ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

பரபரப்பு மிகுந்த காலை, மாலை வேளைகளில் , ஓட்டுனர்களுக்கு சற்றே ஆசுவாசமான டிரைவிங் அனுபவத்தை வழங்குவதில் ஆட்டோமேட்டிக் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட கார்கள் சிறந்த தேர்வாக அமைந்திருக்கின்றன. ஆனால், அவை பராமரிப்பு செலவு அதிகம் என்ற கூற்று நம்மிடையே உள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

ஆட்டோமேட்டிக் கார்களை சிறப்பாக கையாள்வதன் மூலமாக, இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். ஆட்டோமேட்டிக் கார்களை பலர் விரும்பி வாங்கினாலும் அதனை கையாள்வதில் அவர்கள் செய்யும் சிறு தவறுகளால் ரிப்பேர் செலவுகளுக்காக பெரும் விலையை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆட்டோமேட்டிக் மற்றும் ஏஎம்டி கார்களை இயக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

 ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

கார் ஓடிக்கொண்டிருக்கும்போதே சிலர் மேனுவல் கியர்பாக்ஸ் கார் போன்று, டிரைவிங் மோடிலிருந்து நியூட்ரல் மோடிற்கு மாற்றுவிடுகின்றனர். இது மிகவும் தவறு. இதுபோன்று மாற்றும்போது கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷனின் சுழல் பாகங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் லைனிங் சீக்கிரமே தேய்ந்துபோகும்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

இந்த லைனிங் என்பது நீண்ட கால பயன்பாட்டிற்கும் ஏற்றதாக உறுதியானதாக இருக்கும். ஆனால், திடீரென கியரை மாற்றும்போது அவை தாக்குப்பிடிக்காமல் தெறித்து போகவும் அல்லது உடைந்துபோகவும் வாய்ப்புண்டு. எனவே, காரை நிறுத்துவதற்கு பிரேக்கை மட்டுமே பயன்படுத்துவது அவசியம்.

 ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

தற்போது வரும் பெரும்பாலான கார்கள் சரிவான சாலைகளில் இறங்கும்போது தானாகவே எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. எனவே, எரிபொருள் சேமிப்பு பற்றி கவலை கொள்ள வேண்டாம். எனவே, காரை நியூட்ரலில் வைக்காமல் சரியான கியரில் வைத்து இயக்குவது சாலச் சிறந்தது.

 ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

சரிவான சாலைகளில் எஞ்சினின் துணை தேவையில்லாமல் கார் வேகமாக இறங்கும். அதுபோன்ற சமயங்களில் சிலர் எரிபொருள் சேமிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காரை நியூட்ரல் கியருக்கு மாற்றி இயக்குகின்றனர். இது மகா தவறு. இதுபோன்று இயக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளது. காரை நியூட்ரலில் வைத்து ஓட்டுவதை தவிர்க்கவும்.

 ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

ஆட்டோமேட்டிக் கார்களில் கியர் மோடு நியூட்ரலில் இருக்கும்போது ஆக்சிலரேட்டரை கொடுத்து எஞ்சினை ரெவ் செய்ய வேண்டாம். இதுபோன்று செய்தால், ஆட்டோமேட்டிக் கார்களின் க்ளட்ச் பாகங்கள் பாதிக்கப்படும். இந்த பாதிப்பு காரணமாக க்ளட்ச் ஸ்லிப் ஆகும் என்பதுடன், அதற்குண்டான ரிப்பேர் பில்லும் நம் பாக்கெட்டை பதம் பார்த்துவிடும். தொடர் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

 ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது நியூட்ரல் மோடிற்கு மாற்றினால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்று பலர் கருதுகின்றனர். இதுவும் தவிர்க்க வேண்டிய செயல்தான். ஏனெனில், டிரைவ் மோடில் வைத்து கார் நிற்கும்போது எஞ்சின் இயக்கம் தானாக குறைந்துவிடும் வகையில் ஆட்டோமேட்டிக் கார்கள் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. நியூட்ரல் மோடில் எஞ்சின் ஐட்லிங் சற்றே கூட்டி வைக்கப்பட்டிருக்கும் என்பதால் எரிபொருள் இழப்பு சற்று அதிகம்.

 ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

மேலும், கியர் மோடுகளை மாற்றும்போது ஏற்படும் எரிபொருள் இழப்பைவிட, டிரைவ் மோடில் வைத்தே நிறுத்துவதால் எரிபொருள் இழப்பு குறைவாகவே இருக்கும் என்பதுடன், நியூட்ரலில் இருக்கும்போது இம்பெல்லர் மூலமாக ஐட்லிங் கூட்டப்படுவதால், க்ளட்ச் மற்றும் எஞ்சினுக்கு ஏற்படும் கூடுதல் சுமையும் குறையும். நீண்ட நேரம் நிற்க வேண்டியிருந்தால், எஞ்சினை ஆஃப் செய்துவிடுவது பலன் தரும்.

 ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

கார் நகர்ந்து கொண்டிருக்கும்போது தப்பி தவறி கூட பார்க் மோடிற்கு மாற்ற வேண்டாம். ஹேண்ட்பிரேக் போல செயல்படும் Park Pawl இதுபோன்ற செயலால் சேதமடைந்துவிடும். காரை நிறுத்தியவுடன், கார் நகராமல் பிடித்து வைத்திருக்கும் இந்த பற்சக்கர அமைப்பு, கார் நகரும்போது லாக் செய்யப்பட்டால், அது முழுமையாக சேதமடைந்து பெரும் செலவில் கொண்டுவந்துவிட்டு விடும்.

 ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

ஆட்டோமேட்டிக் கார்களை இயக்குவது மிக சுலபமாக இருக்கும். அதேபோன்று, நாம் செய்யும் சிறு தவறுகளால், செலவும் அதிகம் வைக்கும் அபாயம் உள்ளது. பக்குவமாக கையாளும்பட்சத்தில், அது நீண்ட கால பயன்பாட்டிற்கு மிக சிறந்ததாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ டிப்ஸ்
English summary
Some things you should Avoid in an automatic car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X