இந்த பிரச்னைகள் தெரிந்தால் உடனே கார் பிரேக்கை சரிபார்க்கவும்!

கார் பராமரிப்பில் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம். சமயத்தில் சிறிய அளவில் சப்தம் அல்லது ஓட்டும்போது தெரியும் வித்தியாசங்களை உணர்ந்து கொண்டு காரை பராமரித்தால் விபத்து எனும் ஆபத்திலிருந்து எளிதாக விடுபடலாம்.

குறிப்பாக, காரின் பாதுகாப்புக்கு பிரேக் சிஸ்டம் மிக முக்கியமானது. எனவே, காரின் பிரேக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டால் என்னென்ன ஆரம்ப அறிகுறிகள் தென்படும் என்பதை ஸ்லைடரில் காணலாம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

டிரைவிங் ஸ்டைல், சாலை நிலை, பிரேக் பாகங்களின் தரம் போன்றவற்றை வைத்து இந்த பிரச்னைகள் ஏற்படலாம். பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மெக்கானிக் அல்லது சர்வீஸ் மையத்திற்கு சென்று காரின் பிரேக் சிஸ்டத்தை சோதனை செய்துவிடுங்கள்.

எளிய வழி

எளிய வழி

ஹேண்ட்பிரேக் போட்டிருக்கும்போது எச்சரிக்கை விளக்கு எரிவது சகஜம். ஹேண்ட்பிரேக்கை விலக்கிய பின்னரும் தொடர்ந்து அந்த எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்தால், பிரேக் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதாக அர்த்தம்.

வித்தியாசமான சப்தம்

வித்தியாசமான சப்தம்

பிரேக் பெடலில் அதிர்வுகள் தெரிந்தால் பிரேக் ரோட்டரில் பிரச்னை இருக்கலாம். பிரேக் பிடிக்கும்போது க்ரீச், க்ரீச் என்றும், அல்லது இரு உலோக பட்டைகள் உரசுவது போலவோ சப்தம் வந்தால் பிரேக் பேடுகள் தேய்மானம் ஏற்பட்டிருக்கலாம். இதனை கவனிக்காமல் விட்டால், இதர முக்கிய பாகங்களையும் பாதித்து, ரிப்பேர் செலவு பன்மடங்கு கூடிவிடும்.

ஒருபக்கம் இழுத்தல்

ஒருபக்கம் இழுத்தல்

பிரேக் பிடிக்கும்போது காரின் ஒருபக்கம் லேசாக இழுப்பது போன்று உணர்ந்தால், பிரேக் பவர் இருபுறத்துக்கும் சரியாக செல்லவில்லை அல்லது ஏதாவது ஒரு பிரேக் லைனிங்கில் பிரச்னை இருக்க வாய்ப்புண்டு. காலிபர்கள் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்னை எழும். மேலும், டயரின் தேய்மானத்தை பொறுத்தும் இதுபோன்று பிரச்னை வர வாய்ப்புண்டு.

பெடல் அட்ஜெஸ்ட்

பெடல் அட்ஜெஸ்ட்

சில சமயம் பிரேக் பிடிப்பதற்கு பெடலை முழுவதுமாக கடைசி வரை அழுத்த வேண்டியிருக்கும். இது ஹைட்ராலிக் சிஸ்டத்தில் காற்று கசிவு இருந்தால் இதுபோன்ற பிரச்னை எழும். பிரேக்க் பெடல் மென்மையாக இல்லாமல் அழுத்துவதற்கு சிரமமாக இருந்தாலும் பிரேக்கில் பிரச்னை இருப்பதாக கணிக்கலாம். . ஹைட்ராலிக் சிஸ்டத்தில் காற்று கசிவு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். இல்லையெனில், பிரேக் பூஸ்டரை மாற்ற வேண்டியிருக்கும். மேலும், பிரேக் ஃப்ளூயிட் ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலும், பெடலை அழுத்துவதற்கு சிரமமாக இருக்கும். இதேபோன்று, பிரேக் லைனிங் தேய்மானம் இருக்கிறதா என்பதையும் பரிசோதித்து விடுங்கள்.

கவனம்

கவனம்

பிற பராமரிப்பு பணிகளை விட பிரேக் சிஸ்டத்தை சரியான இடைவெளிகளில் பராமரிப்பது அவசியம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை பிரேக் லைனிங் உள்ளிட்ட பிரேக் பாகங்களை சோதிப்பது அவசியம்.

 
Most Read Articles

English summary
Brakes are a normal wear item on any vehicle and they will eventually need to be replaced. Factors that can affect brake wear include driving habits, operating conditions, vehicle type and the quality of the brake lining material.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X