காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

By Saravana

கார் மார்க்கெட்டில் அதிகரித்துள்ள போட்டியை சமாளிக்க வாடிக்கையாளர்களை மதி மயக்கும் வித்தைகள் டீலர்களில் இருக்கும் விற்பனையாளர்களுக்கு கைவந்த கலை. ஓடாத காரை ஓட்டுவதற்கும், இல்லாத பொய்களை சொல்லி தலையில் கட்டுவதிலுமே பல டீலர்களில் உள்ள விற்பனை பிரதிநிதிகள் குறியாக இருப்பதை காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, மாதக் கடைசியில் விற்பனை இலக்கை கடப்பதற்காக கூடுதல் பொய்களும் வந்துவிழுவதுண்டு.

கார் ஷோரூம்களுக்கு செல்லும்போது அதிகம் விற்பனையாகும் கார்களுக்கு டீலர்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதற்கு நேர்மாறாக ஓடாத கார்களை தள்ளுவதிலேயே குறியாக இருப்பர். அந்த கார்களை பற்றி டீலர் பிரதிநிகள் அளப்பதை நம்பி ஏமாந்து போகும் வாடிக்கையாளர்கள் ஏராளம். எனவே, கார் வாங்கும்போது டீலர்களில் எச்சரிக்கையாக இருப்பதற்காக சில விஷயங்களை கொடுத்துள்ளோம்.

விலையேறப்போவுது...

விலையேறப்போவுது...

ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை கார் விலை உயர்த்தப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், சில சமயம் ஷோரூம்களில் அமர்ந்து விலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை திசை திருப்புவதற்காக, கார் விலை விரைவில் உயரப் போகிறது என்ற பிட்டை போடுவர். எனவே, உடனடியாக முன்பதிவு செய்து கொள்வது நல்லது என்று பீதியை கிளப்பும் சம்பவங்களும் நடந்து வருகிறது. விற்பனை பிரதிநிதி சொன்னதை நம்பி அவசரப்படாமல், உண்மையிலேயே விலை உயர்வு அமலுக்கு வர இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

நீண்ட காத்திருப்பு காலம்...

நீண்ட காத்திருப்பு காலம்...

சில ஷோரூம்களில் கார் வாங்கும் நோக்கத்தில் வாடிக்கையாளர்கள் இருப்பதை தெரிந்துகொண்டால், 2 வாரத்தில் காரை டெலிவிரி கொடுத்து விடுகிறோம் என்று கூறி ஏமாற்றுவதும் உண்டு. நீங்களும் கார் விரைவாக கிடைக்கப் போகிறது என்ற கற்பனையில் வீட்டிற்கு சென்றால், 2 வாரங்கள் அல்ல 4 வாரங்கள் கடந்தாலும், லோடு வந்து கொண்டிருக்கிறது என்று ஏதாவது ஒரு சமாளிப்பு பதில் கிடைக்கும். பல தடவை தொங்கிய பின்பு ஒரு வழியாக காரை டெலிவிரி தருவார்கள். அதுவும் வாடிக்கையாளர்களின் பின்புலத்தை அனுமானித்து டெலிவிரி கொடுப்பர். அதேவேளை, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது ஆன்லைனில் முன்பதிவு மற்றும் டெலிவிரி டிராக்கிங் சிஸ்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது காத்திருப்பு நிலையை தெரிந்து கொள்ளும் வசதியை வழங்குகின்றன. ஆன்லைனில் பார்க்க முடியாதவர்கள் டீலர் பற்றி பிற வாடிக்கையாளர்கள் அல்லது நட்பு வட்டத்தில் ஒரு விசாரணை செய்து கொள்வது நலம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

 ஆக்சஸெரீஸ்கள் கட்டாயமா?

ஆக்சஸெரீஸ்கள் கட்டாயமா?

டீலர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் ஆக்சஸெரீஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, பல டீலர்களில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களை இன்வாய்ஸில் இணைத்து விற்பனை செய்கின்றனர். சில டீலர்களில் வெளியில் ஆக்சஸெரீஸ் வாங்கி பொருத்தினால் வாரண்டி கிடைக்காது என்று பயமுறுத்தி தங்களது ஆக்சஸெரீஸ்களை விற்கின்றனர். குறிப்பாக, ஸ்கஃப் பிளேட், மிதியடிகள் உள்ளிட்டவை வெளி மார்க்கெட்டில் மிகக் குறைந்த விலையில் ஏராளமாக கிடைக்கின்றன. இதேபோன்று, மியூசிக் சிஸ்டமும் அதிக விலை வைத்து விற்கப்படுகின்றன. ஆனால், வெளி மார்க்கெட்டில் நீங்கள் நினைத்ததைவிட ஏராளமான மாடல்களில் மியூசிக் சிஸ்டம்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன.

