ஆபத்தை விளைவிக்கும் கார் ஆக்சஸெரீஸ்களின் லிஸ்ட்!

இன்றைய காலக்கட்டத்தில் காரில் கூடுதல் ஆக்சஸெரீஸ் மற்றும் அலங்காரப் பொருட்களை பொருத்துவதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். காரின் விலையில் பாதி விலை கூட கொடுத்து கூடுதல் ஆக்சஸெரீஸ் மற்றும் அழகுசாதனம் மற்றும் அலங்காரங்களை செய்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் ஒரு புது ஆக்சஸெரீயை வாங்கி மாட்டிவிட வேண்டும் அல்லது அழகுபடுத்த வேண்டும் என்று பலர் திட்டம் போட்டும் அலங்கரிக்கின்றனர். ஆனால், அதுபோன்று பொருத்தப்படும் கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் சில நேரங்களில் ஆபத்தை விளைவிக்கும் பொருளாக மாறிவிடுகிறது. இன்றைக்கு சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படும் சில ஆக்சஸெரீஸ்களில் இருக்கும் ஆபத்துக்களை இந்த செய்தித் தொகுப்பு விவரிக்கிறது.

ஆக்சஸெரீஸ் லிஸ்ட்

ஆக்சஸெரீஸ் லிஸ்ட்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் ஆபத்தை விளைவிக்கும் கார் ஆக்சஸெரீஸ்களை காணலாம்.

சஸ்பென்ஷன் லிஃப்ட்

சஸ்பென்ஷன் லிஃப்ட்

குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்கள், எஸ்யூவிகளில் தரை இடைவெளியை கூட்டுவதற்காக சஸ்பென்ஷனில் லிஃப்ட் கிட் பொருத்துகின்றனர். இதன்மூலம், கார் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரித்தாலும், வேகமாக செல்லும்போது வளைவுகளிலும், அதிக காற்று வீசும்போதும் இந்த கார்களின் புவியீர்ப்பு மையம் சிறப்பாக இருக்காது என்பதால் கவிழும் ஆபத்து அதிகம். எனவே, சஸ்பென்ஷன் லிஃப்ட் கிட் பொருத்துவதை தவிர்ப்பது நலம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

வண்ண பனி விளக்குகள்

வண்ண பனி விளக்குகள்

பனி விளக்குகளில் பல்புகள் பல வண்ணங்களில் பொருத்தும் ட்ரென்ட் அதிகரித்து வருகிறது. இது கூடுதல் பார்வை திறனை அளிக்கும் என்ற தவறான பிரச்சாரமும் செய்யப்படுகிறது. ஆனால், இதில் துளியும் உண்மையில்லை. மாறாக எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு கண்கூச்சத்தை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.

டேஷ்போர்டு டிவி திரை

டேஷ்போர்டு டிவி திரை

எம்பிவி போன்ற மூன்று வரிசை கார்களின் கூரையில் டிவி திரை பொருத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது சிறிய கார்களின் டேஷ்போர்டிலேயே டிவி திரை பொருத்துகின்றனர். இது நிச்சயம் ஓட்டுபவரின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்கு வழிவகுக்கும். எனவே, டேஷ்போர்டில் டிவி பொருத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஜிபிஎஸ் சாதனம்

ஜிபிஎஸ் சாதனம்

இன்று பெரும்பாலான கார்களில் ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. செல்லும் இடத்திற்கு எளிதாக கூட்டிச் செல்லும் ஜிபிஎஸ் சாதனங்கள் மூலம் விபத்து ஏற்படும் ஆபத்து இருக்கிறது. கார் ஓட்டிக் கொண்டே பலர் ஜிபிஎஸ் சாதனத்தின் செட்டிங்கை மாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், கவனச் சிதறல் ஏற்படுவதோடு, விபத்துக்கு காரணமாகிறது. எனவே, காரை கிளப்புவதற்கு முன்னர் ஜிபிஎஸ் சாதனத்தில் செட்டிங் செய்துவிட்டு புறப்படுவது அவசியம்.

கப் ஹோல்டர்கள்

கப் ஹோல்டர்கள்

கார் வாங்கும்போது அதில் எத்தனை கப் ஹோல்டர்கள் இருக்கின்றன என்பதையும் முதலில் வாடிக்கையாளர்கள் சோதிக்கின்றனர். சிலர் தனியாக கப் ஹோல்டர்களை வாங்கி பொருத்திக் கொள்கின்றனர். இவற்றில் சரியான அளவு பாட்டில்கள் வைக்காதபோது பிரச்னை ஏற்படுகிறது. சில சமயம் கப் ஹோல்டரிலிருந்து எடுக்கும்போது தடுமாற்றம் ஏற்பட்டால், தண்ணீர் அல்லது காபி போன்றவை சிந்தும்போது ஓட்டுனரின் கவனம் சிதறும். அட்ஜெஸ்ட்டபிள் கப் ஹோல்டர் இருந்தால் நல்லது. அப்படியில்லையெனில், காரை ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் அல்லது காபி அருந்துவது நல்லது.

டின்ட் கண்ணாடி

டின்ட் கண்ணாடி

வெப்பத்தை தவிர்க்கும் வகையில் டின்ட் செய்யப்பட்டிருக்கும் ஜன்னல் கண்ணாடிகளால் ஓட்டுனருக்கு சாலையின் பக்கவாட்டு பகுதி மற்றும் அதில் வரும் வாகனங்கள் குறித்து சரியாக கணிக்க முடிவதில்லை. அதாவது, டின்ட் செய்யப்படாத கண்ணாடி அளவுக்கு நம்மால் சரியாக கணிக்க முடியாது.

 ஸ்மோக்டு ஹெட்லைட்

ஸ்மோக்டு ஹெட்லைட்

ஸ்போர்ட்ஸ் கார்கள் போன்று தற்போது சாதாரண கார்களிலும் ஸ்மோக்டு ஹெட்லைட் பொருத்துவதோடு, ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்டுகளில் கறுப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டி டிசைன் டிசைனாக மறைக்கின்றனர். இதனால், ஹெட்லைட்டிலிருந்து முழுமையான வெளிச்சம் வெளிவராது என்பதோடு, டெயில்லைட்டுகள் கறுப்பு நிற ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டிருப்பதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் சரியாக கணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனாலும், விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன.

மியூசிக்கல் ஹாரன்

மியூசிக்கல் ஹாரன்

தற்போது நாய் குறைப்பது போன்றும், விலங்குகள் ஓலமிடுவது போன்றும் மியூசிக் ஹாரன்களை பொருத்துகின்றனர். இது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக இருக்கிறது. பிற வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் அச்சமூட்டுதால் விபத்தை விலை கொடுத்து வாங்குவதாக இது அமைகிறது. இதுபோன்று, ஹாரன்களை பொருத்துவதும் விதிமீறல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Most Read Articles

English summary
we’ve gathered a list of accessories that some drivers like to have in their cars. While some sound silly, others are pretty common, but their danger can sometimes remain unnoticed until it is too late.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X