வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

Written By:

அடிக்கிற வெயிலுக்கு ஏசி மட்டும் இல்லேன்னா கார் ஓட்டுறவங்கா பாடு திண்டாட்டம் தான். வெயில்ல சுத்தி ஹீட் தாங்க முடியாம, கார்ல ஏறுனதும் ஏ.சி.ய போட்டுட்டு ஒரு இரண்டு நிமிஷம் உட்காந்தாதான் மனுஷனுக்கு நிம்மதியாவே இருக்கு.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

நிலைமை இப்படி இருக்கும் போது நம்ம கார் ஏசி வேலை செய்யலேன்னா என்ன ஆகுறது? வெயில் காலத்துல ஏ.சி., பராமரிக்க விதத்துல பராமரிக்கலேன்னா அது ரிப்பேர் ஆகி நம்மலயும் ரிப்பேர் ஆக்கிடும்.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

வெயில் காலத்துல ஏ.சி.யை பராமரிக்கறதுக்குன்னு சில வழிமுறைகள் இருக்குது. இது என்னென்னனு ஒன்னொன்னா கீழே பார்ப்போம்.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

வெயிலில் காரை நிறுத்தாதீர்

காருல அதிகமா ஹீட் ஏற கூடாதுன்னா காரை முதல்ல வெயில்ல நிறுத்த கூடாது. பேஸ்மெண்ட் பார்க்கிங், மரத்தடி இப்படி எங்கயாவது நிறுத்துனா கார் சீக்கரம் ஹீட் ஆகாது.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

அப்படி பார்க்கிங் எங்கவும் கிடைக்கலேன்னா காரின் கண்ணாடியை திறந்து விடறது நல்லது. காற்றோற்றமான காருலயும் ஹீட் சீக்கரம் ஏறாது.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

அப்படி வெயில்ல காரை நிறுத்திட்டு போகும்போது காரில் உள்ள லெதர் ஷீட்ட எதையாவது வைத்து மூடனும் அப்பதான் திரும்ப வந்து காருல உட்காரும் போது சீட் சுடாமல் இருக்கும்.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

காருக்கான விண்டோ ஷெட்ஷை பயன்படுத்துறது நல்லது. இது காருக்குள் வெயிலின் தாக்கத்த குறைக்கும்.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

காற்றோற்றமா வச்சுக்கனும்

காருல எதிர்பாராத விதமா ஹீட் ஏறிடுச்சுன்னா உடனடியா ஏ.சி யை ஆன் பண்ணாம, கொஞ்ச நேரம் எல்லா விண்டோவயும் திறந்து விட்டுட்டு கார ஓட்டனும்.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

இப்படி பண்ணா காருல இருக்கற ஹீட் ஏர் எல்லாம் வெளியில போயிரும். அப்புறம் ஏசி போடலாம்.

அப்பதான் சீக்கரம் கார்ல இருக்கற ஹீட் வெளியில போகும்.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

ஏசியை குறைக்கவும்

ஏசியை போட்டதும் அதை அதிகமா வைக்காதீங்க. ஒருவேளை உங்க காருல ஆட்டோமெட்டிக் ஏசி இருந்தா அது முதல்ல ஸ்லோவா ஆரம்பிச்சு கொஞ்ச கொஞ்சமா அதிகமாகும். அது மாதிரியே மேனுவல் ஏசிலயும் செஞ்சா கார் டிரம்பரேச்சர் சரியாக இருக்கும்.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

மறு சுழற்ச்சி ஏசி

காரில் எப்பொழுதும் ஏசி மறு சுழற்சிமுறையை ஆன்லையே வச்சுக்கங்க. அப்பதான் ஏசி வெளியில இருக்கற காற்ற எடுத்து அதை குளிர்விச்சு உங்களுக்கு தரும். அதே மறு சுழற்சி ஆன் பண்ணலேன்னா ஏசி. ஆதிகம் வேலை செய்யனும் கார் குளிர் ஆக நேரம் ஆகும்.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

சரியா ஆப் பண்ணுங்க

காரில் நீங்க போக வேண்டிய இடம் வந்ததும் சரியா ஏசியை ஆப் பண்ணுங்க இல்லேன்னா ஏ.சி. ஓப்பன்ல இருக்கும் இதனால ஏ.சிக்குள்ள தூசி எல்லாம் போய் ஏ.சி.யை பாழாக்கிடும். அதற்கு அப்பறம் ஏ.சி. போடும்போது துர்நாற்றம் தான் வரும்.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

பராமரிப்பு

நம்ம கார் ஏசியை சரியான நேரத்தில சரியான இடத்துல பராமரிப்பு ரொம்ப அவசியம். அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் சர்வீஸ் விட்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு ஏர் பில்டர்களை மாற்றனும்.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

சரியான குளிரை பராமிரியுங்கள்

வெளியில் அதிகமாக வெயில் இருக்கும் போது காருக்குள் அதிக குளிர் இருக்கற மாதிரி வச்சுக்காதீங்க இந்த மாறுதலை நம்ம உடம்பு தாங்காது.

வெயில் காலங்களில் உங்கள் கார் ஏ.சி.யை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

குழந்தைகளிடம் கவனம்

வெளியில் வெயில் அதிகம் இருக்கும்போது, காரை நிறுத்திவிட்டு ஏ.சி., ஆன் செய்து, கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு குழந்தைகளை வைத்திருக்காதீர் தீடீர் என மூச்சு திணறல் கூட ஏற்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01.ராங் சைடில் வரும் வாகனங்களின் டயரை கிழிக்கும் வேகத்தடையை அகற்ற உத்தரவு

02. டாடா டியாகோ காருடன் மோதிய டிராக்டர் நிலைமைய பார்த்தீங்களா?

03.இனி நீங்களும் சொகுசு ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்.

04. புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் விற்பனைக்கு அறிமுகம்: விபரம்!

05.புதிய கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

English summary
UMMER SPECIAL: THE BEST WAY TO USE YOUR CAR'S AC. Read in Tamil.
Story first published: Tuesday, April 3, 2018, 16:51 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark