காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

புதிதாக கார் ஓட்ட கற்று கொள்ளபவர்களுக்கும், கிளட்ச் குறித்து முறையாக அறியாத கார் ஓட்டுநர்களும் காரில் தேவையில்லாமலும் முறையற்ற வகையிலும் பயன்படுத்துவர். கிளட்சை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற சில விதிகள் உள்ளது.

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

நீங்கள் கிளட்சை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி வந்தால் உங்கள் காரின் உள்ள பாகங்கள் மற்றும் இன்ஜினிற்கு நீங்கள் கெடுதல் செய்கிறீர்கள் என அர்த்தம் இதனால் நீங்கள் உங்கள் காரின் வாழ்நாளை குறைக்ககூடும்.

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கும் போது கிளட்சை பிடிப்பதும். அல்லது காரின் கிளட்சை பிடிக்காமலேயே கிரை மாற்ற முயல்வதும் உங்கள் காருக்கு தீங்கை ஏற்படுத்துவதோடு உங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

இந்த செய்தியில் எந்தெந்த நேரங்களில் கிளட்சை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல்களை வழங்கியுள்ளோம். இதன் படி நீங்கள் கிளட்ச் பிடித்து வாகனம் ஓட்டினால் காரின் பாகங்களுக்கு சேதாரம் இல்லாமல் இருக்கும்.

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

காரை நிறுத்தும் போது கிளட்சை பயன்படுத்துவது

நீங்கள் காரில் சென்று கொண்டிருக்கும் போது காரை நிறுத்த வேண்டும் நின்றால் முதலில் காரின் பிரேக்கை மெதுவாக அழுத்த வேண்டும். உங்கள் காரின் ஆர்.பி.எம். குறிப்பிட்ட அளவு குறையும் வரை நீங்கள் பிரேக்கை அழுத்த வேண்டும்.

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

அதன் பன் மெதுவாக கிளட்சை பிடித்து கியரை குறைக்க வேண்டும். தெடார்ந்து காரை நிறுத்தும் போது கார் 2வது கியருக்கு வரும் பொது காரின் பிரேக் கார் நிறுத்தும் வரை அழுத்தம் வேண்டும். கார் நின்ற பிறகு மீண்டும் கிளட்சை பிடித்து கியரை நியூட்டலுக்கு கொண்டு வர வேண்டும்.

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

பிரேக்கையும் கிளட்சையும் ஓரே நேரத்தில் பயன்படுத்த கூடாது. இதனால் கிளட்ச் ஃபியாரிங் பாதிக்கப்படும்.

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

வேகத்தை குறைக்கும் போது கிளட்சை பயன்படுத்துவது

நீங்கள் காரில் சுமார் 70 கி.மீ., வேகத்தில் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். ஏதோ ஒரு காரணத்திற்காக உங்கள் காரின் வேகத்தை 50-60 கி.மீ., ஆக குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நீங்கள் காரின் கிளட்சையோ கியரையோ பயன்படுத்த தேவையில்லை. காரின் ஆக்ஸிலேட்டர் மற்றும் பிரேக்கை கண்ட்ரோல் செய்தே இந்த வேகத்தை கட்டுப்படுத்த முடியும்.

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

அதே நேரத்தில் 70 கி.மீ. வேகத்தில் செல்லும் காரை நீங்கள் 30 கி.மீ., வேகத்திற்கு குறைக்க வேண்டிய சுழ்நிலை ஏற்பட்டால் நீங்கள் கிளட்ச்சை பயன்படுத்தி தான் ஆக வேண்டும். ஏன் என்றால் 30 கி.மீ., வேகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஆர்.பி.எம்.மை அதிக அளவில் குறைக்க வேண்டும்.

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

அதிகமாக கியரில் குறைந்த ஆர்.பி.எம் மை செயல்படுத்த முடியாது. இதனால் நீங்கள் கிளட்சை பிடித்து கியரை குறைத்தாக வேண்டும் .

காரில் எப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

மொத்தத்தில் உங்கள் ஆர்.பி.எம் குறிப்பிட்ட அளவு குறையும் வரை நீங்கள் கிளட்சை பயன்படுத்த தேவையில்லை. அதிக வேகத்தில் காரில் செல்லும் போது நீங்கள் காரின் கிளட்சை பிடித்தால் கார் அதை நியூட்டரலாக கருதி காரின் வேகம் மேலும் அதிகரிக்குமே தவிர வேகம் குறையாது. ஆர்.பி.எம் குறிப்பிட்ட அளவிற்கு குறைந்த பின்பு தான் கிளட்சை பிடிக்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
When Should You Press Clutch- The Right Time!. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X