ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

ஃபார்முலா-1 உள்ளிட்ட பந்தயங்களில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்ப வகை கார்களுக்காக உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் பல தொழில்நுட்பங்கள் மெல்ல சாதாரண கார்களிலும் ஆக்கிரமித்து வருகின்றன. அந்த வகையில், அதிவேக கார்களை ஓட்டுபவர்களுக்கு சிறந்த வசதியையும், பாதுகாப்பையும் வழங்கும் ஒரு தொழில்நுட்பமாக உருவாக்கப்பட்ட பேடில் ஷிஃப்ட் வசதி மாறி இருக்கிறது.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

பேடில் ஷிஃப்ட் வசதி இப்போது இந்தியாவில் விற்பனையாகும் சாதாரண வகை கார்களிலும் வழங்கப்படுகின்றன. இந்த பேடில் ஷிஃப்ட் வசதி செயல்படும் விதம் மற்றும் நன்மைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

அதிவேகமாக செல்லும் ரேஸ் கார்களில் கியர் மாற்றும்போது ஏற்படும் ஓட்டுனர்கள் ஸ்டீயரிங் வீலை விட்டு கையை எடுக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்பு இருந்தது. அதேபோன்று, ஓட்டுனரின் கவனக் குறைவு ஏற்படவும், கால விரயமும் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் ஸ்டீயரிங் வீலில் ஓட்டுனர் எளிதாக கியர் மாற்றும் வசதியை வழங்குவதற்காக பேடில் ஷிஃப்ட் வசதி உருவாக்கப்பட்டது.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

க்ளட்ச் இல்லாமல் இயங்கும் ஏஎம்டி வகை மேனுவல் கியர்பாக்ஸ் கார்களிலும் இந்த பேடில் ஷிஃப்ட் வசதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ரேஸ் கார்களில்

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

கூட பேடில் ஷிஃப்ட் வசதி கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த ரேஸ் கார்களில் விசேஷ க்ளட்ச் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டது. கார்களை கிளம்பும்போது, நிறுத்தும்போதும் மட்டுமே க்ளட்ச் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதால், பேடில் ஷிஃப்ட் வசதி சாத்தியமானது.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

பொதுவாக ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது கார் ஓட்டுனர் எண்ண ஓட்டத்திற்கு தக்கவாறு பிக்கப் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. இதனை தவிர்க்க, சரியான எஞ்சின் சுழல் வேகத்தில் பேடில் ஷிஃப்டர்களை பயன்படுத்தி கியர்களை கூட்டிக் குறைக்கும் வாய்ப்பை ஓட்டுனர் பெற முடியும்.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

மேனுவல் கியர் கார்களில் லிவரை ஒரு கியரிலிருந்து நியூட்ரலுக்கு கொண்டு வந்து எந்த கியருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், பேடில் ஷிஃப்ட் வசதி மூலமாக ஒரு கியரிலிருந்து மற்றொரு கியருக்கு கூட்டுவதற்கு அல்லது குறைப்பதற்கான வாய்ப்பு மட்டுமே கிடைக்கும்.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

பேடில் ஷிஃப்ட் பயன்படுத்தும்போது ஓட்டுனர் தனது விருப்பம்போல் காரின் செயல்திறனை உடனடியாக வெளிக்கொண்டு வந்து உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை பெறும் வாய்ப்பை பெற முடியும்.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

குறிப்பாக, ஏற்றமான மலைச்சாலைகள், வளைவுகளில் திரும்பும்போது காரின் வேகத்தை எளிதாக கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த பேடில் ஷிஃப்ட் மூலமாக பெற முடியும்.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

அடுத்து, ஈரப்பதமான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பேடில் ஷிஃப்ட் மூலமாக இயக்கும்போது கார் அதிக தரைப்பிடிப்புடன் இயக்குவதற்கான வாய்ப்பை ஓட்டுனர் பெற முடியும்.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

மேலும், கார் வேகமாக செல்லும்போது விரைவாக கியரை குறைப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதால் எளிதாக கட்டுப்படுத்த முடியும். இதனால், கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

ஆட்டோமேட்டிக் கார்களில் பேடில் ஷிஃப்ட் பயன்படுத்தி மேனுவலாக கியர்களை மாற்றுவதால் மைலேஜ் கூடுதலாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிவிக்கப்படுகிறது. அதாவது, ஆட்டோமேட்டிக் கார்களுக்கான தொழில்நுட்பத்தை இந்த பேடில் ஷிஃப்ட் கட்டுப்படுத்தி செயல்படுவதால், மைலேஜில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது.

 ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

ஹோண்டா சிட்டி சிவிடி, ஹோண்டா அமேஸ் சிவிடி, டொயோட்டா யாரிஸ் சிவிடி, ஹூண்டாய் க்ரெட்டா டிசிடி, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களின் ஆட்டோமேட்டிக் மாடல்களில் பேடில் ஷிஃப்ட் வசதி கொடுக்கப்படுகிறது. எனவே, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார் தேர்வு செய்யும்போது இந்த பேடில் ஷிஃப்ட் வசதி குறித்து ஒரு விசாரணை போட்டு தேர்வு செய்வது கூடுதல் மதிப்பையும், நன்மைகளையும் வழங்கும்.

Most Read Articles

English summary
Here are some important things about paddle shifters use and benefits.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X