ஹாலிவுட் பாணி ஹை-டெக் டிவைஸ் மூலம் 5 நிமிடத்தில் கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ்களை பயன்படுத்தி கார்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஹை-டெக் டிவைஸ்கள் இந்தியாவிலும் தற்போது பயன்படுத்தப்படுகிறது

By Arun

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ்களை பயன்படுத்தி கார்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஹை-டெக் டிவைஸ்கள் இந்தியாவிலும் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது, கார் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களையும், காரை எப்படி பாதுகாப்பது? என்பது குறித்தும் பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

கார்களை வாங்குவதை விட அதை முறையாக பராமரிப்பதும், திருட்டு உள்ளிட்ட அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதும்தான் மிகப்பெரிய விஷயம். அதுவும் ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடெஸ் பென்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இத்தகைய லக்ஸரி கார்களை பராமரிப்பதுடன் சேர்த்து திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதும் சற்று கடினம்தான்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆட்டோமொபைல் உலகம் மிகவும் நவீனமயமாகி விட்டது. பல அட்வான்ஸ்டு பாதுகாப்பு டெக்னாலஜிகள் வந்து விட்டன. எனவே திருட்டு பயமெல்லாம் இல்லவே இல்லை என மார்தட்டி கொள்வது அனாவசியமானது.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஏனென்றால் கார் ஜேக்கர்ஸ் எனப்படும் கார் திருடர்கள் மூன்று பேரை, தெற்கு டெல்லி பகுதியில் வைத்து, போலீசார் கைது செய்துள்ளனர். விலை உயர்ந்த மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பல லக்ஸரி கார்களை அவர்கள் எளிதாக திருடியுள்ளனர். இதற்காக அவர்கள் பயன்படுத்திய டெக்னாலஜி, ஹாலிவுட் படங்களை விஞ்சிவிடும் வகையில் உள்ளது.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடெஸ் பென்ஸ் போன்ற விலை உயர்ந்த லக்ஸரி கார்களை திருட, ஹை-டெக் டிவைஸ்களை கார் ஜேக்கர்ஸ் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஹை-டெக் டிவைஸ் மூலமாக, காரின் இன்ஜின் கண்ட்ரோல் யூனிட்டிற்குள் (இசியு), கார் ஜேக்கர்கஸ் உள்ளே புகுந்து விடுகின்றனர். இதனால் காரில் உள்ள பாதுகாப்பு கருவிகளால், கார் ஜேக்கர்ஸ்களுக்கு எதிராக போரிட முடியாமல் போய்விடுகிறது.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

முன்னதாக கார் மற்றும் ரிமோட் சாவி ஆகியவற்றுக்கு இடையேயான ரேடியோ சிக்னல்களை, இந்த ஹை-டெக் டிவைஸ்கள் இடைமறிக்கின்றன. இதனால் ரிமோட் சாவி மற்றும் காரின் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவற்றுக்கு இடையேயான ரகசிய இலக்கம் எனப்படும் செக்யூரிட்டி கீ டிவைஸில் பதிவு செய்யப்பட்டு விடுகிறது.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

அவ்வளவுதான். அந்த செக்யூரிட்டி கீ கிடைத்து விட்டாலே போதும். அதை பயன்படுத்தி, காரை எளிதாக அன் லாக் செய்து விட முடியும். டெல்லியில் கைது செய்யப்பட்ட கார் ஜேக்கர்ஸ், லக்ஸரி கார்களை இப்படிதான் அன் லாக் செய்துள்ளனர்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இதனிடையே இன்ஜின் இம்மொபிளிசர் என்ற ஒரு எலக்ட்ரானிக் பாதுகாப்பு டிவைஸ் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும். தற்போதைய நவீன கால கார்களில், இன்ஜின் இம்மொபிளிசர் கட்டாயம் இருக்கும். கார் திருடுபோவதை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு டிவைஸ் பயன்படுத்தப்படுகிறது.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஒரிஜினல் சாவி மூலமாக மட்டுமே காரை ஸ்டார்ட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இன்ஜின் இம்மொபிளிசர் டிவைஸானது, காரின் இன்ஜினை உடனடியாக ஆப் செய்து விடும். ஆனால் அப்படிப்பட்ட இன்ஜின் இம்மொபிளிசரையும் கூட, ஹை-டெக் டிவைஸ் மூலமாக கார் ஜேக்கர்ஸ் கட்டுப்படுத்தி விடுகின்றனர்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இந்த பணிகளுக்கு எல்லாம் இடையில், ரிமோட் சாவியில் உள்ள கோட் ஒன்றை, ஹை-டெக் டிவைஸ் காப்பி செய்து வைத்திருக்கும். பின்னர் காரின் கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி, புதிய சாவியை பயன்படுத்தி கொள்ளும் வகையிலான ஏற்பாடுகளை கார் ஜேக்கர்ஸ் செய்து விடுகின்றனர்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