சூப்பர் இன்ஸ்யூரன்ஸ்

சூப்பர் இன்ஸ்யூரன்ஸ்

காருக்கு ஒருங்கிணைந்த காப்பீடு போட வேண்டியது அவசியம். பல டீலர்களில் இதுதான் சிறப்பான காப்பீட்டு திட்டம் என்று கூறி குறிப்பிட்ட நிறுவனத்தை பரிந்துரை செய்வது வழக்கம். இதுபோன்று பரிந்துரை செய்யப்படும் காப்பீட்டு திட்டங்களின் பின்னணியில், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் கார் டீலர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு கூடுதல் பிரிமியத்துடன் கூடிய காப்பீட்டு திட்டங்களை நம் தலையில் கட்டுவதற்கு முனைகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மார்க்கெட்டில் இருக்கும் சிறந்த காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்து கொள்வது அவசியம். இதேபோன்று, கடனுதவி தரும் நிறுவனங்களை தேர்வு செய்யும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.

 நீட்டிக்கப்பட்ட வாரண்டி

நீட்டிக்கப்பட்ட வாரண்டி

குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை கார்களுக்கு வாரண்டி கிடைக்கின்றன. இத்துடன் சேர்த்து நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களை வாங்கிக் கொள்வது நல்லதுதான். இல்லையென்று கூறவில்லை. ஆனால், சில டீலர்களில் நீட்டிக்கப்பட்ட வாரண்டியை வாங்குவதற்கு காருடன் வாங்குவது போன்ற மாயை ஏற்படுத்துகின்றனர். ஆனால், கார் வாங்கும்போது நீட்டிக்கப்பட்ட வாரண்டியை வாங்குவது அவசியமில்லை என்பதே உண்மை. கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு பின்னர் அவர்களிடம் பேரம் பேசி வாங்குவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரீசேல் மதிப்பு

ரீசேல் மதிப்பு

விற்பனையில் பின் தங்கி ஷோரூம்களில் நிற்கும் மாடல்களை இதற்கு அதிக ரீசேல் மதிப்பு இருக்கிறது என்று கூறி நம் தலையில் கட்டும் முயற்சிகளும் ஆங்காங்கே நடக்கின்றன. எனவே, அது உண்மைதானா என்று தெரிந்து கொண்டு வாங்குவதும் நலம்.

 கலர் தேர்வு

கலர் தேர்வு

சில குறிப்பிட்ட கார் கலருக்கு அதிக டிமான்ட் இருக்கும். சில கலர் கொண்ட கார்கள் டீலர்களில் இருப்பில் தேங்கி இருக்கும். எனவே, இருப்பில், தேங்கி இருக்கும் காரை தள்ளும் விதமாக, அதிக டிமான்ட் இருக்கும் கலர் அல்லது நீங்கள் விரும்பி கேட்கும் கலரை ஸ்டாக் இல்லை என்று கூறிவிடுவர். மேலும், தற்போது கிடைக்காது என்பதோடு, அதற்கு வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு காத்திருப்பு காலத்தை சொல்லிவிடுவர். அப்படியே, விற்பனை பிரதிநிதி சொல்லும் காரை வாங்கும்போது தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை சரிபார்த்து வாங்குவது நலம்.

தள்ளுபடி சலுகைகள்

தள்ளுபடி சலுகைகள்

பல டீலர்களில் தள்ளுபடி சலுகைகள் குறித்து விமரிசையாக விளம்பரம் செய்வதோடு, ஷோரூம்களிலும் விலாவரியாக சொல்வார்கள். ஆனால், இந்த சலுகைகளை வேறு விதத்தில் அட்ஜெஸ்ட் செய்வதும் உண்டு. எனவே, கார் வாங்கும்போது தள்ளுபடி சலுகைகள் விபரத்தை நன்கு தெரிந்துகொண்டு, ஏதெனும் உள்குத்தல் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nasty Car Dealers Tricks You Need Know Before Buying Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X