கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... நீங்க செய்யற தப்புகளும் காரணம்தான்... !!

காரில் மைலேஜ் குறைவாக தரும்போது, பெரும்பாலானோர் கார் தயாரிப்பு நிறுவனங்களை கண்டபடி வசைபாடுவதை காண முடிகிறது. ஆனால், அவர்கள் நடைமுறையில் அவர்கள் செய்யும் சில தவறுகள் காரணமாகவே, மைலேஜ் குறைவாக தருகிறது என்பதை அறியாமலும்; சில வேளைகளில் தெரிந்தாலும் அதனை ஒப்புக்கொள்வதற்கும் மனம் ஏற்பதில்லை.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

காரில் மைலேஜ் அதிகமாக பெறுவதற்கு சில எளிய முறைகளை மனதில் வைத்து செயல்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பதைவிட சிறப்பான மைலேஜை தரும். அதற்கான எளிய வழிகாட்டு முறைகளை காணலாம்.

பயன்பாட்டை பொறுத்து காரை தேர்வு செய்ய வேண்டும் என்று நாம் பலமுறை கூறி இருக்கிறோம். எஸ்யூவி கார்கள் மீதான மோகத்தில் பலரும் தேர்வு செய்து வாங்குகின்றனர். ஆனால், தினசரி அலுவலகம் அல்லது வர்த்தக ஸ்தாபனங்களுக்கு செல்வோருக்கு ஹேட்ச்பேக் கார்தான் சிறந்தது.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

எஸ்யூவி கார்கள் மைலேஜ் குறைவாக இருக்கும். தினசரி பார்க்கும்போது இரு கார்களுக்கும் சற்றே குறைவாக தெரியும். ஆனால், மாதத்தில் எரிபொருள் செலவீனத்தை கணக்கிடும்போது அதிக வித்தியாசம் வரும்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகம். ஹேட்ச்பேக் கார் எனக்கு சரிபட்டு வராது. 7 சீட்டர்தான் சிறந்த தேர்வாக இருக்கும் என்போருக்கு மாற்று வழி இருக்கிறது. தினசரி 7 பேரும் காரில் பயணிக்கப்போவது இல்லை. எனவே, ஹேட்ச்பேக் காரை வாங்கி அலுவலகம் செல்ல பயன்படுத்தலாம்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

நீண்ட தூர பயணங்களுக்கு சொந்தமாக ஓட்டும் வசதியை அளிக்கும் டாக்சி நிறுவனங்களிடம் முன்பதிவு செய்து பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும். எஸ்யூவி, எம்பிவி கார்களுக்கான பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ் என எல்லாமே மிக அதிகம் என்பதை மனதில் வைத்து தேர்வு செய்யவும்.

Recommended Video - Watch Now!
2018 Mini Cars Coming With New 7-Speed DCT - DriveSpark
கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

நகர்ப்புறத்தில் ஓட்டும்போது பலரும் க்ளட்ச்சை முறையாக இயக்குவதில்லை. மைலேஜ் குறைவதற்கு க்ளட்ச் இயக்கும் முறையை பலரும் சரிவர உணர்ந்து செயல்படுதில்லை. சீராக க்ளட்ச்சை விடுவது மட்டுமின்றி, ஆக்சிலரேட்டரையும் சீராக கொடுத்து இயக்கினால், சிறந்த மைலேஜ் கிடைக்கும். சிலர் வெடுக் வெடுக் என்று க்ளட்ச்சை இயக்குவதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

Trending On DriveSpark Tamil:

கோவையில் சாங்யாங் டிவோலி சோதனை: எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்!

இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான நகரமாக மாறும் சென்னை... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

க்ளட்ச்சை சீராக இயக்காதபட்சத்தில், எஞ்சின் ஆற்றல் வெகுவாக விரயமாகிறது. அதனை சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அதேபோன்று, வேகம் எடுக்கும்போது க்ளட்ச்சை சரியான நேரத்தில் பயன்படுத்தி கியர் மாற்றம் செய்ய வேண்டும்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

நீண்ட நேரம் சிக்னல்களில் நிற்க வேண்டியிருந்தால், மொபைலில் பலரும் கவனம் செலுத்த துவங்கி விடுகின்றனர். இதனால், எஞ்சின் தொடர்ந்து இயங்குவதும், வீணாக எரிபொருள் செலவழிவதும் பலரும் உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகிறது. எனவே, நீண்ட நேரம் சிக்னலில் நின்றிருந்தால், எஞ்சினை ஆஃப் செய்து வைக்கவும்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

சரியான கியரில் காரை இயக்குவதும் அவசியம். 4 அல்லது டாப் கியரில் வைத்து இயக்கும்போது அதிக மைலேஜ் கிடைக்கும் என்று பலரும் கருதி, வேகம் குறையும்போது கியரை மாற்றுவதற்கு பலரும் யோசிக்கின்றனர். ஆனால், வேகத்திற்கு தக்கவாறு கியரை குறைத்து இயக்க வேண்டும். இல்லையெனில், மைலேஜ் வெகுவாக குறையும்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சீரான வேகத்தில் செல்வது அவசியம். மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும்போது அதிகபட்ச மைலேஜை நிச்சயம் பெற முடியும். இல்லையெனில், 100 கிமீ வேகத்திற்கு மிகாமல் செலுத்துவது அவசியம். அதனை தாண்டும்போது நிச்சயம் மைலேஜ் மிக அதிக அளவில் குறையும்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு செல்வது பாதுகாப்பானது மட்டுமில்லை. அதிக மைலேஜ் கிடைப்பதற்கு சீராக காரை இயக்குவதற்கும், நிறுத்துவதற்கும் உதவும். சடன் பிரேக் அடிப்பதை தவிர்ப்பதும் எஞ்சின் ஆற்றல் விரயமாவதை தவிர்த்து, அதிக மைலேஜ் பெற வழி வகை செய்யும்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

அதிக வேகத்தில் காரில் செல்லும்போது ஜன்னல் கண்ணாடிகளை மூடி வைத்து செல்லவும். இல்லையெனில், காரின் ஏரோடைனமிக்ஸ் பாதிப்படைந்து, மைலேஜ் வெகுவாக குறையும். கார் ஜன்னல்களை மூடி ஏசி போட்டு செல்லலாம். குறைவான வேகத்தில் செல்லும்போது மட்டும், ஏசியை ஆஃப் செய்து ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்து செல்லலாம்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

தரமான எரிபொருள் வழங்கும் நிலையங்களை தெரிந்து கொண்டு, தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்புவது நல்லது. தரமற்ற மற்றும் சரியான அளவு இல்லாத பெட்ரோல் நிலையங்களில் நிரப்பும்போது எஞ்சின் பாதிப்படைந்து ஆயுள் குறையும் என்பதுடன், மைலேஜிலும் இழப்பு ஏற்படும்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

கார் டயர்களில் சரியான காற்றழுத்தத்தை பராமரிக்கவும். தினசரி பயன்படுத்துவோர் 15 நாட்களுக்கு ஒருமுறை காரில் டயர் அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். கார் தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்த அளவிலேயே, காரில் டயர் அழுத்தம் வைக்க வேண்டும். சீரான சாலைகளில் பயன்படுத்தும்போது, அதிகபட்சமாக 2 பிஎஸ்ஐ கூட்டி வைக்கலாம். அதற்கு மிக கூடாது.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

காரில் அகலமான டயர்கள் பொருத்துவது, தேவையில்லாத அதிக எடையுடைய பம்பர் உள்ளிட்ட ஆக்சஸெரீகளை பொருத்துவதையும் தவிர்க்க வேண்டும். சில சமயம் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விதி மீறலாக பார்க்கப்படும். மேலும், மைலேஜும் குறையும்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

வெளியூர் செல்லும்போது காரில் அதிக லக்கேஜ் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். ஒன்றுக்கு இரண்டுமுறை எடுத்து வைத்த பொருட்களை சரிபார்த்து பேக் செய்யவும். அதிக லக்கேஜ் ஏற்றுவதால் மைலேஜ் வெகுவாக குறையும்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

கார் தயாரிப்பாளர் பரிந்துரைத்த சரியான இடைவெளியில் கார் பராமரிப்புப் பணிகளை செய்ய வேண்டும். ஆயில், கூலண்ட் மாற்றுவது, ஆயில் ஃபில்டர், கேபின் ஃபில்டர் ஆகியவற்றை சரியான இடைவெளிகளில் மாற்றுங்கள்.

கார் மைலேஜ் குறைஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... !

சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல, இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நடைமுறையில் பின்பற்றும்போது ஒவ்வொன்றின் மூலமாக கணிசமான அளவு எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்.

Trending On DriveSpark Tamil:

சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் போலீஸ் உதவிக்கு வராததால், உக்ரைன் நாட்டு பெண் மரணம்!

சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரின் வியக்க வைக்கும் கதை..!

Tamil
English summary
Some Chilly Mistakes That Affect Your Car's Mileage.
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more