விபத்தில்லா பெருவாழ்வு... வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய புத்தாண்டு சபதம்!

வாகன ஓட்டிகள் புத்தாண்டிலிருந்து விட வேண்டிய கெட்ட பழக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்க வழக்கங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

புத்தாண்டு பிறக்கும்போது தங்களிடம் உள்ள கெட்ட பழக்க, வழக்கங்களை கைவிடுவதாக பலரும் சபதம் செய்வதை பார்க்க முடிகிறது. அவ்வாறு, விபத்தில்லா பெருவாழ்விற்கும், மகிழ்ச்சியான பயணங்களுக்கும் புத்தாண்டில் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

கைக்கு ஒரு மொபைல்போன் இருந்தது போக, இப்போது இரண்டு மூன்று மொபைல்போன்கள் சர்வசாதாரணமாக புழங்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

அதேநேரத்தில், கார் ஓட்டும்போது மொபைல்போனில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்ப்பேன் என்று உறுதி பூண்டுவிடுங்கள்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

இது உங்களது உயிருக்கே ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும் விஷயம் என்பதை மறவாதீர்கள். அவசியம் பேச வேண்டிய நிலை ஏற்படும்போது, சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு மொபைல்போனில் பேசுங்கள். சில நிமிட கால விரயத்தால் உங்களது உயிருக்கு உலை வைத்து விடாதீர்கள்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

காரில் ஏறியவுடன் சீட் பெல்ட் அணிவதையும், இருசக்கர வாகனங்களை எடுக்கும்போது ஹெல்மெட் அணிந்து செல்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

கார், பைக்கில் அலுவலகம் கிளம்பும்போது வழக்கத்தைவிட 10 நிமிடங்கள் முன்னதாக கிளம்புவதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். இதன்மூலமாக, பல தேவையற்ற பிரச்னைகளையும், பதட்டத்தையும் தவிர்க்க முடியும்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

மது அருந்திவிட்டு இனி வாகனம் ஓட்ட மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது உயிருக்கும், சாலையில் வரும் பிறரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மது அருந்தியிருந்தால், வாடகை காரை பயன்படுத்துங்கள்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

துஷ்டரை கண்டால் தூர விலகு என்பதுபோல், சாலையில் முரட்டுத்தனமாக கார், பைக் ஓட்டுபவர்களுக்கு வழி விட்டு விடுங்கள். அவர்களுடன் போட்டி போடாதீர்கள். இந்த மனக் கட்டுப்பாட்டை இன்று முதல் கடைபிடிப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

சாலையில் வரும் இதர வாகன ஓட்டிகளிடம் தேவையற்ற வம்பு செய்வதை இன்றுடன் விட்டுவிடுவதாக சபதம் செய்யுங்கள். பிற வாகன ஓட்டிகளை புன்னகையுடன் அணுக பழகிக் கொள்ளுங்கள்.

Trending On Drivespark:

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

சரியான தடத்தில் வாகனத்தை இயக்குவேன் என்று சபதமிட்டுக் கொள்ளுங்கள். நெடுஞ்சாலைகளில் தாறுமாறாக செல்வதை கைவிட்டுவிடுங்கள். சமிக்ஞை செய்து ஓவர்டேக் செய்யுங்கள்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

சாலை விதிகளை மதிப்பதற்கு உறுதி செய்து கொள்ளுங்கள். சிக்னல் ஜம்ப், தாறுமாறாக ஓட்டி பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்துதல், பொது சாலையில் ரேஸ் அடிப்பது உள்ளிட்ட கெட்ட பழக்கங்களை இன்றோடு ஒழித்து கட்டுங்கள்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

இந்த புத்தாண்டு முதல் சீரான வேகத்தில் வாகனத்தை இயக்குவேன் என்று சபதம் செய்து கொள்ளுங்கள். அதிக எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பு, மன அழுத்தமற்ற ஓட்டுதல் சுகத்தை வழங்கும். அதிவேகத்தில் இயக்குவதை தவிர்க்க பழகி கொள்ளுங்கள்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

உங்களுக்கும், உங்களது காருக்கும் சரியான காலத்தில் பரிசோதனை செய்வது அவசியம். கார் ஓட்டுவதற்கு உங்கள் ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டது என்பதால், உடல் நல பரிசோதனை செய்வது அவசியம்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

உங்களது காருக்கு தயாரிப்பாளர் பரிந்துரைத்த குறித்த கால இடைவெளியில் சர்வீஸ் செய்வது அவசியம். வரும் முன் காப்பதுதான் புத்திசாலித்தனம்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டுவதை அறவே தவிர்க்கவும். வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் இதர முக்கிய ஆவணங்கள் இல்லாமல் கார் ஓட்டுவதால், நீங்கள் நினைப்பதைவிட அதிக அளவிலான சிக்கலில் உங்களை மாட்டிவிட்டு விடும்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

எப்போதுமே காரை எடுப்பதற்கு முன்னர் முதலில் சரிபார்க்க வேண்டியது, டயர்களில் காற்றழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதுதான். மாதத்திற்கு இருமுறை டயரில் காற்றழுத்தம் சரிபார்ப்பதை வழக்கமாக வையுங்கள். தேய்மானம் அடைந்த டயர்களை இன்றே மாற்றிவிடுங்கள்.

வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய 'புத்தாண்டு சபதம்'!

இந்த சிறிய விஷயங்களை மனதில் வைத்தால், இந்த புத்தாண்டு மட்டுமல்ல, எல்லா ஆண்டுகளும் இனிமையான பயண அனுபவங்களை தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Trending On Drivespark:

Most Read Articles
English summary
New Year Resolutions Worth Keeping While Driving Or Riding.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X