மேற்கத்திய நாடுகளில்தான் இப்படி ஹை-டெக் டெக்னாலஜியை பயன்படுத்தி கார்களை திருடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். பல ஹாலிவுட் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஆனால் தற்போது இந்தியாவிலும் கூட ஹை-டெக் டிவைஸ்களை பயன்படுத்தி கார்களை திருட தொடங்கியுள்ளனர். இது கார் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில், வருத்தமான மற்றொரு விஷயம் என்னவென்றால், இது போன்ற ஹை-டெக் டிவைஸ்கள் உள்ளூர் மார்க்கெட் மற்றும் ஆன்லைனில் மிக எளிதாக கிடைக்க தொடங்கியுள்ளன.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

வெறும் 30 ஆயிரம் ரூபாய் முதல் ஹை-டெக் டிவைஸ்கள் கிடைக்கின்றன. அதன் தன்மைக்கு ஏற்ப பல லட்ச ரூபாய் வரையிலான விலையில், ஹை-டெக் டிவைஸ்களை வாங்க முடியும். டெல்லியில் கைது செய்யப்பட்டவர்கள் தவிர, நாடு முழுவதும் உள்ள கார் ஜேக்கர்ஸ் பலரும் இப்படிப்பட்ட ஹை-டெக் டிவைஸ்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இந்த ஹை-டெக் டிவைஸ்களை பயன்படுத்தி கார்களை திருட, கார் ஜேக்கர்ஸ்களுக்கு தேவைப்படுவது வெறும் 5 நிமிடங்கள் மட்டும்தான். நீங்கள் பார்த்து பார்த்து வாங்கிய காரை, ஒரு சில நிமிடங்களில் கார் ஜேக்கர்ஸ் அவர்கள் வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு சென்று விடுவார்கள்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஒரு சில ஒர்க் ஷாப்களில், இதுபோன்ற சாதாரண டிவைஸ்களை பயன்படுத்துவார்கள். காருக்கு உள்ளேயே சாவி இருக்கும்போது, தற்செயலாக லாக் ஆகி விட்டால், அந்த காரை அன் லாக் செய்ய இதுபோன்ற டிவைஸ்களை பயன்படுத்துவார்கள். இதன் ஹை எண்ட் வெர்ஷன்கள்தான் தற்போது வந்துள்ள ஹை-டெக் டிவைஸ்கள்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இதனிடையே டெல்லியில் கைது செய்யப்பட்ட கும்பல் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பி தள்ளியுள்ளார். அதிநவீன கருவிகளின் பயன்பாடுகள் தவிர்த்து, இன்ஜின் இம்மொபிளிசரை ஹேக் செய்வது, இன்ஜின் கண்ட்ரோல் யூனிட்டை கட்டுப்படுத்துவது குறித்து அப்டேட் செய்து கொள்வதற்காக கார் ஜேக்கர்ஸ் கடுமையான பயிற்சிகளை எல்லாம் எடுக்கின்றனராம்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

டெல்லியில் கைவரிசை காட்டிய கும்பல் கை வைத்தது எல்லாம் விலை உயர்ந்த கார்கள்தான். அவ்வளவு எளிதில் திருடி விட முடியாது என நினைக்க கூடிய கார்கள்தான் அவை. ஆனால் ஹை-டெக் டிவைஸ் மூலமாக, கார்களின் செக்யூரிட்டி சிஸ்டத்தை அவர்கள் எளிதாக அன் லாக் செய்து விட்டனர்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இதுபோன்ற திருட்டுகளில் இருந்து கார்களை பாதுகாக்க வேண்டுமென்றால், ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸை கார்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். வித்தியாசமான பல ஜிபிஎஸ் டிராக்கிஸ் டிவைஸ்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

காரின் இன்ஜின் ஸ்டார்ட் ஆனால், ஜிபிஎஸ் டிராக்கிஸ் டிவைஸ் நோட்டிபிகேஷன் அளிக்கும். காரின் வேகம் குறித்த தகவல்களையும், ஜிபிஎஸ் டிராக்கிஸ் டிவைஸ்கள் தெரியப்படுத்தும்.

ஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ் மூலம் லக்ஸரி கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

இதுதவிர முன்கூட்டியே பிக்ஸ் செய்யப்பட்டு வைத்திருக்க கூடிய ஒரு இடத்தை கார் கடந்து சென்றாலும் கூட நோட்டிபிகேஷன் வந்துவிடும். அந்த காரின் இன்ஜினை ரிமோட் மூலமாகவே ஆப் செய்யலாம்.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
Thieves in India using high-tech devices to steal luxury cars like Audi, BMW & Mercedes-Benz. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X