சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து விதிகள்!

Written By:

கார் வாங்கியவுடன், சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்வது நல்லது. பொதுவான போக்குவரத்து விதிகள் நடைமுறையில் இருந்தாலும், சில நகரங்களில் சில கூடுதல் சாலைகள் நடைமுறையில் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில முக்கிய போக்குவரத்து விதிகள்!

சென்னையில் நண்பர் அல்லது உறவினர் காரை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து பயன்படுத்துவது குற்றமாக கருதப்படும். அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து பயன்படுத்தும் பட்சத்தில் மூன்று மாதங்கள் சிறை அல்லது ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில முக்கிய போக்குவரத்து விதிகள்!

முதலுதவி பெட்டி அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்தான். குறிப்பாக, சென்னை மற்றும் கொல்கத்தா நகரங்களில், விபத்தில் சிக்கும் காரில் பயணிப்பவர்களுக்கு காயமடைந்தால், அதற்கான முதலுதவி பெட்டி காரில் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில முக்கிய போக்குவரத்து விதிகள்!

காரில் ஹாரன் இல்லாமல் அல்லது பழுதடைந்த ஹாரன் இருந்தாலும் ரூ.100 வரை ஓட்டுபவருக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து விதிகளில் வழி உண்டு.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில முக்கிய போக்குவரத்து விதிகள்!

டெல்லி உள்ளிட்ட வடக்கு மத்திய பகுதிகளில் காருக்குள் சிகரெட் பிடிப்பது விதிமீறல். அவ்வாறு செய்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

இதர டிப்ஸ் செய்திகள்:

எப்போது, எப்படி காரில் கியர் மாற்ற வேண்டும்? - வழிகாட்டு முறைகள்

ஸ்டீயரிங் வீலை எப்படி பிடித்து கார் ஓட்டினால் சேப்டி!- டிப்ஸ்

மழைக்காலத்தில் கார் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான கார் டிரைவிங்: டிப்ஸ்!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில முக்கிய போக்குவரத்து விதிகள்!

கொல்கத்தா நகரில் பேருந்து நிறுத்தம் போன்ற பொது பயன்பாட்டு பகுதிகளில் காரை நிறுத்துவது விதிமீறலாக கருதப்படும் என்பதுடன், ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 Skoda Octavia RS Launched In India - DriveSpark
சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில முக்கிய போக்குவரத்து விதிகள்!

மும்பையில் காரின் டேஷ்போர்டில் டிவி அல்லது டிவி திரை பொருத்துவது குற்றமாக கருதபப்படும். ரூ.100 வரை அபராதமும் உண்டு.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில முக்கிய போக்குவரத்து விதிகள்!

சென்னையில் பார்க்கிங் லாட் அல்லது கார் நிறுத்துமிடங்களில் உங்களது காருக்கு முன்னால் வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, உங்களுக்கு இடையூறு ஏற்பட்டால், போலீசாரை அழைத்து புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு ரூ.100 வரை அபராதம் விதிக்க வழி உண்டு.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில முக்கிய போக்குவரத்து விதிகள்!

பெங்களூர், கொச்சி உள்ளிட்ட நகரங்களில் கஸ்டமைஸ் சைலென்சர் பொருத்தப்பட்டிருந்தால், ரூ.100 அபராதம் என்பதுடன், அதுதவிர்த்து வாகனத்தை பறிமுதல் செய்து அந்த சைலென்சரை அகற்றப்படும்.

இதர டிப்ஸ் செய்திகள்:

எப்போது, எப்படி காரில் கியர் மாற்ற வேண்டும்? - வழிகாட்டு முறைகள்

ஸ்டீயரிங் வீலை எப்படி பிடித்து கார் ஓட்டினால் சேப்டி!- டிப்ஸ்

மழைக்காலத்தில் கார் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான கார் டிரைவிங்: டிப்ஸ்!

English summary
Some Important Traffic Rules You Don't Know About.
Story first published: Saturday, November 11, 2017, 16:55 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark