குறைந்தபட்சமாக உங்கள் காரை நீங்கள் இவ்வாறு பாரமரித்தால், கார் நிச்சயம் சேஃப்..!

Written By:

பல மில்லியின் கிலோ மீட்டர்களை கடந்து வாழும் இன்றைய மார்டன் கார்களை விட, ஒரு சில பல லட்ச கிலோ மீட்டர்களில் ஆயுட்காலத்தை பெற்று வாழும் சாதரண கார்களின் செயல்திறன் உங்களை வியக்கவைக்கும்.

அதற்கு காரணம் பராமரிப்பு தான். எந்த காராக இருந்தாலும் அதில் நல்ல பராமரிப்பு பணிகளை தொடர்ந்து வந்தாலே, அதனுடைய செயல்திறன் சிறந்த முறையில் இருக்கும்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் கார்களில் பராமரிப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம், அதை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை கீழே தொடர்ந்து பார்க்கலாம்.

எஞ்சின் ஆயில் பராமரிப்பு

எஞ்சின் ஆயில் பராமரிப்பு

எஞ்சினுக்கான செயல்பாடு என்பது காரை ஸ்டார்ட் செய்தவுடன் தீர்மானிக்கப்படுகிறது. இதில் முக்கிய பங்குவகிப்பது எஞ்சின் ஆயில்கள்.

காரை ஸ்டார்ட் செய்தவுடன், எஞ்சின் ஆயில் இயந்திரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவ குறைந்தபட்ச வெப்பநிலை தேவைப்படும்.

எஞ்சின் ஆயில் குறைந்த வெப்பநிலையில் இருக்கும் போது காரை ஸ்டார்ட் செய்தவுடன் இயக்கினால், எஞ்சினின் ஆயுட்காலம் குறைய தொடங்கிவிடும்.

இதை தவிர்க்க காரை ஸ்டார்ட் செய்த உடன் 1 அல்லது 2 நிமிடம் காத்திருப்பிற்கு பிறகு இயக்குவது காரின் ஆயுளை நீட்டிக்கும்.

முறையான சர்வீஸ்

முறையான சர்வீஸ்

கார் என்பது சிறிய உதிரி பாகங்கள் கொண்டு, பொறியாளர்களின் திறனால் உருவாக்கப்பட்ட பெரிய சாதனம்.

அதனுடைய உதிரி பாகங்களுக்கு சரியான லூப்ரீகேஷன் மேலும் ரீப்பிளேஸ்மெண்டுகளை சரியான நேரத்தில் மேற்கொள்ள வேண்டும்.

அதனால் கார்களுக்கு உரிய நேரத்தில் சர்வீஸ் தருவதை முன்னிலையாக கொள்ள வேண்டும்.

சர்வீஸை தவறுவது எப்போதும் காருக்கும் மற்றும் காரின் செயல்திறனுக்கும் ஆபத்தே என்பதை நினைவில் கொள்க.

கோஸ்டிங் நிறுத்த அமைப்பு

கோஸ்டிங் நிறுத்த அமைப்பு

நகரங்களுக்கு ஏற்றவாறான வேகத்தில் பயணிக்கும் போது, பலரும் தங்களது முழு வலிமையையும் பிரேக்கின் மீது பிரோயகித்து காரை நிறுத்துவார்கள்.

இவரை போன்றவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தான் 'கோஸ்டிங்' (Coasting). எஞ்சினின் திறன் கொண்டு காரை நகர்த்துவதே கோஸ்டிங் எனப்படுகிறது.

காரை நியூட்ரலில் வைத்தாலோ அல்லது நகர்வில் இருக்கும் போது கிளட்சின் அழுத்தத்தை அதிகரித்தாலோ உடனே காரின் சிவப்பு விளக்குகள் எரியத் தொடங்கும்.

இதை தான் கோஸ்டிங் என சொல்லப்படுகிறது. இதை நீங்கள் செய்த பிறகு காரை நிறுத்திவிடலாம். இப்படி செய்வதன் மூலம் காரின் மைலேஜ் மட்டுமின்றி அதன் ஆயுளும் கூடுகிறது.

மலை பிரதேசங்களில் நீங்கள் பயணிக்கையில் இறக்கத்தின் போது கோஸ்டிங்கை பயன்படுத்துவது உங்கள் காரின் கட்டுபாட்டை அதிகரிக்கும்.

சக்கரங்கள்

சக்கரங்கள்

காரின் சக்கரங்கள் தான் பயணங்களுக்கான வலிமை. அவற்றின் மீது நாம் அக்கறையை இனி வரும் காலங்களில் அதிகப்படுத்த வேண்டும்.

சீரமைப்பு மற்றும் சமநிலை தருவது தான் சக்கரங்களின் தலையாய பணி, காரை ஓட்டும் பலருக்கு இது நினைவில் இருப்பதில்லை.

சில மோசமான சாலை கட்டமைப்புகள், சக்கரங்களை எளிதில் பழுதாக்கி விடும். இதனால் காரின் சஸ்பென்ஷன் தேவை அதிகமாகி, எஞ்சினின் அழுத்தமும் அதிகரிக்க செய்யும்.

