கார் ஜாக்கியை பயன்படுத்துவது எப்படி?... சில டிப்ஸ்!!

By Saravana

டயர் பஞ்சர், கார் பழுது பார்க்கும் சமயங்களில் ஜாக்கி இன்றிமையாத கருவியாக பயன்படுகிறது. காரில் ஜாக்கி மற்றும் இதர உபகரணங்கள் இருந்தாலும் சிலருக்கு பயன்படுத்த தெரிவதில்லை.

இதுபோன்ற சிறிய விஷயங்களை கற்று வைத்துக் கொண்டால் அவசர சமயங்களில் பலருக்கு உதவியாக இருக்கும். கார் ஜாக்கியை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த சில வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.

 நீண்ட நேரம் வேண்டாம்

நீண்ட நேரம் வேண்டாம்

காரை நீண்ட நேரம் ஜாக்கியில் தூக்கி நிறுத்தி வைக்க வேண்டாம்.

 கவனம்...

கவனம்...

காருக்கு அடியில் பழுது பார்க்க வேண்டியிருக்கும் சமயங்களில் ஜாக்கி சரியாக நிற்கிறதா, கீழே அழுந்திவிடாத வகையில் மண் கெட்டியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டு காருக்கு கீழே செல்லுங்கள்.

டயர் பஞ்சராகிவிட்டால்...

டயர் பஞ்சராகிவிட்டால்...

பஞ்சர் ஆகிவிட்டால் காரை சமதரையில் நிறுத்த முயற்சியுங்கள். மேனுவல் டிரான்ஸ்மிஷன் காராக இருந்தால், முதல் கியரை போட்டு நிறுத்துங்கள். பார்க்கிங் பிரேக் போடுவதையும் மறக்க வேண்டாம். இதைத்தொடர்ந்து காரை ஜாக்கியில் நிறுத்தும் முயற்சிகளை தொடருங்கள்.

 மலைப்பாதையில்...

மலைப்பாதையில்...

சரிவான பாதையில் பஞ்சர் ஆகிவிட்டால் காரின் சக்கரங்களில் மரத்துண்டு அல்லது செங்கல்லை போட்டுவிடுங்கள். தவிர, சாலையோர தடுப்பு இருந்தால், கார் நகர்ந்தால் கூட அது, தடுத்து கொள்ளும் வகையில் காரின் சக்கரங்களை நிறுத்துங்கள்.

ஜாக்கி பயன்படுத்தும் வழிமுறைகள்..

ஜாக்கி பயன்படுத்தும் வழிமுறைகள்..

இதுவரை கார் ஜாக்கி போடுவதற்கு முன் உள்ள வழிமுறைகள். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் ஜாக்கியில் காரை நிறுத்துவது குறித்த வழிமுறைகளை காணலாம்.

ஜாக்கி பொருத்துதல்

ஜாக்கி பொருத்துதல்

பழைய கார் மாடல் என்றால் சப் ஃப்ரேமில் ஜாக்கியின் மேல் பகுதியை தாங்கும் வகையில் பொருத்துங்கள். பழைய கார்களில் திடமிக்க சப் ஃப்ரேம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், புதிய கார்கள் மோனோகாக் சேஸீயுடன் வருகின்றன. அதில், ஜாக்கி பொருத்துவதற்கென்ற பிரேத்ய அமைப்பு இருக்கும். அதில், கவனமாக ஜாக்கியை பொருத்தவும். ஜாக்கி பொருத்துவதற்கான சரியான இடம் கார் மேனுவலில் கொடுக்கப்பட்டிருக்கும்.

இரண்டு வகை ஜாக்கி

இரண்டு வகை ஜாக்கி

ஜாக்கியில் இரண்டு வகைகள் உள்ளன. பெரும்பாலான கார்களில் சிசர் ஜாக்கி இருக்கும். அதில், ஜாக்கியை உயர்த்துவதற்கான லிவரை இணைத்து வலதிலிருந்து இடது புறமாக கிளாக்வைஸ் முறையில் சுற்றும்போது ஜாக்கி கார் மேலே எழும்பும்.

ஹைட்ராலிக் ஜாக்கி

ஹைட்ராலிக் ஜாக்கி

இந்த ஹைட்ராலிக் ஜாக்கியை பம்ப் செய்து காரை மேலே உயர்த்தவும். இது சற்று எளிதாகவும் இருக்கும்.

டயர் மாற்றியவுடன்

டயர் மாற்றியவுடன்

ஜாக்கியை பயன்படுத்தி போதிய அளவு காரை மேலே உயர்த்தியவுடன் டயரை கழற்றி மாற்றுங்கள். இதைத்தொடர்ந்து, மீண்டும் ஜாக்கியை கீழே இறக்கிவிடுங்கள். இப்போது ஆன்ட்டி கிளாக்வைஸ் என்ற எதிர்திசையில் லிவரை சுழற்றி ஜாக்கியை இறக்கவும்.

ஹைட்ராலிக் ஜாக்கி என்றால்...

ஹைட்ராலிக் ஜாக்கி என்றால்...

ஹைட்ராலிக் ஜாக்கியாக இருந்தால் டயரை மாற்றியவுடன் ஜாக்கியில் இருக்கும் பிரஷர் வால்வை திறந்தால் ஜாக்கி மெதுவாக இறங்கிவிடும்.

 சிசர் ஜாக்கி

சிசர் ஜாக்கி

இது பார்ப்பதற்கு இரண்டு கத்தரிக்கோல்களை இணைத்தது போன்று இருப்பதால் சிசர் ஜாக்கி என்று அழைக்கின்றனர். இது எடை குறைவானது. பெரும்பாலான கார்களில் இந்த வகை ஜாக்கிதான் தயாரிப்பாளர்களால் கொடுக்கப்படுகிறது.

 ஹைட்ராலிக் ஃப்ளோர் ஜாக்கி

ஹைட்ராலிக் ஃப்ளோர் ஜாக்கி

இது ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜாக்கி வகை. இது கனரக வாகனங்களையும் எளிதாக மேலே உயர்த்துவதற்கு பயன்படுகிறது. இதில் சக்கரங்களும் இருப்பதால் நகர்த்தி செல்வதற்கு எளிதானது.

 
Most Read Articles

English summary
How many of us can say that we are fully aware how to use a car jack? One of the main reasons to jack up a car is to change a tyre. Before you jack up your car make sure you are aware of proper lifting procedures. We wouldn't be surprised to know a majority of car owners in our country have never even changed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X