டேங்க் காலியாகுற நேரத்துல பங்க் எங்கனு தேடுறீங்களா? இருக்குறத வச்சு எப்படி பங்க் வர ஈஸியா போறதுன்னு தெரியுமா?

கார்/ பைக் ஓட்டும் போது பலருக்கு பெட்ரோல் காலியாகும் நேரத்தில் தான் பெட்ரோல் நிரம்பும் பழக்கம் இருக்கிறது. இப்படியானவர்கள் இருக்கும் கொஞ்சம் பெட்ரோலை வைத்து எப்படி அருகில் உள்ள பெட்ரோல் பங்க் வரை வாகனத்தை ஓட்டி செல்வது என்று தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

வாகனம் ஓட்டும் பலருக்கும் இருக்கும் கெட்ட பழக்கம் வாகனத்தின் எரிபொருள் அளவை முறையாக பேணாதது தான். பெரும்பாலான மக்கள் வாகனத்தில் பெட்ரோல் முழுவதும் காலியாகும் தருணத்திலேயே வாகனத்திற்கு பெட்ரோல் போடுகின்றனர். இப்படியாகக் கடைசி நேரத்தில் செய்து செய்து பழக்கப்பட்டவர்கள் பல நேரங்களில் பெட்ரோல் இல்லாமல் வாகனம் நடு ரோட்டில் நிற்கும் அவகதியைச் சந்தித்திருப்பார்கள்.

டேங்க் காலியாகுற நேரத்துல பங்க் எங்கனு தேடுறீங்களா? இருக்குறத வச்சு எப்படி பங்க் வர ஈஸியா போறதுன்னு தெரியுமா?

பலர் பெட்ரோல் காலியாக போகிறது என்பதைக் கடைசி நேரத்தில் அறிந்து வாகனத்திற்காக பெட்ரோல் போடுவதற்கு பெட்ரோல் பம்பை தேடுவார்கள். இருக்கும் பெட்ரோலில் எப்படியாவது பெட்ரோல் பங்க் வரை சென்று விட வேண்டும் என நினைப்பார்கள். இப்படியான சூழ்நிலையில் பல நேரங்களில் நம்மில் பலர் சிக்கியிருப்போம். இந்த சூழ்நிலையின் போது எப்படி பெட்ரோல் குறைவாக இருந்தால் நீண்ட தூரம் பயணிப்பது எப்படி எனக் காணலாம் வாருங்கள்.

பொறுமை அவசியம்!

பலருக்கு பெட்ரோல் காலியாக போகிறது. பெட்ரோல் பங்க் அருகில் இல்லை எனத் தெரிந்ததுமே தானாக பதற்றம் தொற்றிக்கொள்ளும். எங்கே பெட்ரோல் முழுவதுமாக காலியாக நடு ரோட்டில் நாம் நின்று விடுவோமோ என்ற பயம் இந்த பதற்றத்தை உருவாக்கிவிடும். ஆனால் இந்த மாதிரியான நேரத்தில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். பதற்றப்படுவது நம்மைத் தவறான முடிவுகளை எடுக்க வைத்து விடும். பொறுமையாக முடிவெடுத்தால் நடுரோட்டில் நிற்காமல் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்குச் செல்லும் வழியைச் செயல்படுத்தலாம். பதற்றத்தில் நாம் செய்யும் சிறு தவறு கூட பெரிய விளைவுகளை உருவாக்கிவிடும்.

டேங்க் காலியாகுற நேரத்துல பங்க் எங்கனு தேடுறீங்களா? இருக்குறத வச்சு எப்படி பங்க் வர ஈஸியா போறதுன்னு தெரியுமா?

மேப்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படியான சூழ்நிலை வந்தால் நீங்கள் அருகில் இருக்கும் நபர்களிடம் பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது எனக் கேட்டுச் செல்ல வேண்டும்.அவர்கள் தரும் தகவல்கள் எவ்வளவு துல்லியமாக்க இருக்கும் எனத் தெரியாது. ஆனால் இன்று அப்படியல்ல செல்போனிலேயே மேப் வசதி மூலம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கைத் தேடி கண்டுபிடித்துவிட முடியும். அதனால் அருகில் எவ்வளவு தொலைவில் பெட்ரோல் பங்க் இருக்கிறது. அது தற்போது செயல்பாட்டில் இருக்கிறதா? பெட்ரோல்/டீசல் ஸ்டாக் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின் அங்குச் செல்லுவதற்காகத் தயார் ஆகலாம்.

ஏசியை ஆஃப் செய்யுங்கள்

நீங்கள் செல்லக்கூடிய பெட்ரோல் பங்க் இருக்கும் தொலைவைத் தெரிந்து கொண்ட பிறகு நீங்கள் உங்கள் வாகனத்தை அங்கு ஓட்டி செல்ல வேண்டும். தற்போது இருக்கும் எரிபொருள் அவ்வளவு தூரம் வாகனத்தைக் கொண்டு செல்லுமா என்பது தெரியாது. ஆனால் இருக்கும் எரிபொருளில் எவ்வளவு அதிக தூரம் கடக்க முடியுமோ அவ்வளவு கடக்க வேண்டும். அதற்காக முதலில் நாம் செய்ய வேண்டியது ஏசியை ஆஃப் செய்ய வேண்டும். இப்படி ஆஃப் செய்தால் குறைவான பெட்ரோலில் நீண்ட தூரம் பயணிக்கலாம். ஏசியை ஆன் செய்தே வைத்திருந்தால் அதற்காகக் கொஞ்சம் பெட்ரோல் குறையும்.ஏசியை ஆஃப் செய்தாலும் ஜன்னலைத் திறக்காமல் இருப்பது நல்லது.

மிதமான வேகம்

நாம் பெட்ரோல் பங்கிற்கு முடிந்தளவிற்கு விரைவாகச் செல்ல வேண்டும் என்பதற்காக நீங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டி செல்ல வேண்டும் என நினைப்பீர்கள் அது தான் தவறு அதிக வேகத்தில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் சென்றால் பெட்ரோல் அதிகமாகச் செலவாகும். அதனால் மிதமான வேகத்தில் பயணிப்பது தான் சிறந்தது. இப்படிப் பயணிப்பதால் குறைவான பெட்ரோலில் நீண்ட தூரம் பயணிக்க முடியும்

கொசுறு தகவல்

ஒரு வேலை உங்கள் வாகனம் வழியிலேயே எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்து போய் நின்றுவிட்டால் இதை மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யாதீர்கள். டீசல் காராக இருந்தால் எரிபொருள் இல்லாத போது அங்கு வெற்றிடம் உருவாகிவிடும். பின்னர் நீங்கள் டீசல் போட்டாலும் அந்த வெற்றிடத்தை வெளியேற்றினால் தான் காரை ஸ்டார்ட் செய்ய முடியும் அது மிகவும் கடினமான காரியம். இதனால் பயணம் மேலும் தாமதமாகும்.

பெட்ரோல் காரிலும் பெட்ரோல் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஸ்டார் செய்ய முயற்சித்தால் இது வாகனத்தின் இன்ஜினிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எப்பொழுதும் வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் 3க்கு 1 பங்கு எரிபொருள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் கடைசி நேரத்தில் எரிபொருள் நிரம்பும் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டு 3க்கு 1 பங்கிற்குக் கீழ் எரிபொருள் சென்றாலே மீண்டும் நிரம்பிக்கொள்ளுங்கள். இந்த தகவல் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
Steps to do while reaching petrol pump with running out of fuel
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X