Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 7 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 9 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோட்டருக்கும் இன்ஜினிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
நாம் வீடுகளில் பயன்படுத்தும் மோட்டாரும், கார்/ பைக்குகளின் இன்ஜினும் ஒரே மாதிரியான தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. இத முற்றிலும் தவறு அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.

பொதுவாக அறிவியலில் மோட்டார் என்பது கைனட்டிக் எனர்ஜியை வெளிப்படுத்தக்கூடியது. அதன்படி பார்த்தால் இன்ஜினும் அதை தான் செய்கிறது. ஆனால் இன்ஜின் நகர்வை ஏற்படுத்தக்கூடியது. மோட்டர் அசைவை ஏற்படுத்தாது.

மோட்டார்
மோட்டார் என்பது எலெக்ட்ரிக்கல் பவரை மெக்கானிக்கல் பவராக மாற்றுகிறது. இதில் ஏ.சி. மோட்டார் டி.சி மோர்டார் என இரு வகைகள் உள்ளன. அதாவது மோட்டாருக்கு வழங்கப்படும் கரெண்ட் ஏ.சி. கரெண்டாக இருந்தால் ஏசி மோட்டார் , டிசி. கரெண்டாக இருந்தால் டிசி மோட்டார். இவ்விரு மோட்டாரையும் குதிரை திறன், பவர், உள்ளிட்ட விஷயங்களை பிரிக்கலாம்.

இன்ஜின்
இன்ஜின் என்பது ஏதேனும் ஒரு எனர்ஜினை மெக்கானிக்கல் பவராக மாற்றுவது தான் ஆனால் இது இன்ஜினை பொருத்து எந்த எனர்ஜியை மெக்கானிக்கல் எனர்ஜியாக மாற்றகிறது என்பது மாறுபடும். அதாவது கம்பஷன் இன்ஜின்களில் ஹீட் மெக்கானிக்கல என்ர்ஜியாக மாற்றப்படுகிறது.

ஹைட்டராலிக் இன்ஜினில் பியூயல் பிரஷர் மெக்கானிக்கல் எனர்ஜியாக மாற்றப்படுகிறது. எலெட்ரிக்கல் இன்ஜினில் எலெரிக்ட்ரிக்கல் பவர் மெக்கானிக்கல் எனர்ஜியாக மாற்றப்படுகிறது.

மோட்டர் - இன்ஜின் பாகங்கள்
இவ்விறு இயந்தரங்களிலும் பாகங்கள் முற்றிலும் மாறுபடும். இன்ஜினில் சிலிண்டரும் பிஸ்டனும் இருக்கும். எரிபொருள் எரிவதால் ஏற்படும் வெப்பத்தில் பிஸ்டன் நகரும்.

மோட்டாரில் ரோட்டர் , ஸ்டேட்டார் என்ற இரண்டு பாகங்கள் தான்முக்கியம். இதில் மின்சாரம் வந்தவுடன் ஏற்படும் காந்த விசை மாற்றத்தால் ரோட்டர் சுற்ற துவங்கும்.

வித்தியாசங்கள்
இன்ஜின்: இது எரிபொருளை எரித்து ஏற்படக்கூடிய சூட்டினாலோ, அல்லது சுடாக உள்ள ஸ்டீரீம்களிலாலோ வேலை செய்வது.
மோட்டார்: இது தானா சுற்றும் பொருள். தற்போது வீடுகளில் தண்ணீருக்காக உள்ள மோட்டாரை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்ஜின் : கெமிக்கல் எனர்ஜியை மெக்கானிக்கல் எனர்ஜியாக மாற்றக்கூடியது.
மோட்டார் : எலெக்ட்ரிக்கல் எனர்ஜியை மெக்கானிக்கல் எனர்ஜியாக மாற்றக்கூடியது.
இன்ஜின்: எரிபொருளை கொண்டு இயங்க்கூடியது.
மோட்டார்: கரெண்ட் அல்லது பேட்டரி கொண்டு இயங்கக்கூடியது.

இன்ஜின்: சிலிண்டரும் பிஸ்டனும் தான் முக்கியமான பாகங்கள்.
மோட்டார்: காயிலும் ரோட்டாரும் தான் முக்கியமான பாகங்கள்
இன்ஜின் : உராய்வுக்காக ஆயில் போன்ற தன்மையுள்ள பொருள் தேவை

மோட்டார்: எந்த ஆயில் போன்ற பொருளும் தேவையில்லை.
இன்ஜின்: மோட்டாரை விட அதிக பவரை கொண்டது.
மோட்டார்: இன்ஜினை விட குறைவான பவரை கொண்டது.

இன்ஜின்: அதிக சத்தம் எழுப்பக்கூடியது.
மோட்டார்: இன்ஜினை காட்டிலும் குறைவான சத்தம் தான் வரும்.