கார் டயர் நீடித்து உழைக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

காரின் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம், பெர்ஃபார்மென்ஸ் போன்றவற்றை நிர்ணயிப்பதில் முக்கிய சக்தியாக டயர்கள் விளங்குகின்றன. டயர்களை நல்ல பராமரிப்பில் வைத்திருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளையும், வீண் சிரமங்கள் மற்றும் செலவுகளையும் குறைக்க முடியும்.

கார் பராமரிப்பில் முக்கியமானதாக உரிமையாளர்களுக்கு அதிக செலவீனத்தை கொடுப்பது டயர்களை மாற்றும்போது ஏற்படுகிறது. எனவே, சில உபாயங்களை கடைபிடித்தால் டயர்கள் நீடித்து உழைப்பதற்கு உத்தரவாதம் கிடைக்கும். டயர்களை நீடித்து உழைப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.

டயரில் காற்றழுத்தம்

டயரில் காற்றழுத்தம்

தயாரிப்பாளரின் பரிந்துரைப்படி, டயரில் காற்றழுத்தத்தை சரியான முறையில் பராமரித்து வந்தாலே டயர்கள் நீடித்து உழைக்கும். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை காற்றழுத்ததை சோதித்துவிட வேண்டும். டயரில் குறைவான காற்றழுத்தம் இருக்கும்போது அதிக உராய்வு ஏற்பட்டு தேய்மானம் அதிகரிக்கும். மேலும், டயரின் பக்கவாட்டு பகுதி தரையில் உராய்ந்து, அதிக சூடாகி டயர் வெடிக்கும் ஆபத்தும் ஏற்படும். எஞ்சினுக்கும் கூடுதல் பளுவை தரும். இதேபோன்று, அதிக காற்றழுத்தம் இருந்தால், சஸ்பென்ஷன் மற்றும் சேஸீ பாகங்களுக்கு அதிக உளைச்சலை தந்து அதன் ஆயுட்காலத்தை குறைத்துவிடும்.

 நிதான டிரைவிங்

நிதான டிரைவிங்

உங்களது மன அழுத்த்ததை காரில் காண்பித்து தாறுமாறாக ஓட்டினால், உடனடியாக டயருக்கும் மன அழுத்தத்தை ஏற்படும். ஆம், தாறுமாறாக ஓட்டும்போது பிற பாகங்களை அதிக அவஸ்தையை அனுபவிப்பது டயர்தான். அதிக எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பாக செல்ல நிதானமாக ஓட்ட பழகிக் கொள்ளுங்கள். மேலும், வேகமாக சென்று அடிக்கடி பிரேக் பிடிக்கும்போது டயர்கள் சீக்கிரமாக தேய்மானம் அடையும். இதனால், பல விதங்களில் உங்கள் பாக்கெட் பழுத்துவிடும் அபாயம் இருக்கிறது.

தவிர்க்க வேண்டும்

தவிர்க்க வேண்டும்

தினசரி அலுவலகம் அல்லது பிற விஷயங்களுக்கு வீட்டிலிருந்து செல்லும்போது நல்ல சாலையை தேர்வு செய்து செல்லுங்கள். கொஞ்சம் தூரமானாலும் பரவாயில்லை. கற்கள், அதிக பள்ளம் மேடுகள் உள்ள சாலைகளை தவிர்ப்பதும் டயருக்கு நீங்கள் செய்யும் உதவியாகவே இருக்கும். மேலும், பஞ்சர் போன்ற பிரச்னைகளையும், டயரின் பக்கவாட்டு சுவர் சீக்கிரம் தேய்வதையும் தவிர்க்க முடியும்.

ஓவர்லோடு

ஓவர்லோடு

காரில் அதிக பாரத்தை பாரத்தையும், பயணிகளையும் ஏற்றுவதை கட்டாயம் தவிருங்கள். இதனால், டயர்களுக்கு கூடுதல் பளுவை தாங்கிச் செல்வதால் சீக்கிரம் தேய்மானம் அடைவது நிச்சயம். மேலும், பஞ்சர் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதோடு, டயர் வெடிக்கும் அபாயமும் உள்ளது.

