புதுசா கார் வாங்குனா இந்த விஷயங்களை மட்டும் செஞ்சிடாதீங்க... அப்புறம் கார காயலான் கடைக்கு தான் போடனும்...

புதிதாக கார் வாங்கியவர்கள் அதை ஆரம்பத்தில் கவனமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். அப்படி புதிய காரைவாங்கும் போது அதன் ஆயுள் அதிகமாவதற்காக எதையெல்லாம் செய்யக்கூடாது? எனக் காணலாம் வாருங்கள்

கார் வாங்கும் பலர் புதிதாக கார் வாங்கும் போது பெரும் ஆர்வத்துடன் இருப்பார்கள். சொந்தமாக தனக்கென ஒரு கார் வந்ததும் அதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்ற கனவுகளில் எல்லாம் இருப்பார்கள்.

புதுசா கார் வாங்குனா இந்த விஷயங்களை மட்டும் செஞ்சிடாதீங்க... அப்புறம் கார காயலான் கடைக்கு தான் போடனும்...

ஆனால் புதிய கார் வாங்கியதும் செய்யக்கூடாத விஷயங்கள் என சில விஷயங்கள் இருக்கிறது. நீங்கள் புதிய கார் வாங்கியுள்ளீர்கள் என்றால் அதில் உள்ள இன்ஜின் அதிகம் பயன்படுத்தப்படாத இன்ஜினாக இருக்கும். அதனால் அதை நீங்கள் தாறுமாறாகப் பயன்படுத்திவிட்டால் இன்ஜின் சேதமாகிவிடும். அதன்பின் அந்த காரின் வாழ்நாள் முழுவதுமே அந்த இன்ஜினை மாற்றவே முடியாத நிலைக்கு மாறிவிடும். அதைத் தவிர்க்க நீங்கள் புதிய காரில் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

புதிய கார் வாங்கியதும் முதல் சில ஆயிரம் கி.மீ மிகவும் முக்கியம். அதனால் முதல் சில ஆயிரம் கி.மீ காரை ஓட்டும் போது இன்ஜினிற்கு அதிக பாரம் கொடுக்காமல் ஸ்மூத்தாக டிரைவ் செய்யுங்கள், ரஃப் டிரைவிங்கை தவிருங்கள். அந்த சில ஆயிரம் கி.மீ பயணத்தில் இன்ஜின் செட்டாகிவிடும். அதன் பின் ரஃப் டிரைவிங்கிற்கும் ஈடு கொடுக்கும். அதே போல சரியான நேரத்தில் முதல் சர்வீஸ் செய்வதும் மிகவும் முக்கியம்.

இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் முதல் ஆயிரமாவது கி.மீ பயணத்திலேயே சர்வீஸ்க்கு கொண்டு வரச் சொல்லிவிடுவார்கள். 1000 கி.மீ பயணித்தவுடன் காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று விடுங்கள். பெரும்பாலும் கார் நிறுவனங்கள் முதல் சர்வீஸை இலவசமாகவே செய்கின்றனர். இந்த இந்த நேரத்தில் கார் செயல்பாடு முழுவதையும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். இதில் உங்கள் காரை நீங்கள் எப்படி பயன்படுத்தியுள்ளீர்கள் என்பது தெரிந்துவிடும். அதில் நீங்கள் அதிக வேகத்தில் அல்லது ரஃப் டிரைவிங் செய்திருந்தால் சர்வீஸ் சென்டர் ஊழியர்கள் எச்சரித்து விடுவார்கள்

இந்த ஆயிரம் கி.மீ பயணம் செய்யும் வரை காரை அதிக வேகத்தில் ஓட்டாமல் இருப்பது நல்லது. என்னதான் நல்ல ரோடு கிடைத்தாலும் சரி, டிராஃபிக் இல்லாத சாலையாக இருந்தாலும் சரி, அவசரமாக இருந்தாலும் சரி வாகனத்தை எக்காரணத்தைக் கொண்டும் அதிக வேகத்தை ஓட்டாதீர்கள். அது இன்ஜினிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிகபட்சமாக 80 கி.மீ வேகம் வரை பயணம் செய்வது தான் நல்லது. அதை எக்காரணத்தைக் கொண்டும் தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

காரின் எடையும் மிகவும் முக்கியம், புதியதாக கார் வாங்கியிருப்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே நேரத்தில் காரில் ஏற்றி காரில் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிக எடையை ஏற்றிக்கொண்டு பயணிக்காதீர்கள். இந்த எடையின் பாரமும் இன்ஜின் மீது தான் மொத்தமாக விழும். அதனால் சரியான எடையில் பயணிக்க வேண்டியது அவசியம். அதிக எடை இருந்தால் இன்ஜின் பாதிப்பு அதிகமாக ஏற்படும் அபாயம் உள்ளது.

அதே போல காரின் ஆர்பிஎம் மிகவும் முக்கியம் அதிகமாகவும் ரேஸ் கொடுக்க கூடாது. குறைவாகவும் ரேஸ் கொடுக்கக் கூடாது. பயணத்தின் போது காரின் ஆர்பிஎம்மும் 1200க்கு குறையாமலும் 2000த்திற்கு அதிகமாகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த ஆர்பிஎம் தான் இன்ஜினிற்கு அதிக பாரத்தை கொடுக்காமல் இருக்கும். இதை எல்லாம் பின்பற்றி புதிய காரை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுங்கள். இது குறித்த உங்கள் தகவல்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
Things should never do in a new car
Story first published: Wednesday, November 23, 2022, 14:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X