வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்ட காரை கண்டுபிடிப்பது எப்படி?

வெள்ளத்தில் மூழ்கிய கார்தான் என்பதை கண்டுபிடிப்பது சற்று கடினம் என்றாலும், சில விஷயங்களை வைத்து கண்டறியும் வாய்ப்பு இருக்கிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

By Saravana Rajan

சென்னையில், 2015 டிசம்பரில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில், ஆயிரக்கணக்கான கார்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு கார்களைகூட சில லட்சங்கள் விலையில், அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலையை காண முடிகிறது.

இந்தநிலையில், வெள்ளத்தில் மூழ்கிய கார்களை புனரமைப்பு செய்து, அதிக விலைக்கு விற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பழைய கார் வாங்குவோர் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில், வாங்கிய பின்னர் இந்த கார்களில் அடிக்கடி பழுது ஏற்படும் வாய்ப்புள்ளதோடு, மறு விற்பனையிலும் மிக மோசமான மதிப்பை பெறும். எனவே, வெள்ளத்தில் மூழ்கிய காரை தவிர்ப்பது அவசியம்.

வெள்ளத்தில் மூழ்கிய கார்தான் என்பதை கண்டுபிடிப்பது சற்று கடினம் என்றாலும், சில விஷயங்களை வைத்து கண்டறியும் வாய்ப்பு இருக்கிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

01. அடிமாட்டு விலை

01. அடிமாட்டு விலை

சில யூஸ்டு கார் டீலர்களில் எந்த காரணமும் இல்லாமல், மார்க்கெட் விலையை விடை மிக குறைவான விலைக்கு சில கார்களை நிறுத்தியிருப்பர். இது நிச்சயமாக வெள்ளத்தில் மூழ்கிய காராக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

02. வித்தியாசமான வாடை

02. வித்தியாசமான வாடை

காரின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு காரில் அமர்ந்து பார்க்கவும். காரின் உட்புறத்திலிருந்து வித்தியாசமான வாடை வந்தால், அது நிச்சயம் வெள்ளத்தில் மூழ்கிய காராக இருக்கும் வாய்ப்புள்ளது. ஏர் ஃப்ரெஷ்னர் போட்டு வைத்திருந்தாலும், வித்தியாசமான வாடை இருந்தால் சற்று உஷாராகவே விலக்குவது அவசியம்.

03. சீட் பெல்ட்

03. சீட் பெல்ட்

சீட் பெல்ட்டை வெளியில் இழுத்து போட்டு பார்க்கவும். அதில், வெள்ள நீரால் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பது கவனமாக ஆய்வு செய்யவும்.

04. துரு ஏறிய கார்

04. துரு ஏறிய கார்

மிதியடிகளை எடுத்துவிட்டு, கீழே காரின் உலோக பாகங்களை ஆய்வு செய்யவும். துருப்பிடித்து பாலிஷ் செய்யப்பட்டிருக்கிறதா, பூஞ்சைகள் தொற்றியிருக்கிறதா என்பது போன்ற விஷயங்களை கவனமாக பார்க்கவும். உட்புறம் மட்டுமின்றி, பூட் ரூமையும் திறந்து ஸ்டெப்னி இருக்கும் இடங்களையும் ஆய்வு செய்யவும்.

05. திருகுகளில் கவனம்

05. திருகுகளில் கவனம்

காரின் திருகுகள், போல்ட்- நட்டுகளை சற்று கழற்றி பார்க்கும்போது, அவற்றில் துரு ஏறியிருந்தால், நிச்சயம் அது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட காராக இருக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன், சஸ்பென்ஷன், கைப்பிடிகள், டேஷ்போர்டு ஆகிய அனைத்து இடங்களிலும் தண்ணீரில் மூழ்கியதற்கான அடையாளங்களை கவனமாக பார்க்கவும்.

06. கதவுகள்

06. கதவுகள்

கதவுகளின் அடிப்பகுதியில் துரு அல்லது பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தாலும், கதவுகளின் இணைப்புப் பகுதியையும் ஆய்வு செய்யவும். கார் பாடியுடன் கதவு பொருந்தும் இடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தி்ல, அது சமீபத்திய வெள்ளத்தில் மூழ்கி விற்பனைக்கு வந்த காராக இருக்கும்.