அடிக்கடி பஞ்சர்

அடிக்கடி பஞ்சர்

பஞ்சர் ஆன ட்யூப்லெஸ் டயர்களை நீண்ட தூரம் ஓட்டிச் செல்லும்போது சில சமயம் ஆபத்தில் முடியும். எனவே, கூடிய விரைவாக பஞ்சர் போட்டுவிடுவது உத்தமம். மேலும், அடிக்கடி பஞ்சரான டயர் என்றால் முழுமையாக தேய்மானம் அடையும் வரை காத்திருக்காமல் உடனடியாக மாற்றுவது அவசியம்.

வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங்

வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங்

சக்கரங்கள் அலைன்மென்ட்டில் பொருந்தியிருக்காவிட்டால், டயர்கள் மற்றும் சஸ்பென்ஷன் பாகங்களில் தேவையற்ற தேய்மானம் ஏற்படும். மோசமான சாலைகளில் தினசரி ஓட்டுபவர்கள் 5,000 கிலோமீட்டர்களுக்கு ஒருமுறை வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங் செய்துவிடுவது நல்லது. ஸ்டீயரிங் வீல் செயல்திறனில் வித்தியாசம் தெரிந்தால் அல்லது வேகமாக செல்லும்போது தேவையற்ற அதிர்வுகள் வந்தாலும் வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

டயர் மாற்றும் முறை

டயர் மாற்றும் முறை

ஒவ்வொரு முறை வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங் செய்யும்போது வீல்களை சுழற்சி முறையில் மாற்றி போடுவது நல்லது. ஸ்பேர் வீல் உள்பட அனைத்து டயர்களையும் மாற்றுவதால், டயர்களில் ஏற்படும் தேவையற்ற தேய்மானத்தை தவிர்க்க முடியும். மேலும், டயர்களில் ஒழுங்கற்ற தேய்மானம் இருந்தால், உடனடியாக டயரை மாற்றிவிடுவது பாதுகாப்பை உறுதி செய்யும்.

வால்வும் மாற்ற வேண்டும்

வால்வும் மாற்ற வேண்டும்

புதிதாக டயரை மாற்றும்போது வால்வு மற்றும் வால்வு மூடியையும் மாற்ற வேண்டியது அவசியம். பலர் இதனை கண்டுகொள்ளாமல் பின்னால் அவஸ்தை படுவதை காண முடிகிறது.

கான்கிரீட் சாலை

கான்கிரீட் சாலை

தார் போடாத சாலைகள், உதாரணத்திற்கு கான்கிரீட் சாலை உள்ளிட்டவற்றில் செல்லும்போது அதிவேகத்தில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும். சிமென்ட் சாலைகளில் டயர் சீக்கிரம் சூடாகி வெடிக்கும் ஆபத்து இருக்கிறது. வேகக் கட்டுப்பாட்டு அளவைவிட குறைவான வேகத்தில் காரை செலுத்துவது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.

 வேண்டவே வேண்டாம்

வேண்டவே வேண்டாம்

தற்போது மார்க்கெட்டில் சீனாவிலிருந்து தயாரிக்கப்பட்டு வரும் மலிவு விலை டயர்கள் விற்பனை கன ஜோராக நடக்கிறது. அவை மிக குறைவான தரம் கொண்டவை. எனவே, சீன தயாரிப்பு டயர்களை அறவே தவிர்த்து விடுங்கள். மேலும், உங்கள் காரின் பரிந்துரைக்கப்பட்ட அளவு கொண்ட டயர்களை மட்டுமே பொருத்துங்கள். இதன்மூலம், தேவையற்ற பிரச்னைகளை தவிர்ப்பதோடு, அதிக மைலேஜையும் பெற முடியும். மேலும், ஒவ்வொரு பயணமும் நிம்மதியாகும் என்பதுடன், டயர்கள் நீடித்து உழைப்பதால் பாக்கெட்டிற்கு பங்கம் விளைவிக்காது.

 
Most Read Articles

English summary
It’s easy to forget that tyres are the only point of contact between your vehicle and the road. That is why it’s extremely important to preserve the quality and performance of your tyres to ensure both your safety and your mobility. To do so, we advise that you comply with the following recommendations.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X