Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டர்போசார்ஜ்டு எஞ்சின் கொண்ட கார்களில் செய்யக்கூடாத விஷயங்கள்!
வாகனப் பெருக்கத்தால், மாசு உமிழ்வு விதிகள் கடுமையாக்கப்பட்டு வரும் இவ்வேளையில், டர்போசார்ஜர் கொண்ட கார் எஞ்சின்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, டீசல் கார்களில் மாசு உமிழ்வு அளவை குறைக்கும் விதமாக, குறைவான திறன் கொண்ட எஞ்சின்களில் டர்போசார்ஜர் துணையுடன் அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதமாக இவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், டர்போசார்ஜர் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை கையாளும்போது ஓட்டுனர்கள் செய்யக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்.

டர்போசார்ஜர் எஞ்சின் கார்களில் அதிக கியரில் வைத்து மெதுவாக ஓட்டக் கூடாது. அதிக மைலேஜ் கிடைக்கும் என்ற நினைப்பில் சிலர் இவ்வாறு செய்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்யும்போது எஞ்சினுக்கு அதிக எரிபொருள் செல்லும். அதேவேளையில், குறைவான காற்று எஞ்சினுக்கு கிடைக்கும்.

இதனால், மைலேஜ் குறையும் என்பதுடன், எஞ்சின், புகைப்போக்கி அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும். சாதாரண கார்களிலும் இதுபோன்று ஓட்டுவதை தவிர்க்கவும். வேகத்திற்கு தக்கவாறு சரியான கியரை மாற்றி இயக்குவதன் மூலமாக இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.

டர்போசார்ஜர் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கு தரமான எரிபொருளை பயன்படுத்துவதும் அவசியம். இதன்மூலமாக, கார் எஞ்சின் ஸ்மூத்தாக இயங்கும். சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். இல்லாதபோது, நாளடைவில் எஞ்சினில் அதிக சப்தம் வெளிப்படும்.

டர்போசார்ஜர் கார்களை வளைவுகளில் திருப்பும்போது மிதமான வேகத்தில் திருப்புவது அவசியம். சில வேளைகளில் டர்போலேக் பாதிப்பிலிருந்து கார் மீளும்போது அதிகப்படியான சக்தியை சக்கரங்களுக்கு அனுப்பும். இதனால், கார் கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க, மிதமான வேகத்தில் திரும்புவது நல்லது.

தினசரி இந்த விஷயத்தை மனதில் வைக்க வேண்டும். கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்தவுடன் கிளப்பக்கூடாது. எஞ்சின் சிறிது நேரம் ஐட்லிங்கில் இயங்கவிட்டு, பின்னர் எடுப்பது நல்லது. அதேபோன்று, காரை நிறுத்தி எஞ்சினை ஆஃப் செய்வதற்கு முன்னரும் ஓரிரு நிமிடங்கள் ஐட்லிங்கில் வைப்பது அவசியம்.

டர்போசார்ஜர் கார்களை இயக்கும்போது ஆயிலின் வெப்பநிலை சரியாக இருத்தல் அவசியம். ஆயில் இளகியத்தன்மையுடன் இல்லாமல் உறை நிலைக்கு செல்லும்போது, கார் எஞ்சினுக்குள் அது வேகமாக சுழலும் தன்மை இருக்காது.

மேலும், டர்போசார்ஜர் வேகமாக சுழலும்போது அதனை குளிர்விப்பதற்கு ஆயில் சரியான வெப்ப நிலையில் இருப்பது அவசியம். இதற்கு இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் வெப்ப மானியில் சரியான அளவு வெப்ப நிலை இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு காரை கிளப்பவும்.

டர்போசார்ஜர் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை சரியான முறையில் பராமரிப்பதும் அவசியம். கார் தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்த இடைவெளிகளில் சர்வீஸ் செய்து விடுங்கள். அவ்வப்போது எஞ்சினில் ஏற்படும் சிறிய பிரச்னைகளையும் தவறாமல் கவனித்து சரிசெய்வதும் நீடித்த உழைப்பை கார் எஞ்சின் வழங்க வழி செய்யும்.