எலித்தொல்லையிலிருந்து கார்களை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகள்

கார் வைத்திருப்பவர்களுக்கு பெரும் தலைவலியை கொடுப்பது எலித்தொல்லைதான். நகர்ப்புறத்தில் பெரும்பாலும் கார்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால், கழிவு நீர் பாதைகளில் குடிகொண்டிருக்கும் எலிகள் இரவு நேரங்களில் கார்களின் எஞ்சின் பகுதியில் புகுந்து சேதங்களை உண்டு பண்ணுகின்றன.

பேட்டரி மின் ஒயர்கள், பிளாஸ்டிக் பாகங்கள், ஹோஸ் குழாய்கள் மற்றும் இதர பாகங்களை எலிகள் கடித்து குதறிவிடுவதால், பெரும் பாதிப்புகளையும், செலவீனங்களையும் ஏற்படுத்திவிடுகின்றன. சில நேரங்களில் லட்சக்கணக்கில் செலவீனத்தை உண்டு பண்ணி, பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் விபத்துக்கும் வழிகோலிவிடுகின்றன.

தற்போது குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால், கழிவு நீர் பாதைகளிலிருந்து வெளியேறி, இரவு நேரங்களில் கார் எஞ்சின் பகுதிக்குள் எலிகள் புகுந்து உட்கார்ந்து சேட்டைகளை ஆரம்பித்துவிடும். எனவே, எலித்தொல்லை அதிகம் உள்ள பகுதிகளில் கார்களை நிறுத்தி வைப்போர் அடிக்கடி, பானட்டை திறந்து உள்ளே ஆய்வு செய்வது அவசியம்.

சில சமயம் கேபினுக்குள் புகுந்து சிறுநீர் கழித்தும், மிதியடிகள், இருக்கைகள் போன்றவற்றை சேதப்படுத்தி விடும். தற்போது வரும் கார்களின் கேபினுக்குள் எலிகள் புகாதவாறு வசதிகளுடன் வந்தாலும், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எலித்தொல்லையிலிருந்து கார்களை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.


எளிய வழிமுறைகள்

எளிய வழிமுறைகள்

எளிதாக கிடைக்கும் பொருட்கள், குறைவான செலவீனத்தில் எலித்தொல்லையிலிருந்து காரை பாதுகாக்கும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.நாப்தலின் உருண்டைகள்

1.நாப்தலின் உருண்டைகள்

எலிகளுக்கு சில வாடைகள் அலர்ஜி. எனவே, எஞ்சின் அமைவிடத்தில் நாப்தலீன் உருண்டைகளை போட்டு வைப்பதன் மூலம் எலிகள் வருவதை தடுக்கலாம். இது கைகொடுக்கவில்லையெனில், அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் எளிய வழிமுறைகளை செய்து பார்க்கலாம்.

2.புகையிலை

2.புகையிலை

நாட்டு புகையிலையை எஞ்சின் பகுதியில் ஆங்காங்கே போட்டு வைப்பதன் மூலம் எலிகள் வருவதை தடுக்கலாம். ,

 3.மிளகு பவுடர்

3.மிளகு பவுடர்

மிளகு பவுடரும் எலிகளுக்கு அலர்ஜி. எனவே, எஞ்சின் பகுதியில் மிளகு பவுடரை தூவினால் எலித்தொல்லையிலிருந்து விடிவு பெறலாம். ஆனால், எஞ்சின் சூடாகும்போது ஒருவித வாடை வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. ஸ்பிரே

4. ஸ்பிரே

கடைகளிலும், ஆன்லைனிலும் எலிகளுக்கான ஸ்பிரே விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயன்படுத்தி எலித்தொல்லையிலிருந்து விடுபடலாம்.

5. எலி பாஷனம்

5. எலி பாஷனம்

எலி பாஷனத்தை கோதுமை மாவுடன் கலந்து சிறு உருண்டைகளாக்கி, எஞ்சின் பகுதியில் ஆங்காங்கே வைக்கலாம்.

 6. அல்ட்ராசோனிக் சாதனம்

6. அல்ட்ராசோனிக் சாதனம்

அல்ட்ராசோனிக் சப்தத்தை தரும் சாதனத்தை எஞ்சின் பகுதியில் பொருத்திவிட்டு, இரவு நேரத்தில் ஆன்செய்து வைக்கலாம். இந்த சப்தம் சில சமயம் பிறருக்கு இடையூறாக இருக்க வாய்ப்புண்டு.

 7. பினைல்

7. பினைல்

வீட்டில் பயன்படுத்தப்படும் பினைலை எஞ்சின் பகுதியில் தெளித்து விட்டால், அந்த வாடைக்கு எலிகள் அண்டாது.

 8. வலை

8. வலை

தற்போது எலிகள் கார்களுக்குள் ஏறாதவகையில், வலைகளை அமைத்துக் கொடுக்கின்றனர். இவை சர்வீஸ் செய்யும்போது மிக எளிதாக அகற்றி மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். இதனையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

9. பார்க்கிங்

9. பார்க்கிங்

கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் பாதைகளுக்கு அருகில் காரை நிறுத்துவதை தவிர்த்து, வேறு இடத்தில் பார்க்கிங் செய்வதும் நல்லது. மேலும், வீட்டின் ஃபோர்டிகோ அல்லது கராஜில் தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் வழிகளை வலை வைத்து அடைத்துவிடுங்கள்.

கவனம் தேவை

கவனம் தேவை

வேதிப்பொருட்கள், ஸ்பிரே மற்றும் எலி பாஷனம் போன்றவற்றை வைக்கும்போது கைகளில் கையுறை அணிந்து கொள்வது அவசியம்.

Most Read Articles
English summary
Here are given some simple tips to protect cars from rats.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X