கும் ஒரு பகுதி கிளட்சை சரியாகப் பயன்படுத்தினால் அதிகமான மைலேஜ், நீண்ட இன்ஜின் ஆயுள், மற்றும் நீண்ட கிளட்ச் மற்றும் கியர் ஆயுள் ஆகியன இருக்கும். பலர் கார் ஓடிக்கொண்டிருக்கும்போது கியரை மாற்றப் பாதி கிளட்சை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்படிச் செய்வதால் கியர் பாக்ஸ் உள்ளிட்ட கார்களில் உதிரிப்பாகங்களின் ஆயுள் குறைகிறது. சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு விஷயம். முழு கிளட்சையும் பிடித்தே கியரை மாற்ற வேண்டும்.

கார் வைக்கும் இடம் கிளட்ச் பெடல் இல்லை

பலர் கார் நீண்ட தூரம் பயணிக்கும் போது கார் டாப் கியரில் இருந்தாலும் ஒரு காலை காரின் கிளட்ச் பெடலிலேயே வைத்திருப்பார்கள். இது முன்னெச்சரிக்கை எல்லாம் இல்லை காரை வைக்க ஒரு இடம் தேவை என்பதால் கிளட்ச் மேலே வைத்திருப்பார்கள். டீசல் கார்களில் கிளட்ச் டைட்டாக இருக்கும். இதனால் காரை வைக்கும் போது பெரிய பிரச்சனை இருக்காது. ஆனால் பெட்ரோல் கார்களில் கதையே வேறு லேசாகக் காலை வைத்திருந்தாலும் கிளட்ச் லேசாக வேலை செய்யும் இதனால் நீங்கள் ஆக்ஸிலரேட்டரில் கொடுக்கும் முழு பவரும் கியருக்கு செல்லாது. நீண்ட நேரம் இப்படி இருந்தால் காரின் பல உதிரிப் பாகங்கள் பாதிக்கப்படும். இதனால் மேனுவல் கியர் கார்களில் தேவையில்லாத நேரங்களில் கிளட்ச் பெடலில் காரை வைக்க வேண்டிய தேவையில்லை காலை தரையில் வைத்துப் பழக வேண்டும்.

கியரில் கை

ஒவ்வொருவருக்கும் கார் ஓட்டுவதில் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். பலருக்கு கார் பயணத்தின் போது ஒரு கை ஸ்டியரிங்கிலும், மற்றொரு கை கியரிலுமே இருக்கும். இதுவும் தவறு, கியர் லிவரை தேவையான நேரம் மட்டுமே கையால் தொட வேண்டும். அதில் கைய ஒரு ரெஸ்டிற்காக வைத்தால் அந்த கியர் லிவரில் அழுத்தம் ஏற்பட்டு அது கியர் பாக்ஸ் வரை பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் கியர் லிவரில் கையை வைத்துக்கொண்டு பயணிப்பதும் தவறாகும். நீங்கள் இப்படியாக ஏதாவது செய்து கொண்டிருந்தாலும் இன்றுடன் அந்த பழக்கத்தை நிறுத்துங்கள்.

டாப் கியரில் மெதுவாகச் செல்வது

பலருக்கு டாப் கியரில் போனால் தான் கார் சிறப்பான மைலேஜை கொடுக்கும் அதனால் முடிந்தளவிற்கு டாப் கியரை போட்டு விட வேண்டும் என நினைத்துக் குறைவான ஆர்பிஎம்மிலேயே டாப் கியருக்கு காரை மாற்றிவிடுகின்றனர். இது முற்றிலும் தவறு கியர் அதிகமாக அதிகமாக கியரில் உள்ள பற்களின் எண்ணிக்கையும் அதிகமாகவும், இதனால் அது இன்ஜினிற்கு ரிலாக்ஸை தரும். ஆனால் போதுமான ஆர்பிஎம் இல்லை என்றால் கியரில் அதிகமாக டென்ஷன் உருவாகும். இது கியர் உள்ளிட்ட பல உதிரிப்பாகங்களின் வாழ்வைப் பாதிக்கும். இதனால் பல பிரச்சனைகள் வரும் இதனால் இதையும் தப்பித் தவறிக் கூடச் செய்யாதீர்கள்.

Most Read Articles
English summary
List of mistakes people doing in the manual gear car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X