ஏர்பேக் உள்ள கார் வச்சுருக்கீங்களா... இதப்படிங்க முதல்ல!

இன்று நடைபெறும் சில விபத்துக்களில் ஏர்பேக் விரிவடையாதது குறித்து சர்ச்சை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில், உரிமையாளர்கள் அறியாமல் செய்யும் சிறிய விஷயங்களால் உயிர் காக்கும் காற்றுப் பைகள் விரிவடையாமல் போகும் துரதிருஷ்டமான சம்பவங்கள் நடந்து வருகிறது. கார் வாங்கும்போது சில டீலர்களில் விற்பனை பிரதிநிதி இந்த விஷயத்தை கூறி இருப்பார். சில ஷோரூம்களில் சொல்ல மறந்திருக்கலாம். ஆனால், சிறிய விஷயங்களை மறந்தும் செய்தால் ஏர்பேக் பிரயோஜனம் இல்லாமல் போகும் வாய்ப்புள்ளது. எனவே, ஏர்பேக் கார் வைத்திருப்பவர்கள் இந்த செய்தியை படித்துவிடுவது உசிதம்.

ஏர்பேக் உள்ள கார் வச்சுருக்கீங்களா... இதப்படிங்க முதல்ல!

ஏர்பேக் கட்டாயம்

இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் என்பது அடிப்படை பாதுகாப்பு அம்சமாக கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. மேலும், பல பட்ஜெட் கார்களில் கூட விருப்பத்தின் பேரில் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் மற்றும் சைடு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த கார்களில் சில சிறிய விஷயங்களை செய்தால் கூட ஏர்பேக் விரிவடையாது. மேலும், அதுவே சில ஆபத்தையும் விளைவித்துவிடும். அவை என்னென்ன? பார்க்கலாம் வாங்க.

ஏர்பேக் உள்ள கார் வச்சுருக்கீங்களா... இதப்படிங்க முதல்ல!

சீட் பெல்ட்

சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ஏர்பேக் விரிவடையாது. இது பலமுறை நாம் தெரிவித்திருக்கிறோம். குறுகிய தூர பயணம் அல்லது நீண்ட தூரம் பயணம் என்றில்லை. எப்போது விபத்து நேரும் என்பது யாரும் அனுமானிக்க முடியாத விஷயம். எனவே, காரில் ஏறியவுடன் சீட் பெல்ட்டை அணிந்துவிட்டு, காரை இயக்குவதை பழக்கமாக்கிக் கொள்வது அவசியமானது. சில கார்களில் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஏர்பேக் விரிவடையாத வகையில் தொழில்நுட்பம் கொடுக்கப்படுகிறது என்பதையும் மனதில் வையுங்கள்.

ஏர்பேக் உள்ள கார் வச்சுருக்கீங்களா... இதப்படிங்க முதல்ல!

சீட் கவர்

காரில் சீட் கவர் போடுவதால் ஏர்பேக் விரிவடையாது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, ஏர்பேக் உள்ள கார்களில் சீட் கவர் போடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வெளிச் சந்தையில் சீட் கவர் வாங்கி போடக்கூடாது. அதேநேரத்தில், டீலர்களில் சீட் கவரை போடக்கூடிய வாய்ப்புண்டு. முன்புற ஏர்பேக்குகள் மட்டுமின்றி, சைடு ஏர்பேக்குகளும் சீட் கவர் போடுவதால் விரிவடையாது என்பதை மனதில் வைக்க வேண்டியது அவசியம்.

ஏர்பேக் உள்ள கார் வச்சுருக்கீங்களா... இதப்படிங்க முதல்ல!

அமரும் முறை

காரின் ஸ்டீயரிங் வீலுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து செல்வதை தவிர்க்கவும். அதாவது, சீட் பெல்ட் கண் இமைக்கும் நேரத்தில் விரிவடையும்போது முகத்தில் அறைந்து காயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, இருக்கையுடன் இயைந்து அமர்ந்து செல்வதும், ஸ்டீயரிங் வீலில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து ஓட்டுவதும் அவசியம். கார் வாங்கும்போதே டீலரில் விற்பனை அதிகாரியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுக் கொள்வதும் அவசியம்.

ஏர்பேக் உள்ள கார் வச்சுருக்கீங்களா... இதப்படிங்க முதல்ல!

இதையும் செய்யாதீங்க

ஓட்டுனருக்கு பக்கத்தில் அமர்ந்து வரும் சிலர் டேஷ்போர்டு மீது கால் வைத்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். இதுவும் ஆபத்தில் முடிந்துவிடும். விபத்தின்போது ஏர்பேக் விரிவடைந்தால் மிக மோசமான காயங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

ஏர்பேக் உள்ள கார் வச்சுருக்கீங்களா... இதப்படிங்க முதல்ல!

பொம்மைகள்

ஏர்பேக் உள்ள கார்களில் டேஷ்போர்டின் மீது பொம்மைகள் மற்றும் இதர பொருட்களை வைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சக பயணிக்கான இருக்கை பக்கத்தில் உள்ள ஏர்பேக் விரிவடையும்போது மிக மோசமான விபத்துக்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஏர்பேக் உள்ள கார் வச்சுருக்கீங்களா... இதப்படிங்க முதல்ல!

பம்பர் கார்டு

காரின் முன்புறத்தில் புல் பார் எனப்படும் எக்ஸ்ட்ரா பம்பரை பொருத்துவதும் ஏர்பேக் விரிவடையாமல் போவதற்கு வழிவகுக்கும். காரின் முன்புறத்தில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் சென்சார்களை வைத்துத்தான் மோதலின்போது ஏர்பேக் விரிவடையும். இதுபோன்ற புல் பார் பொருத்தினால் சென்சார்களுக்கு மோதல் தாக்கம் போதிய அளவு கிடைக்காமல் ஏர்பேக் விரிவடையாமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

ஏர்பேக் உள்ள கார் வச்சுருக்கீங்களா... இதப்படிங்க முதல்ல!

பொது விஷயம்

இப்போது பெரும்பாலான கார்களில் ஏர்பேக்குடன்தான் வருகிறது. எனவே, ஏர்பேக் இருக்கும்போது வெளிச்சந்தையில் ஆக்சஸெரீகளை வாங்கி பொருத்துவதை தவிருங்கள். சீட் கவர் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகளை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் வாங்கி பொருத்துவதன் மூலமாக இந்த பிரச்னையை தவிர்க்கலாம். பொதுவாக, எந்த கூடுதல் ஆக்சஸெரீகளையும் பொருத்தாமல் இருப்பதும், சரியான முறையில் அமர்ந்து கார் ஓட்டுவதும் பயன்தரும்.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ டிப்ஸ்
English summary
Here are some important safety tips for car with airbags.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X