கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் சில குறிப்புகள்!

கார் உரிமையாளர்களுக்கு தெரிந்த அல்லது தெரியாத சில பயன் தரும் குறிப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

இப்போது எல்லா கார்களுமே ஏசி வசதியுடன்தான் வருகின்றன. எனவே, எப்போதுமே கார் கண்ணாடி ஜன்னல்களை மூடி வைத்து ஓட்டுங்கள்.

இதனால், டேஷ்போர்டு, இருக்கைகள் உள்ளிட்ட கார் இன்டீரியர் பாகங்கள் தூசி படிவது தவிர்க்க முடியும்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

குளிர்காலத்தில் சளித் தொந்தரவு இருப்பவர்கள், ஏசியை இயக்கும்போது முழுமையான குளிர்ச்சி தரும் மோடில் வைக்காமல் சற்றே வெதுவெதுப்பாக இருக்குமாறு வைத்துக் கொள்வது சிறந்தது.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

ஜன்னலை மூடி வைத்து ஓட்டும்போது, வெளிப்புறத்தில் இருந்து காருக்குள் கெட்ட வாடை வருவதை தவிர்க்க முடியும். வேகமாக செல்லும்போது கார் ஜன்னலை மூடி வைத்து ஓட்டும்போது மைலேஜ் சிறப்பாக இருக்கும்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

வேகமாக பயணிக்கும்போது கார் ஜன்னல்களை திறந்திருந்தால் மைலேஜ் குறைவது மட்டுமல்ல, பயணிகளுக்கு காற்று வீசுவதால் ஏற்படும் உடல் சோர்வும், தலை வலியும் தவிர்க்க முடியும் என்பதை மனதில் வையுங்கள்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

ஃபோர்டிகோவில் காரை நிறுத்தியிருந்தாலும், வெளியில் நிறுத்தி வைத்திருந்தாலும் கவர் போட்டு மூடி வைப்பது சாலச் சிறந்தது. காரின் பெயிண்ட் பாதிப்பையும், தூசி படிவதையும் தவிர்க்க முடியும். சாலை ஓரத்தில் கார் நிறுத்துபவர்கள் வெளிர் நிற கார் கவர்களை வாங்கி போடவும்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

திறந்த வெளி அல்லது சாலை ஓரத்தில் பார்க்கிங் செய்யும்போது நிழலான பகுதியில் நிறுத்தினால் நல்லது. காரின் டேஷ்போர்டு மற்றும் பிளாஸ்டிங் பாகங்கள் நாளடைவில் மங்கி போவதை தவிர்க்க முடியும்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

தண்ணீர் ஓடும் பகுதியிலும், எலித் தொல்லை அதிகமுள்ள பகுதிகளிலும் காரை பார்க்கிங் செய்ய வேண்டாம். எலித்தொல்லை உள்ள பகுதிகளில் உணவுப் பொருட்களை காருக்குள் இல்லாதவாறு வைத்திருப்பது மிக முக்கியம்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

காரின் வெளிப்புறத்தில் விலை உயர்ந்த ஆக்சஸெரீகள் பொருத்துவதை தவிர்க்கவும். குறிப்பாக, வெளியில் காரை நிறுத்தும்போது, திருட்டு போவதற்கு அதிக வாய்ப்புண்டு.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

வீட்டின் வெளியே காரை நிறுத்தினால், வீட்டில் ஒரு கண்காணிப்பு கேமராவை பொருத்தி வைக்கவும். காரை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மற்றும் திருடர்களை அடையாளம் காண உதவும்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

காரில் அலங்காரத்திற்காக தேவையற்ற ஆக்சஸெரீகளை பொருத்த வேண்டாம். வாரண்டி பாதிக்கும். அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களிலேயே சர்வீஸ் செய்யவும். குறிப்பாக, வாரண்டி இருக்கும் வரை அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் சர்வீஸ் செய்யுங்கள்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

காரை சமதளமாக நிறுத்துவது நல்லது. ஒருபுறமாக பக்கவாட்டில் சாய்த்து நிறுத்தும்போது எஞ்சினுக்கு எரிபொருள் சரியாக உறிஞ்சப்படாமல் எஞ்சின் ஸ்டார்ட் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

கார் ஓட்டும்போது எப்போதுமே சீட் பெல்ட் அணிந்து ஓட்டுங்கள். சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஏர்பேக் விரிவடையாது. எனவே, அதிக விலை கொடுத்து வாங்கிய கார் கூட நீங்கள் செய்யும் சிறு தவறால் உயிருக்கே உலை வைத்துவிடும்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

தரமான வாசனை பொருட்களை மட்டுமே காரில் பயன்படுத்தவும். மிதமான நறுமணம் தரும் வாசனை பொருட்களை பயன்படுத்துவதால் அலர்ஜியை தவிர்க்க முடியும்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

காரில் லேப்டாப், மொபைல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை விட்டுச் செல்வதை தவிர்க்கவும். அப்படி இருந்தாலும், கண்ணுக்கு மறைவான இடத்தில் வைத்து செல்வதுடன், கார் பூட்டி இருக்கிறதா என்பதை ஒருமுறை உறுதி செய்து கொண்டு செல்வது அவசியம்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

கார் ஓட்டும்போது நிதானத்தை கடைபிடியுங்கள். ஒரு வினாடியில் சூழ்நிலை தலைகீழாக மாறிவிடும். எனவே, திட்டமிட்டதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே புறப்பட்டுவிடுங்கள். இது தேவையற்ற பதட்டத்தை தவிர்க்க உதவும்.

கார் உரிமையாளர்களுக்கான பயன் தரும் குறிப்புகள்!

தினசரி பயன்படுத்தும்போது காரை சுத்தமாக துடைத்து வைத்திருப்பது அவசியம். அதுபோன்று 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிலும், மாதத்திற்கு ஒருமுறை கார் வாஷ் சென்டரிலும் கொடுத்து சுத்தப்படுத்தி விடுங்கள். சரியான இடைவெளியில் பராமரிப்பு செய்யுங்கள்.

நிம்மதியான அனுபவம் நிச்சயம்!

Most Read Articles

English summary
Some Useful Tips For Car Owners.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X