இந்த வீடியோ பார்த்த பிறகும் பைக்ல வேகமாக போவீங்க?

அதிவேகத்தில் பைக் ஓட்டும்போது கண் குருடு ஏற்படுவதை விளக்கும் வீடியோ மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வாகனங்களில் அதிவேகத்தில் செல்லும்போது கண்களில் ஏற்படும் பார்வை திறன் குறைபாடு பற்றி இந்த செய்தியும், வீடியோவும் விளக்குகிறது.

அதிவேகத்தில் பைக்கில் செல்லும்போது ஏற்படும் பார்வை திறன் குறைவு தன்மை!

வாகனங்களில் அதிவேகத்தில் செல்வது ஆபத்தும், அபாயத்தையும் ஏற்படுத்தும் என்பது தெரிந்த சங்கதித்தான். ஆனால், அதற்கான ஆழமான காரணியை விளக்கும் வகையில், இந்த வீடியோ அமைந்துள்ளது.

அதிவேகத்தில் பைக்கில் செல்லும்போது ஏற்படும் பார்வை திறன் குறைவு தன்மை!

ஆம், வாகனங்களில் அதிவேகத்தில் செல்லும்போது கண்கள் பார்வை திறன் குறைபாட்டை பெறுகிறது. இதனால், சாலையில் பக்கவாட்டில் இருந்து சாலையில் நுழையும் விலங்குகள், மனிதர்களை நம் கண்கள் எளிதாக அடையாளம் காண முடிவதில்லை.

அதிவேகத்தில் பைக்கில் செல்லும்போது ஏற்படும் பார்வை திறன் குறைவு தன்மை!

இதனை ஸ்பீடு பிளைண்ட் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். அதாவது, வேக குருடு என்று குறிப்பிடப்படும் இந்த விஷயத்தில் எந்தளவு அபாயம் இருக்கிறது என்பதை செய்தியில் இறுதியில் உள்ள வீடியோவின் மூலமாக உணர்ந்து கொள்ள முடியும்.

அதிவேகத்தில் பைக்கில் செல்லும்போது ஏற்படும் பார்வை திறன் குறைவு தன்மை!

உதாரணத்திற்கு, வேகம் அதிகரிக்க அதிகரிக்க சாலையின் பக்கவாட்டு பகுதிகளை கண்காணிக்கும் திறனையும், கண்டறியும் திறனையும் கண்கள் இழந்து விடுகின்றன.

அதிவேகத்தில் பைக்கில் செல்லும்போது ஏற்படும் பார்வை திறன் குறைவு தன்மை!

முதன்மை பார்வை திறன் மட்டுமே இருக்கும் நிலையில், புற பார்வை திறன் இல்லாத நிலை ஏற்படும். ஓட்டுனரின் கண்களுக்கு சாலை ஒரு குகையை பார்ப்பது போலவே பார்வை திறன் இருக்கும். இதனை ஸ்பீடு டனல் என்று குறிப்பிடுகின்றனர்.

அதிவேகத்தில் பைக்கில் செல்லும்போது ஏற்படும் பார்வை திறன் குறைவு தன்மை!

இதனால், சாலைக்குள் அல்லது சாலையின் குறுக்கே வரும் விலங்குகள், பாதசாரிகள் மற்றும் வாகனங்களை ஓட்டுபவர் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது.

அதிவேகத்தில் பைக்கில் செல்லும்போது ஏற்படும் பார்வை திறன் குறைவு தன்மை!

குறிப்பாக, அதிவேகத்தில் பைக் ஓட்டுபவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், விபத்து ஏற்படுவதற்கும் முதன்மையான காரணமாக அமைகிறது.

அதிவேகத்தில் பைக்கில் செல்லும்போது ஏற்படும் பார்வை திறன் குறைவு தன்மை!

மணிக்கு 100 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும்போது பைக் ஓட்டிகளுக்கு இந்த பாதிப்பை மெல்ல அதிகரித்து, அதிவேகத்தில் செல்லும்போது பார்வை திறன் இழப்பை ஓட்டுனர்கள் பெறுவார்கள் என்கிறது இந்த வீடியோ.

Trending On DriveSpark Tamil:

அதிவேகத்தில் பைக்கில் செல்லும்போது ஏற்படும் பார்வை திறன் குறைவு தன்மை!

எனவே, பைக் ஓட்டும்போது நிதானமான வேகத்தில் செல்வது பாதுகாப்பளிக்கும். ரேஸ் டிராக்குகளில் ஓட்டுவது போல ஓட்டினால் அது நிச்சயம் விபத்தில்தான் முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

அதிவேகத்தில் செல்லும்போது ஏற்படும் கண் குருடு தன்மையை விளக்கும் வீடியோவை காணலாம்.

Most Read Articles
English summary
Motion Induced Blindness While Driving.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X