மாருதி எர்டிகாவா, ஹூண்டாய் க்ரெட்டாவா? - எதை வாங்கறதுன்னு குழப்பமா?

By Saravana

இப்போது காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், பட்ஜெட்டையும் கனக்கச்சிதமாக பூர்த்தி செய்யும் இந்த கார்கள் இப்போது சிறப்பான பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஆனால், இவற்றில் ஒன்றை தேர்வு செய்வதுதான் நடைமுறையில், பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

கார் தேர்வு செய்யும்போது, பயன்பாட்டுக்கிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பட்ஜெட்டில்கூட கூடுதல் குறைவு இருக்கலாம். ஆனால், உங்கள் பயன்பாட்டுக்கு கச்சிதமான பொருந்தும் காரை தேர்வு செய்வது அவசியம். இல்லையெனில், வாங்கிய பின்னர் அவஸ்தை பட வேண்டியிருக்கும்.

அந்த வகையில், இப்போது பலருக்கு பெருங்குழப்பதை ஏற்படுத்தும், காம்பேக்ட் எஸ்யூவி, எம்பிவி கார்களில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் தந்திருக்கிறோம். இதைவைத்து எளிதாக நீங்கள் உங்கள் கார் மாடலை முடிவு செய்துவிடலாம்.

சாகச விரும்பிகள்...

சாகச விரும்பிகள்...

குறிப்பாக, இளைய சமுதாயத்தினருக்கு எஸ்யூவி மாடல்கள் சிறந்தவையாக இருக்கும். அதிலும் குறிப்பாக, ஆஃப் ரோடு செல்ல விரும்புவோர்க்கு, இந்த எஸ்யூவி வகை மாடலே சிறந்தது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

எந்தவொரு மோசமான சாலைகளிலும் தைரியமாக காரை செலுத்துவதற்கான சஸ்பென்ஷன் அமைப்பும், அதிக தரை இடைவெளியும் இருக்கும். சிறப்பான டயர்களும் கொடுக்கப்பட்டிருப்பதால், கரடுமுரடான சாலைகளில் கூட கவலையிலல்லாமல் ஓட்டிச் செல்லலாம்.

 இடவசதி

இடவசதி

காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் அதிகபட்சமாக 5 பேர் வரை பயணிக்க முடியும். எனவே, 5 பேருக்கு குறைவான உறுப்பினர் கொண்ட குடும்பத்தினருக்கு ஏற்றதாக இருக்கும்.

டிசைன்

டிசைன்

கார் வாங்குவோர் அதிகம் கவனம் செலுத்துவது டிசைனில்தான். எனவே, கம்பீரமான டிசைனுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கும் எஸ்யூவி மாடல்கள்தான் நிச்சயம் சரியான பொருத்தமாக இருக்கும்.

 ஓட்டுவது எளிது

ஓட்டுவது எளிது

எம்பிவி கார்களைவிட எஸ்யூவி கார்களை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிதாக ஓட்ட இயலும். அடுத்தடுத்த ஸ்லைடுகளில், எம்பிவி காரின் சிறப்புகளை பார்க்கலாம்.

எம்பிவி கார்களின் சிறப்புகள்

எம்பிவி கார்களின் சிறப்புகள்

அலுவலகத்திற்கு டூ வீலரில் செல்வேன். தினசரி பயன்பாட்டைவிட வெளியூர் பயணங்கள் செல்வதற்குதான் அதிகம் தேவைப்படும் என்பவர்களுக்கு, எம்பிவி கார்தான் சிறந்ததாக இருக்க முடியும். அதற்கான காரணங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 இடவசதி

இடவசதி

எம்பிவி காரின் மிக முக்கியமான சிறப்பாக, அதிக இடவசதியையே குறிப்பிட முடியும். அதிகபட்சம் ஏழு பேர் வரை செல்ல முடியும் என்பதுடன், 5 பெரியவர்கள் வசதியாக அமர்ந்து செல்ல முடியும்.

மைலேஜ்

மைலேஜ்

எஸ்யூவி கார்கள் செயல்திறனில் சிறப்பாக இருக்கும். ஆனால், எம்பிவி கார்கள் மைலேஜில் சிறப்பாக இருக்கும். எனவே, வெளியூர் பயணங்களுக்கு சரியான பட்ஜெட்டில் நிம்மதியாக சென்றுவர முடியும்.

 கையாளுமை

கையாளுமை

எஸ்யூவி கார்களைவிட எம்பிவி கார்கள் சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கும். எனவே, நெடுஞ்சாலை பயணங்களுக்கு மிகவும் ஏற்றது. எஸ்யூவி வாகனங்கள் அதிக தரை இடைவெளி கொண்டிருப்பதால், எம்பிவி கார் அளவுக்கு கையாளுமையை எதிர்பார்க்க முடியாது.

 பட்ஜெட்

பட்ஜெட்

உதாரணத்திற்கு, மாருதி எர்டிகாவையும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியையும் எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கு மேல் விலையில் வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும், உங்கள் குடும்ப அங்கத்தினரின் எண்ணிக்கையையும், பயன்பாட்டையும் பொறுத்தே இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது அவசியம். பட்ஜெட்டை பார்த்து தேர்வு செய்தால், காரை வாங்கியவுடன் பல சமயங்களில் அதிருப்தியான உணர்வே மிஞ்சும்.

Most Read Articles
English summary
SUV Vs MPV: Advantages and Disadvantages, car selection tips, கார் டிப்ஸ், ஆட்டோ டிப்ஸ், எஸ்யூவி, எம்பிவி கார்கள், யுட்டிலிட்டி கார்கள், கார் தேர்வு
Story first published: Monday, August 24, 2015, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X