07. அப்ஹோல்ஸ்டரி

07. அப்ஹோல்ஸ்டரி

காரின் அப்ஹோல்ஸ்டரி, இருக்கை போன்றவற்றில் பழுப்பு வண்ண கறை படிந்து நீக்கப்பட்டிருந்த தடயம் இருந்தாலும், அது வெள்ளத்தில் மூழ்கிய காராக இருக்கலாம். மேலும், அப்ஹோல்ஸ்டரியும், கதவில் உள்ள ஃபேப்ரிக் வண்ணமும் வித்தியாசமாக இருந்தாலும் வெள்ளத்தில் மூழ்கிய காராக இருக்கலாம்.

08. புதிய பாகங்கள்

08. புதிய பாகங்கள்

கார் பழமையாக இருந்து, காரில் பல பாகங்கள் புதியதாக மாற்றப்பட்டிருந்தாலும் அது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட காராக இருக்கும். உதாரணமாக, மிதியடிகள் புதிதாக இருந்தால், கொஞ்சம் உஷாராகவே, காரை முழுமையாக சோதித்து வாங்குவது அவசியம்.

09. டெஸ்ட் டிரைவ்

09. டெஸ்ட் டிரைவ்

காரின் எலக்ட்ரிக்கல் சிஸ்டம் மற்றும் அதற்கான ஒயரிங் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும். இதற்காக, டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும்போது ஓரளவு கண்டுபிடித்துவிடலாம். அனைத்து எலக்ட்ரிக்கல் சிஸ்டமும் ஒழுங்காக இயங்குகிறதா என்பதை பார்த்துவிட்டு, வித்தியாசமான சப்தம் ஏதேனும் வருகிறதா என்பதையும் ஆய்வு செய்துவிடவும். சிகரெட் லைட்டர், ஏசி, இண்டிகேட்டர்கள், ஆடியோ சிஸ்டம் போன்றவை சரியாக இயங்குகிறதா என்பதை பார்க்கவும்.

10. ஆயில்

10. ஆயில்

ஆயில் எவ்வாறு இருக்கிறது. அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் பார்க்கவும். ஆயிலில் வெள்ள நீர் கலந்திருந்தால், சாக்லேட் மில்கஷேக் கலரில் இருக்கும். அதனை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிடலாம். புதிதாக ஆயில் மாற்றியிருந்தாலும், கவனமாக காரணத்தை கேட்பதோடு, பிற விஷயங்களிலும் கவனமாக ஆய்வு செய்வது அவசியம்.

 11. ஏர் ஃபில்டர்

11. ஏர் ஃபில்டர்

ஏர் ஃபில்டரை வெளியில் எடுத்து பார்ப்பதும் அவசியம். அது சேதமடைந்திருந்தாலோ அல்லது கறை படிந்து நய்ந்து போயிருந்தாலோ வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்ட காராக இருக்கும்.

 12. ஹெட்லைட்

12. ஹெட்லைட்

ஹெட்லைட்டில் பனி படர்ந்திருந்தது போன்று இருந்தாலும் வெள்ளத்தில் மூழ்கிய காராக இருக்கும் வாய்ப்புள்ளது. இதேபோன்று, மீட்டர் கன்சோலில் உள்ள டயல்களிலும் இருந்தால் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கும்.

13. அட்வைஸ்

13. அட்வைஸ்

இங்கே நாம் வழங்கிய வழிமுறைகளை வைத்து கார் வெள்ளத்தில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால், பழைய கார்கள் பற்றிய நன்கு அறிந்த நண்பர்கள் அல்லது நம்பகமான மெக்கானிக்கை அழைத்துச் சென்று சோதனை செய்வது அவசியம். சக்கரங்கள், பிரேக்குகளை ஆய்வு செய்து கண்டறியும் வாய்ப்புள்ளது.

14. யூஸ்டு கார் டீலர்

14. யூஸ்டு கார் டீலர்

பொதுவாக நீண்ட காலமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்ற டீலர்களிடம் மட்டுமே டீல் செய்யுங்கள். இல்லையெனில், கார் தயாரிப்பாளர்களே நடத்தும் யூஸ்டு கார் டீலர்களை அணுகுவது நம்பிக்கையான அனுபவத்தை வழங்கும்.

15. இதுதான் பெஸ்ட்

15. இதுதான் பெஸ்ட்

80 லட்ச ரூபாய் ஆடி கார் 5 லட்சத்திற்கு கிடைக்கிறது என்றாலும், வெள்ளத்தில் மூழ்கியது, ஆடியாக இருந்தாலும் அறவே வேண்டாம். மேலும், எந்த காராக இருந்தாலும், சந்தேகம் என்று வந்துவிட்டால், அறவே தவிர்ப்பது அவசியம்.

Most Read Articles
English summary
Some Simple tricks to Spot a Flood-damaged Car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X