காருக்குள் திடீர்ன்னு அழுகுன முட்டை நாத்தம் அடிக்குதா! அப்ப இதான் மாத்துனா தான் அது சரியாகும்!

ஒரு காலத்தில் கார் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் வாகனமாக மட்டும் தான் இருந்தது. இன்று அதையும் தாண்டி மக்களுக்கு காரில் பல்வேறு வசதிகள் தேவைப்படுகிறது. கார் முற்றிலும் அடைத்திருக்கும் ஒரு அறை என்பதால் அதன் வெளிப்புற கிளைமேட் காரின் உள்ளே பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். காருக்கு வெளியில் வெயில் அதிகமாக இருந்தால் காருக்குள் வெப்பம் அதிகமாக இருக்கும்.

இதை கட்டுப்படுத்தவே கார்களில் ஏசிப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது காருக்குள் கெட்ட வாசனை அடிக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏசி வென்ட்களில் நறுமணங்களைப் பரவ விடும் வாசனைத் திரவியங்கள் அடங்கிய கருவியைப் பொருத்தி வருகின்றனர். இதனால் காருக்குள் நல்ல நறுமணம் எப்பொழுதும் இருக்கும். ஆனால் அதையும் மீறி சில நேரம் காருக்கு துர்நாற்றம் வரும் அப்படி நாற்றம் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்? காரில் என்ன பிரச்சனை வந்தால் எப்படியான வாசனை எல்லாம் வரும் எனக் காணலாம்.

புகை வாசனை

கார் செயல்பாட்டில் இருக்கும் போது காரின் எக்ஸாஸ்ட் வழியாகப் புகை வெளியேறும், இது நமக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் சில நேரம் காருக்குள் இந்த புகையின் வாடை வரும். இப்படி வந்தால் இது மிகவும் ஆபத்தான விஷயமாகும். இப்படி இருந்தால் காரின் எக்ஸாஸ்ட் பைப்பில் ஓட்டை இருக்கிறது என அர்த்தம், து மட்டுமல்ல காரின் ஃப்ளோர் பகுதியிலும் துளை இருக்கிறது. அது வழியாக எக்ஸாட்ஓட்டையிலிருந்து வெளியேறும் புகை காருக்குள் வருகிறது என அர்த்தம். இப்படியாக எக்ஸாஸட் புகையை காருக்குள் அமர்ந்து சுவாசிப்பது மிகவும் ஆபத்தானது. இதனால் இப்படியாகப் பிரச்சனை வந்தால் உடனடியாக மெக்கானிக்கிடம் காரை கொண்டு செல்வது நல்லது.

அழுகிய முட்டை நாத்தம்

காருக்குள் சில நேரம் அழுகிய முட்டையின் துர்நாற்றம் வீசும், இப்படியான துர்நாற்றத்திற்கு காரின் கேட்டலிஸ்ட் கன்வெர்டர் மிக முக்கியமான காரணம். காரின் எரிபொருளில் சல்ஃபர் இருக்கும். காரிலிருந்து வெளியேறும் மாசுவில் சல்ஃபர் இருக்கும். காரில் இருக்கும் கேட்டலிஸ்ட் கன்வெர்டர்இந்த சல்ஃபரை சல்ஃபர் டை ஆக்ஸைடாக மாற்றும். இந்த சல்ஃபரின் வாசம் தான் அழகிய முட்டையின் வாசம் போல இருக்கும். அதனால் அந்த வாசனை வந்தால் கேட்டலிஸ்ட் கன்வெர்டர் அதைச் சரியாக கன்வெர்ட் செய்யவில்லை என அர்த்தம். இப்படியாக துர்நாற்றம் வந்தால் காரில் கேட்டலிஸ்ட் கன்வெர்டரை மொத்தமாக மாற்றுவது சிறந்தது.

எரிந்த ரப்பர் வாடை!

காருக்குள் எரிந்த ரப்பர் வாசனை வந்தால் அதற்கு காரில் ஏதோ பொருள் அதிகமாகச் சூடாகிறது என அர்த்தம். காரில் அதிக சூடாகும் பிரச்சனை பெரும்பாலும் காரின் கிளட்ச் சிலிப்பரியாகவோ அல்லது வேலை செய்யாமலோ இருந்தால் இப்படி நடக்கும். ஒருவேளை நீங்கள் கிளட்சை உபயோகிக்கும் போது இப்படியா வாசனை வந்தால் காரை ஒரு ஓரமாக நிறுத்திவட்டு சற்று நேரம் கழித்து காரை ஸ்டார்ட் செய்து பயணித்தால் இந்த பிரச்சனை சரியாகக்கூடும். அப்படியும் சரியாகவில்லை என்றால் ஒரு நல்ல மெக்கானிக்கை பார்ப்பது சிறந்தது.

சில நேரம் இப்படியான வாசனை காரின் பிரேக் பேட்டிலிருந்து கூட ஏற்படும். நீங்கள் மிக அதிகமாக பிரேக்கை அழுத்துவது இப்படியா பிரச்சனையை ஏற்படுத்தும். இதைக் கண்டறிய நீங்கள் காரை ஓரமாக நிறுத்தி டயரை செக் செய்யுங்கள் இது வழக்கத்தை விட அதிக சூடாக இருந்தால் உடனடியாக பிரேக் பேடை மாற்ற வேண்டும்.

பெட்ரோல்/ டீசல் வாடை

காருக்குள் சில நேரம் காரின் எரிபொருளான பெட்ரோல்/ டீசல் வாடை ஏற்படும். இப்படி இரந்தால் காரின் எரிபொருள் ஓஸ், காரில் ஃபில்டர், அல்லது பெட்ரோல் பைக் இதில் ஏதாவது பிரச்சனை இருக்கும் கார் ஒழுகும் அபாயம் இருக்கிறது. அதனால் இப்படியான வாசனை காருக்குள் வந்தாலும் உடனடியாக காரை மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்று மாற்றுங்கள். இதனால் உங்கள் வாகனத்தின் மைலேஜ் பாதிக்கப்படுவதோடு பெரிய பிரச்சனையும் ஏற்படும்.

சொல்ல முடியாத துர்நாற்றம்

மேலே சொன்ன 4 விஷயங்களும் அடிக்கடி கார்களில் நடக்கும் பிரச்சனையால் ஏற்படும் வாசனைகள், இது போகச் சொல்ல முடியாத அளவிற்கு சில நேரம் துர்நாற்றம் காருக்குள் இருக்கம். இதற்கு காரணம் காரின் ஏசி தான். இதற்கு கார் ஏசியின் ஏர்ஃபில்டர் அதிக ஈரப்பதத்துடன் இருப்பது ஒரு காரணமாக இருக்கும். குறிப்பிட்ட காலை இடைவெளியில் இந்த ஃபில்டரை மாற்றவில்லை என்றால் இப்படியான துர்நாற்றம் ஏசியிலிருந்து வரும். குறிப்பிட்ட இடைவெளியில் இதை மாற்றுவது இந்த பிரச்சனை வராமல் தடுக்கும்.

அடுத்த முறை உங்கள் காரில் இப்படியான துர்நாற்றம் வீசினால் உடனடியாக அதை செக் செய்து வேண்டியதைச் செய்து கொள்ளுங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களைக் காணலாம் வாருங்கள்.

Most Read Articles
English summary
List of smells that indicates serious problem in your car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X