சந்தோஷமா கார் வாங்கணுமாங்க... முதல்ல இந்த கேள்விகளை படிங்க!

Written By:

கார் வாங்குவது என்பது வாழ்க்கையின் மிக இனிமையான தருணமாக அமைவதை மறுக்க முடியாது. ஆனால், கார் வாங்கும்போது சிலர் செய்யும் ஆர்வக்கோளாறான விஷயம், பொருளாதார ரீதியில் பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திவிடக்கூடும்.

எனவே, இந்த விஷயத்திலும் ஆர்வ மிகுதியைவிட, விவேகமாக செயல்படுவதே முக்கியம். கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்காக இங்கே சில கேள்விகளை முன் வைத்துள்ளோம். இதில், நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால், நிச்சயம் கார் வாங்கிய பிறகு பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் கார் வாங்க போங்க!

01. சேமிப்பிலிருந்து முன்பணம் செலுத்துகிறீர்களா?

ஆம், என்பவர்கள் அடுத்தக் கேள்விக்கு செல்லலாம். இல்லையென்பவர்கள் தொடர்ந்து படிக்கவும். நம் நாட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடன் உதவி மூலமாகவே புதிய கார் வாங்குகின்றனர். இவ்வாறு வாங்குவோரில் பலர் தனிநபர் கடனை பெற்று கார் கடனுக்கு முன்பணமாக செலுத்துகின்றனர். இது மிக மிக தவறான விஷயம். சேமித்து வைத்த பணத்திலிருந்து ஒரு பகுதியை மட்டும் முன்பணம் செலுத்துவது சாலச் சிறந்தது.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் கார் வாங்க போங்க!

02. மாதத் தவணை பற்றிய திட்டம் வகுத்து விட்டீர்களா?

கையில் இருக்கும் சேமிப்புத் தொகையில் இருந்து குறிப்பிட்ட பகுதியை கார் கடனுக்கான முன்பணத்துக்காக ஒதுக்கிவிட்டீர்கள். அடுத்து, மாதத் தவணையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு செலுத்துவதற்கு எந்தளவு உங்களது வருவாய் இருக்கும்.

 இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் கார் வாங்க போங்க!

வேலையிடத்தில் பிரச்னை அல்லது அதனை சமாளிக்க்கூடிய விதத்தில், உபரி வருவாய் இருக்கிறதா என்பதை கணக்கிட்டு, மாதத் தவணை போடவும். கார் கடன் தவிர்த்து, வேறு இதர மாதத் தவணைகளையும் சேர்த்து உங்களது சம்பளத்தில் 60 சதவீதத்திற்கும் மிகாமல் மாதத் தவணை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் கார் வாங்க போங்க!

03. பராமரிப்பு செலவு பற்றி தெரியுமா?

சில லட்சங்கள் முன்பணம் செலுத்தி காரை வீட்டுக் கொண்டு வந்துவிடுகிறோம். அடுத்து, மாதத் தவணை. சம்பளத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை மாதத் தவணையாக செலுத்துவதுடன் கார் வாங்குவது முடிந்து போய்விடாது. சரியான கால இடைவெளிகளில் காரை நன்கு பராமரிப்பது அவசியம். பைக்கை பராமரிப்பதை விட கார் பராமரிப்புக்கு கூடுதலாக இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கூடுதல் பராமரிப்பு செலவு தேவைப்படும்.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் கார் வாங்க போங்க!

04. எரிபொருள் செலவு பற்றிய திட்டம் உள்ளதா?

காருக்கு முன்பணம் செலுத்தி, மாதத் தவணையையும் கட்டி கார் வாங்கிவிட்டீர்கள். பராமரிப்பு செலவு கூட 6 மாதங்கள் முதல் ஆண்டுக்கு ஒருமுறை சமாளித்துக் கொள்ளளாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள். ஆனால், இந்த எரிபொருள் செலவு பற்றி அவ்வளவு அலட்சியம் காட்ட முடியாது. தினசரி அலுவலகத்திற்கு செல்வது முதல், வார இறுதியில் ஷார்ட் ட்ரிப், ஆண்டுக்கு இருமுறை சுற்றுலா, ஊரில் உள்ள நண்பர்கள் அல்லது உறவினர் வீட்டு திருமணம், அவசரப் பயணம் என காருக்கான எரிபொருள் செலவு மாதத் தவணைக்கு இணையாக போட்டி போடும் என்பதை மனதில் வையுங்கள்.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் கார் வாங்க போங்க!

05. இன்ஸ்யூரன்ஸ் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ஒருவழியாக கார் வாங்கி, தினசரி அலுவலக பயன்பாடு, இரண்டு மூன்று லாங் ட்ரிப் அடித்துவிட்டு அப்பாடா என்று உட்காரும்போது, ஓர் ஆண்டு ஓடியிருக்கும். பின்னாலேயே இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிப்பு குறித்து கடிதமும், தொலைபேசி வழி நினைவூட்டலும் வந்துவிடும். மாதத் தவணை, அந்த மாத எரிபொருள் செலவுடன், இந்த இன்ஸ்யூரன்ஸ் கட்டணத்தை கட்டியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள்.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் கார் வாங்க போங்க!

06. பழுதுநீக்கும் செலவு பற்றி ஐடியா இருக்கா?

அடித்துப் பிடித்து முதலாண்டு இன்ஸ்யூரன்ஸ் தொகையை வெற்றிகரமாக கட்டி, இரண்டாவது ஆண்டையும் பல்லை கடித்துக் கொண்டு வெற்றிகரமாக கடந்துவிடுவீர்கள். அடுத்து, இலவச சர்வீஸ்கள் முடிந்து கட்டண சர்வீஸ் திட்டம் துவங்கும்.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் கார் வாங்க போங்க!

சார், காரில் அது மாற்ற வேண்டும், இது மாற்ற வேண்டும் என்று பல குறைகளை சொல்லி, ஒரு பெரும் தொகையுடன் சர்வீஸ் பில்லை கொடுப்பார்கள். அங்கே, இங்கே கை மாற்று வாங்கி அதையும் சமாளித்து காரை வெளியில் எடுக்கும்போது, சர்வீஸ் சூப்பர்வைசரிடம் கார் மதிப்பு குறித்து கேட்டால், நீங்கள் வாங்கிய விலையில் பாதி மதிப்பை கூறுவார். காரின் மதிப்பைவிட நீங்கள் மீதம் கட்ட வேண்டிய மாதத் தவணை அதிகமிருக்கும்.

கவனம் தேவை...

கவனம் தேவை...

கார் என்பது மிகச் சிறந்த போக்குவரத்து தீர்வு என்பதை நிச்சயம் மறுக்க இயலாது. ஆனால், முன்பணத்தில் துவங்கி, மாதத் தவணை, பராமரிப்புச் செலவு, எரிபொருள் செலவு, இன்ஸ்யூரன்ஸ் செலவு, பழுது நீக்கும் செலவு உள்ளிட்ட பல நிதிச் சுமைகளை உள்ளடக்கியது என்பதை மறந்துவிடாதீர்கள்.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு, அப்புறம் கார் வாங்க போங்க!

எப்போதுமே கார் வாங்கும்போது, இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப உங்களது நிதி ஆதாரங்கள் மற்றும் சமாளிக்கும் வழிகள் குறித்து யோசித்து முடிவு செய்யுங்கள். நிச்சயம் வாழ்க்கையில் இனிமையான பல தருணங்களை அது வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

English summary
Some Important Questions To Ask Yourself When Buying A New Car.
Story first published: Monday, April 17, 2017, 15:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark