இதை யாருமே சொல்லித் தர மாட்டாங்க... செகண்ட் ஹேண்ட்ல கார் வாங்கும் போது எதையெல்லாம் செக் பண்ணணும்?

செகண்ட் ஹேண்டில் கார் வாங்கும் போது நீங்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் செக் செய்ய வேண்டும்? என்ற விபரங்களைக் காணலாம்.

கார் வாங்கும் ஆசை உள்ள பலருக்கு புதிய காரை வாங்கும் அளவிற்கு பொருளாதார வசதியில்லை. சிலர் கார் ஓட்டி பழுவதற்காக கார் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் எடுக்கும் முடிவு செகண்ட் ஹேண்டில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது தான்.

இதை யாருமே சொல்லித் தர மாட்டாங்க... செகண்ட் ஹேண்ட்ல கார் வாங்கும் போது எதையெல்லாம் செக் பண்ணணும்?

இப்படியாகப் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட் இந்தியாவில் மிகப்பெரியது. இந்த மார்கெட்டில் எந்த அளவிற்கு நன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு ஏமாற்றும் நபர்களும் இருக்கிறார்கள். பழுதான காரை அதிக விலையில் விற்பனை செய்வது, விபரம் தெரியாதவர்களிடம் அதிக விலை சொல்லி காரை விற்பது உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அதில் எதுவும் சிக்காமல் செகண்ட் ஹேண்டில் காரை வாங்கும் போது எப்படி வாங்க வேண்டும் என்பதைத் தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

பொதுவாக ஒரு காரை செகண்ட் ஹேண்டில் விற்பனை செய்யும் போது அந்த காருக்கு எதுவும் சேதம் ஆகியுள்ளதா என்று தான் செக் செய்ய வேண்டும். காருக்கு சேதமானால் முதலில் காரின் பெயிண்ட்தான் சேதமாகும். அதனால் காரின் பெயிண்டை செக் செய்யுங்கள். சிலர் காருக்கு ரீ பெயிண்ட்டிங் செய்து புதிது போல மாற்றி விற்பனை செய்வார்கள். இதை டெஸ்ட் செய்ய காரின் இன்ஜின் ஹூடை திறந்து அதன் விளிம்புகளில் ஃபினிஷிங் எப்படி இருக்கிறது என செக் செய்தால் தெரிந்துவிடும்.

இந்த விளிம்புகளில் ரீ பெயிண்டிங் செய்யும் போது சிறப்பான ஃபினிஷிங்கை கொண்டு வர முடியாது. இதை ஃபேக்டரி பெயிண்டிங்கில் தான் கொண்டு வர முடியும். இதை செக் செய்தாலே ரீ பெயிண்டிங்கை கண்டு பிடித்து விடலாம். அடுத்தாக ஆயில் லீக், இன்ஜின் ஹூடை திறந்து இன்ஜின் ஜாயிண்ட்களில் ஏதேனும் லீக் இருக்கிறதா என செக் செய்து பாருங்கள். இப்படியாக லீக் இருந்தால் அந்த இன்ஜினை கழட்டி வேலை பார்த்துள்ளார்கள் என அர்த்தம், ஃபேக்டரி பிட்டிங்கில் வரும் இன்ஜின் லீக் ஆவதில்லை.

செகண்ட் ஹேண்ட் மார்கெட்டிற்கு வரும் பல கார்கள் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறத்தி வைக்கப்பட்டிருக்கும். இதனால் காருக்குள் எலி புகுந்து வார்களைக் கடித்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் எலெக்ட்ரிக் பாகங்கள் சரியாக வேலை செய்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். அடுத்தாக விபத்தில் சிக்கிய பல வாகனங்கள் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டிற்கு வரும். அதைக் கண்டுபிடிக்காத அளவிற்குப் பலர் காரை ரீ ஒர்க் செய்து கொண்டு வந்திருப்பார்கள்.

காரின் முகப்பு பகுதியில் அடி பட்டிருந்தால் காரின் இன்ஜின் ஹூண்ட் பெயிண்ட்டிங்கை வைத்துக் கண்டுபிடிக்கலாம் எனச் சொல்லியிருந்தோம் பக்க வாட்டில் பெரிய அளவில் சேதமாக மாற்றப்பட்டிருந்தால் அதைக் கண்டுபிடிக்கும் வழி கதவுதான். காரின் கதவுகள் அடைக்கும் இடத்தில் ஒரு ரப்பர் போல வழங்கப்பட்டிருக்கும். அதை இழுத்துப் பார்த்தால் காரின் பில்லர் மற்றும் கதவு அடைக்கும் பகுதியைச் சுற்றி ஒரு பஞ்ச் மார்க் இருக்கும். அது ஃபேக்டரியில் மட்டுமே செய்யக்கூடியது.

அந்த பஞ்ச் மார்க் இல்லை என்றால் அந்த கார் ரீ ஒர்க் செய்யப்பட்டிருக்கிறது என அர்த்தம். பஞ்ச் மார்க் இருந்தால் ஃபேக்டரி ஃபிட்டிங்கிலேயே இருக்கிறது என அர்த்தம். அடுத்தபடியாக கார் விபத்தில் சிக்கினால் உடையக்கூடியது கண்ணாடி தான். பொதுவாக ஃபேக்டரி ஃபிட்டிங்கில் வரும் கண்ணாடியில் ஒரே மாதிரியாக கோட் இருக்கும். கார் விபத்தில் சிக்கி கண்ணாடியை மாற்றியிருந்தால் காரின் கண்ணாடி கோட்கள் மாறி மாறி இருக்கும் அதை வைத்து செக் செய்து கொள்ளலாம்.

இது போக காரின் இன்சூரன்ஸ் பேப்பரை வைத்துக் குறிப்பிட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அந்நிறுவனத்திடம் கார் எண்ணைக் குறிப்பிட்டு அந்த காரை தான் வாங்கவுள்ளதாகக் கூறி அதற்கான க்ளைம் எதுவும் பெறப்பட்டுள்ளதா என்ற விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொகை, நபர், நாள், தேதி குறிப்பிட்ட தகவல்களை குறிப்பிடாமல் எத்தனை முறை க்ளைம் பெறப்பட்டுள்ளது. என்ன வகையான க்ளைம் பெறப்பட்டுள்ளது என்ற விபரத்தை மட்டும் தெரிவிப்பார்கள்.

இது போக செகண்ட் ஹேண்ட் காரை வாங்கும் போது அதை எப்படி பராமரித்துள்ளார்கள் என்பதும் முக்கியம். இதனால் நீங்கள் அதை செக் செய்ய கார் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு காரின் எண்ணைத் தெரிவித்து அதற்கான சர்வீஸ் ஹிஸ்டரியை தெரிந்து கொள்ளலாம். அவர்களும் தனிப்பட்ட தகவல்களைத் தராமல் காரின் சர்வீஸ் ஹிஸ்டரியை மட்டும் கூறுவார்கள்.

இது எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் காரை வாங்கும் போது உங்களுக்கு நம்பிக்கையான ஒரு மெக்கானிக்கை அழைத்துச் சென்று செண்ட் ஹேண்ட் காரை சோதித்து வாங்குவது சிறந்தது. சில பிராண்டட் நிறுவனங்கள் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் இறங்கியுள்ளன. அங்குக் காரை வாங்கினால் காரின் இன்ஜின் மற்றும் உதிரி பாகங்களுக்கு வாரண்டி கிடைக்கும்.

இதுவே ஆன்லைனில் நேரடியாகக் காரை விற்பவரைத் தொடர்பு கொண்டு காரை வாங்கினால் நீங்கள் காரை பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு வாங்க முடியும். மேலும் உங்களுக்குத் தேவையான தகவல்களை விற்பனை செய்பவரே நேரடியாகத் தருவார். காரை வாங்கிய பின்பு ஏதேனும் பிரச்சனை வந்தாலும் அது குறித்த சந்தேகங்களை அவரிடம் கேட்க முடியும்.

நீங்கள் செகண்ட் ஹேண்டில் கார் வாங்க வேண்டும் என எண்ணினால் இந்த டிப்ஸ்கள் நிச்சயம் உங்களுக்கு உதவும் இதையும் தாண்டி நீங்கள் கார் மெக்கானிக் அல்லது கார் குறித்து நன்கு தெரிந்த உங்களுக்கு நம்பிக்கையான ஒரு நபரை உடன் அழைத்துச் சென்று காரை தேர்வு செய்வது சிறந்தது.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
Things to check before buying a used car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X