கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்

சாலை மார்க்கமாக தொலை தூர பயணங்களை மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. குறிப்பாக காரை ஓட்டுபவர்களுக்கு இது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சண்டைக்கு வரும் மற்ற வாகன ஓட்டிகள் என நிறைய பிரச்னைகளை கார் டிரைவர்கள் (Car Drivers) எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன் காரில் வரும் மற்ற பயணிகளை போல், டிரைவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காது. எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். இவற்றுடன் இலவச இணைப்பாக கழுத்து வலி (Neck Pain) என்ற பிரச்னையையும் கார் டிரைவர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. ஆம், தொலை தூர பயணங்களின்போது கார் டிரைவர்களுக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்படும். அதற்கான காரணங்கள் என்ன? இந்த பிரச்னையை எப்படி தவிர்ப்பது? என்பது போன்ற விஷயங்களை எல்லாம்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்

கார் ஓட்டும்போது கழுத்து வலி ஏற்படுவதை தவிர்ப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக, கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலி ஏற்படுகிறது? என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும். இதன் மூலமாக கழுத்து வலியை ஏற்படுத்தும் விஷயங்களை நீங்கள் தவிர்த்து விட முடியும். கார் ஓட்டும்போது கழுத்து வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு:

நீண்ட நேரம் அமர்ந்திருந்தால்...

தொலை தூர பயணங்களின்போது நீங்கள் நீண்ட நேரம் டிரைவர் இருக்கையிலேயே அமர்ந்திருப்பீர்கள். இதன் காரணமாக, உங்கள் காரின் இருக்கை எவ்வளவு சௌகரியமானதாக இருந்தாலும், கழுத்து வலி ஏற்படும். நீங்கள் எவ்வளவு நேரம் இருக்கையிலேயே உட்கார்ந்துள்ளீர்களோ, அதே அளவிற்கு உங்கள் முதுகுதண்டில் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக முதுகு வலி மற்றும் தோள்பட்டை வலி ஆகியவற்றுடன், உங்களுக்கு கழுத்து வலியும் ஏற்படும்.

கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்

சீட் சரியான ஆங்கிள்ல இல்லேனா...

நீண்ட நேரம் அமர்ந்து கார் ஓட்டி கொண்டிருந்தால், எப்பேர்பட்ட சொகுசான இருக்கையும் கூட உங்களுக்கு கழுத்து வலியை ஏற்படுத்தி விடும். ஆனால் உங்கள் கார் இருக்கை தவறான கோணத்தில் இருக்கிறது என்றால், கழுத்து வலி வெகு விரைவாகவே வந்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். எனவே கார் ஓட்டும்போது டிரைவர் இருக்கை சரியான கோணத்தில் இருக்கும்படி பார்த்து கொள்வது அவசியம்.

மன அழுத்தமும் ஒரு காரணமா!

கார் ஓட்டுவது என்பது நிறைய பேருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடிய விஷயங்களில் ஒன்றாகும். கார் ஓட்டும்போது ஏற்படும் இந்த மன அழுத்தமானது கழுத்தை விறைப்பாக்கி விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவும் கழுத்து வலி உண்டாகிறது. அத்துடன் உங்கள் பயணத்தின்போது சிறு விபத்துக்கள் நடந்தால் கூட, அதுவும் கழுத்து வலிக்கு காரணமாகலாம். எனவே காரை கவனமாக ஓட்டுங்கள்.

எப்படி தவிர்ப்பது?

கார் ஓட்டும்போது கழுத்து வலி ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமென்றால், சீரான இடைவெளிகளில் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். இது கழுத்து வலி ஏற்படுவதை தவிர்ப்பதுடன், சோர்வு காரணமாக சாலை விபத்துக்கள் நிகழ்வதையும் தடுக்கும். அதேபோல் முடிந்தவரை அனைத்து நேரங்களிலும் ரிலாக்ஸாக இருங்கள். அத்துடன் உங்கள் டிரைவிங் பொஷிஷன் சரியாக இருப்பதும் அவசியம். உங்கள் காரின் இருக்கையானது, 90-100 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும்.

ஆனால் நம் ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. எனவே உங்களுக்கு ஏற்ற சீட் ஆங்கிளை நீங்களே கண்டுபிடிப்பதுதான் சிறந்தது. 10 மற்றும் 2 ஆகிய பொஷிஷன்களில் ஸ்டியரிங் வீலை பிடித்து காரை ஓட்ட வேண்டும் என டிரைவிங் ஸ்கூல்களில் சொல்லி தந்திருப்பார்கள். அதாவது உங்கள் ஸ்டியரிங் வீல் ஒரு கடிகாரம் என்றால், 10 மற்றும் 2 ஆகிய எண்கள் இருக்கும் இடங்களில் உங்கள் கைகள் இருக்க வேண்டும். இதுதான் உண்மையிலேயே ஸ்டியரிங் வீலை பிடிக்கும் பாதுகாப்பான முறை.

வளைவுகளில் திரும்பும்போதும், பார்க்கிங் செய்யும்போதும் ஸ்டியரிங் வீலை கையாள்வதை இது எளிமையாக்குகிறது. ஆனால் தொலை தூர பயணங்களின்போது நீங்கள் பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வீர்கள் என்பதால், வளைவுகளில் அதிகமாக பயணம் செய்ய வேண்டியிருக்காது. எனவே ஸ்டியரிங் வீலை பிடிக்கும் முறையில் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். அதாவது 8 மற்றும் 4 ஆகிய பொஷிஷனில் நீங்கள் ஸ்டியரிங் வீலை பிடித்து கொள்ளுங்கள். ஸ்டியரிங் வீலில் கை கொஞ்சம் கீழாக இருந்தால், கழுத்து வலியுடன், தோள்பட்டை வலியையும் தவிர்க்க முடியும்.

Most Read Articles
English summary
Neck pain car driving reasons tips avoid
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X