உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா? நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருவதற்கான காரணங்களை இந்த செய்தியில் பட்டியலிட்டுள்ளோம் அதை படித்து உங்கள் காரின் குறைவாகன மைலேஜிற்கான காரணங்களை அறிந்து அதற்கான தக்க நடவடிக்கையை உடனடியாக எடுங்கள்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

கார் வைத்திருப்பவர்களுக்க மைலேஜ் என்பது மிக முக்கியமான ஒன்று காருக்கு நீங்கள் செலவு செய்யும் தொகையை தீர்மானிப்பது இது தான். இதனால் உங்கள் காரை முடிந்த அளவு அதிக மைலேஜ் தரும்படி பராமரிப்பது மிக முக்கியம்

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

ஆனால் சிலரது கார்கள் குறைந்த அளவு மைலேஜ் தான் தருகிறது என பலர் வருத்தப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லது நீங்களே கூட அந்த சூழ்நிலையில் இருக்கலாம் உங்களுக்காக தான் இந்த செய்தியை நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

பொதுவாக காரின் மைலேஜ் குறைவாக கிடைப்பதற்கு எக்கச்சக்க காரணங்கள் உள்ளது. எளிதாக சொல்ல வேண்டும் என்றால் காரின் எரிபொருள் கட்டமைப்பு சரியாக வேலை செய்யவில்லை என்றால் காரின் மைலேஜ் குறையும்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

கீழே காரின் மைலேஜ் ஏன் குறைகிறது என்ற காரணங்களை பட்டியலிட்டுள்ளோம் படித்து உங்கள் கார் ஏன் மைலேஜ் குறைகிறது என்பதை உணர்ந்து அதற்கு தகுந்த நடவடிக்கையை எடுத்து கொள்ளுங்கள்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

மோசமான டிரைவிங் பழக்கம்

கார்கள் மைலேஜ் குறைவாக தருவதற்கு மிக முக்கிய காரணம் மோசமான டிரைவிங் பழக்கம் தான். சிலர் காரை ரேஸ் ஓட்டுவது போல் ஓட்டுகின்றனர். ஆக்ஸிலரேட்டரையும், பிரேக்கையும் மாறிமாறி கொடுக்கும் போது நிச்சயம் மைலேஜ் குறைவாகதான் கிடைக்கும்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

அதேபோல் பொதுவாக காரில் 120 கி.மீ., வேகத்திற்கு அதிமாக சென்றாலும் மைலேஜ் குறைவாகத்தான் கிடைக்கம். எல்லா கார்களிலும் மைலேஜ் என்பது நடுத்தர ஸ்பீடில் தான் சிறப்பாக இருக்கும்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

காரை ஓட்டமாமல் வெகு நேரம் ஆன் செய்தே வைத்திருந்தாலும் காரின் மைலேஜ் பாதிக்கப்படும். இதனால் உங்கள் காரின் எரிபொருள் வீணாகும். தேவையில்லாத இடத்தில் காரை ஆப் செய்வது தான் சிறந்த பழக்கம்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

டயர் பிரச்சனை

காரின் டயர் அலெயன்மெண்ட்டில் பிரச்னை இருந்தாலோ டயர் காற்று குறைவாக இருந்தாலோ கார் செல்ல அதிக சிரமப்படும். இதனால் அதிக பெட்ரோல் செலவாகும். கார் டயரின் அலெயன்மெண்ட் மற்றும் காற்றின் அழுத்தத்தை அவ்வப்போது சரி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

குறைவான ஆயில்

உங்கள் காரில் ஆயிலின் அளவு குறைவாக இருந்தால் மைலேஜ் பிரச்னை ஏற்படும். இன்ஜின் இயக்கும் போது அதிக ஊராய்வு ஏற்பட்டு சூடு அதிகமாகி தேவைக்கும் அதிகமாக எரிபொருளை செலவு செய்யும் இதனால் குறைந்த மைலேஜையே பெறுவீர்கள். உங்கள் காரில் எவ்வளவு தூரம் பயன்படுத்திய பின்பு ஆயில் மாற்ற வேண்டும் என்பதை அறிந்து அந்த காலகட்டத்தில் ஆயிலை மாற்றிவிடுங்கள்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

அழுக்கடைந்த சென்சார்

இஞ்ஜினிற்குள் எவ்வளவு எரிபொருளை செலுத்த வேண்டும் என எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் எனும் கருவி ஒரு தகவலை சென்சாருக்கு அனுப்பும், சுத்தமாக இல்லாத சென்சார் அந்த தகவலின் படி துள்ளியமான எரிபொருளை அனுப்பமுடியாது. இதனால் பெட்ரோல் அதிகமாக செலவாகும்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

பியூயல் பம்பில் பழுது

இன்ஜினிற்கு எரிபொருளை அனுப்பும் பியூயல் பம்பில் பழுது இருந்தாலும் அது இன்ஜிற்கு தேவையான எரிபொருளை அனுப்பாது. இதனால் உங்கள் காரின் மைலேஜ் என்பது பெரிதளவு பாதிக்கப்படும்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

ஏர் பில்டர்கள் பழுது

இன்ஜினிற்குள் செலுத்தப்படும் காற்றின் அளவும் சரியாக இருக்க வேண்டும் அழுக்கடைந்த ஏர் பில்டர்கள் சரியான அளவு காற்றை உள்ளே செலுத்தாது. கம்பஷனின் போது அதிக அளவு பெட்ரோல் செலவாகும். இதனால் மைலேஜ் பெரும் அளவு பாதிக்கப்படும்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

ஸ்பார்க் பிளாக் பழுது

கம்பஷன் சேம்பருக்குள் முக்கியமான பணியை செய்வது ஸ்பார்க் பிளக் தான். நீங்கள் காரை ஸ்டார்ட் செய்வதில் துவங்கி நீங்கள் காரை ஆப் செய்யும் வரை செயல்படும். அதில் அழுக்கு மற்றும் தூசி இருந்தால் கம்பஷன் சரியாக நடக்காமல் அதிக எரிபொருள் செலவாகும். இதனால் நீங்கள் மைலேஜை இழக்க நேரிடும்.

உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா நிச்சயம் இது தான் காரணமாக இருக்கும்

பிரேக் சூ அல்லது கெலிபர் கோளாறு

உங்கள் காரில் டிஸ்க் பிரேக் இருந்தாலும் டிரம்ப் பிரேக் இருந்தாலும் அதில் பிரச்னை இருந்தால் டிஸ்க்/ டிரம்மை உரசி கொண்டிருக்கும். இதனால் உங்கள் காரை செலுத்த வழக்கத்தை விட அதிகமான ரேஸை நீங்கள் வழங்க வேண்டியது இருக்கும். இதனால் மைலேஜ் பெரும் அளவு பாதிக்கப்படும்.

Most Read Articles

மேலும்... #டிப்ஸ் #tips
English summary
Major Reasons For Bad Gas Mileage. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X