எடை மற்றும் திறனுக்கு ஏற்றவாறு நாம் பயணங்களை மேற்கொண்டால் காரின் செயல்பாட்டை சீராக பராமரிக்கலாம்.

மேலும் மோசமான சாலைகளில் சென்றாலும், அது சக்கரங்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தாது.

நீண்ட தூரப் பயணங்கள்

நீண்ட தூரப் பயணங்கள்

2 கிலோ மீட்டருக்கு குறைவான பயணங்களை காரில் மேற்கொண்டால், அதுவும் எஞ்சினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

காரணம் குறைவான பயணங்கள், எஞ்சினின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறான தட்பவெட்ப நிலையை எப்போதும் தராது.

காரில் எப்போதும் கியர் மாற்றங்களும், கிளட்ச்சின் பிடிமானமும் நடந்துக்கொண்டே இருக்க வேண்டும் அது தான் அதனுடைய ஆயுளுக்கு நல்லது.

தொடர் டிராஃபிக் நிறுத்தங்களும், அருகே அருகே கார் புகையை கக்கிக்கொண்டு நிறுப்பதும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவை கார்களுக்கும் கேடு தான்.

தரமான எரிவாயு

தரமான எரிவாயு

பல பெட்ரோல் பங்குகளில் தரமான எரிவாயுக்கள் விநியோகிக்கப்படுவதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மட்ட ரகமான எரிவாயுக்களால் எஞ்சின் செயல்பாட்டில் கோளாறு ஏற்படும். அதுவும் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான எஞ்சின்கள் உயர் அழுத்தத்தில் இயங்கக்கூடியவை.

அதனால் குறைந்த தரம் உடைய பெட்ரோல்களால் எஞ்சினின் செயல்திறன் கெட்டு, அதை சுக்குநூறாக தெரித்துவிடும் அளவிற்கு தரமற்ற எரிவாயுக்கள் அழித்து விடும்.

அதனால் மலிவான விலையில் கிடைக்கிறதே என்ற எதையாவது பயன்படுத்தாமல், இடம், தரம் அறிந்த நிறுவனங்களின் பெட்ரோலை பயன்படுத்துவது தான் சிறந்தது.

நிதானம் பிரதானம்

நிதானம் பிரதானம்

கியர்களை நிதானமாக கையாள்வது மிகவும் முக்கியம். அதேபோல கியரை மாற்றிய பிறகு கிளாட்சை மெதுவாக வெளிவிடுவதை எப்போதும் சீராக பின்பற்ற வேண்டும்.

கிளட்ச்சை நீங்கள் மிதி மிதி என்று மிதித்தால் அது வாகனத்தின் ஆயுளை குறைக்க வழிவகுக்கும். அதேபோல காரை நிறுத்த மற்றும் ஸ்டார்ட் செய்ய கிளட்ச்சை விரைவாக பயன்படுத்தும் பழக்கத்தையும் கைவிடவேண்டும்.

ஓவர்லோடு உடம்புக்கு ஆகாது

ஓவர்லோடு உடம்புக்கு ஆகாது

முன்பே கூறியது போல, காரில் நாம் பயன்படுத்தும் எடைக்கு ஏற்றவாறு தான் அதனுடைய திறன். எடையை நீங்கள் அதிகரித்துக்கொண்டே போனால், அது சஸ்பென்ஷனுக்கு பெரிய பிரச்சனையாக அமையும்.

ஐந்து பேர் தான் உங்கள் காரில் உட்கார்ந்து பயணிக்க முடியுமானால், 5 பேரை மட்டுமே காரில் ஏற்றி செல்லுங்கள். எடையை கூட்டுவது எப்போது காருக்கு அபாயம் தான்.

நீங்கள் நினைத்தது போல இயங்குவதற்கும், நீங்கள் சொல்வது போல செய்வதற்கும் உங்கள் கார் ஒன்றும் சூப்பர் ஹீரோ அல்ல என்பதை நினைவில் கொள்க.

தோற்றப் பொலிவு

தோற்றப் பொலிவு

காரின் பேனல்களில் நீங்கள் எதாவது உராய்வு, துறு பிடித்தால் அல்லது காரின் பூச்சு உறிந்து வருவது போல தெரிந்தால் அலட்சியம் கொள்ளாதீர்கள்.

உடனே அதற்கான தக்க முயற்சியை எடுங்கள். காரணம் இதுபோன்ற சிறிய சிறிய பாதிப்புகளால் காரின் உதிர்பாகங்கள் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது.

கல், மண், தூசி போன்றவை இந்த வழியின் மூலம் காரின் உள்கட்டமைப்புக்கு சென்று நிரந்தர பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

காரின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் எளிய வழிமுறைகள்

காரை பராமரிக்க நாம் பார்த்த இந்த வழிகள் அனைத்தும் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்தவையாகக் கூட இருக்கலாம்.

ஒருவேளை நீங்கள் அதை மறந்திருந்தால், மீண்டும் நினைவில் கொள்ளவே இந்த எளிய வழிமுறைகளை கூறியுள்ளோம்.

புதியதாக காரை வாங்குபவர்கள், கார் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் தான் அவசியம் இருக்கிறது.

English summary
Cars can be Last to Million Kilometers with goog manintance key practices... Click it for More

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark