ஏமாத்து வேலை நடக்குது! சர்வீஸ் சென்டரிலிருந்து காரை டெலிவரி எடுக்குறதுக்கு முன்னாடி இதெல்லாம் செக் பண்ணுங்க!

நாம் நம் கார்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிக்க வேண்டியது அவசியம். இதற்காகக் காரை சர்வீஸ் சென்டரில் கொண்டு சென்று விடுவோம். அதன்பின் சர்வீஸ் சென்டரிலிருந்து காரை திரும்ப எடுக்கும் போது காரில் எதையெல்லாம் நாம் பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்

எந்த வாகனமாக இருந்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். சரியாகப் பராமரிப்பு இல்லாத கார் நடு வழியில் பிரேக் டவுண் ஆகி நின்று விடும். இதை தவிர்க்க ஒரு நல்ல சர்வீஸ் சென்டரில் சென்று காரை சர்வீஸ் செய்ய வேண்டும். பெரும்பாலும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் காரை சர்வீஸ் விடலாம். இது எல்லாம் கார் வைத்திருக்கும் நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் தான்.

ஏமாத்து வேலை நடக்குது! சர்வீஸ் சென்டரிலிருந்து காரை டெலிவரி எடுக்குறதுக்கு முன்னாடி இதெல்லாம் செக் பண்ணுங்க!

ஆனால் சர்வீஸ் சென்டரில் காரை சர்வீஸ் செய்தாலும் அங்கும் பல ஏமாற்றப்படும் சம்பவங்கள் நடந்துள்ளதை நாம் கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக காரின் புதிய உதிரிப்பாகங்களைக் கழட்டிவிட்டு பழைய உதிரி பாகங்களைப் போடுவது இப்படியா சர்வீஸ் சென்டர்களிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளது. அதனால் இந்த பதிவில் நாம் சர்வீஸ் சென்டரிலிருந்து காரை டெலிவரி எடுக்கும் போது நாம் ஏமாறாமல் இருக்க எதை எல்லாம் செக் செய்ய வேண்டும் என்பதை காணலாம் வாருங்கள்.

ஒர்க் ஷீட்

ஒவ்வொரு சர்வீஸ் சென்டரும் காரை வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு வந்ததும், காரில் என்னென்ன விஷயங்களை எல்லாம் சரி செய்ய வேண்டும் மாற்ற வேண்டும் என அனைத்தையும் காரை நீங்கள் கொடுக்கும் போதே நோட் செய்து விடுவார்கள். நீங்கள் காரை எடுக்கும் போது இவையெல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டதா? ஏதாவது உதிரிப் பாகத்தை மாற்ற வேண்டியதாகக் குறிப்பிட்டிருந்தால் அது மாற்றப்பட்டுவிட்டதா? இதை செக் செய்து கொள்ளுங்கள்

பில்

நீங்கள் ஒவ்வொரு முறையும் சர்வீஸ் சென்டரில் காரை சர்வீஸ் செய்யும் போது அந்த காருக்கான விரிவான பில் அந்த காரின் உரிமையாளருக்கு வழங்கப்படும். அதைத் தெளிவாகப் படித்துக்கொள்ளுங்கள், எது எல்லாம் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது. எது எதற்கெல்லாம் உங்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை செக் செய்து கொள்ளுங்கள் காரை சர்வீஸ்க்கு விடும்போது உத்தேசமாக இவ்வளவு செலவாகும் எனச் சொல்லி தொகையையும் பில்லின் மொத்த தொகையை மட்டும் சரி பார்ப்பது சரியான விஷயம் கிடையாது. இதனால் ஒவ்வொரு விஷயத்தையும் சரியாக செக் செய்து கொள்ளுங்கள்.

பிரேக் ஆயில்/ கூலெண்ட்

இன்ஜின் கூலண்டை குறிப்பிட்ட கி.மீ பயணத்திற்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும். இது அதன் பிறகு தனது தன்மையை இழந்துவிடும். இதே போல பிரேக் ஃப்ளூயிடையும் அவ்வப்போது மாற்ற வேண்டும். இது எல்லாம் மாற்றப்பட்டுவிட்டதா எனப் பின்னர் செக் செய்வது சாத்தியம் கிடையாது. இதனால் இதை எல்லாம் இறுதியாக உங்கள் கண் முன் செய்ய வேண்டும் என நீங்கள் கோரலாம். இதற்காக காரின் உரிமையாளர்கள் சர்வீஸ் சென்டருக்குள் அனுமதிக்கப்படுவர். அப்படியாகச் சென்று பார்ப்பது நமக்கு ஒரு திருப்தியைத் தரும்.

கியர் ஆயில் / இன்ஜின் ஆயில்

காருக்கு சர்வீஸ் செய்யும் போது ஆயில் மாற்றுவது சாதாரணமாக விஷயம் தான். இந்த ஆயில் மாற்றப்பட்டுள்ளதா என்பதை காரின் ஆயிலின் நிறத்தை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆயில் லேசான எடையுடனும், கிளீனாகவும் இருக்க வேண்டும். இதை கார்களில் சோதனை செய்யக் கருவிகள் இருக்கும் அதை பயன்படுத்தி சோதனை செய்து கொள்ளுங்கள். பல நேரங்களில் சர்வீஸ் சென்டர்களில் இந்த ஆயில் மாற்றுவதில் தான் முறைகேடு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் பல உள்ளது.

டெஸ்ட் டிரைவ்

காரை சர்வீஸ் செய்து எடுத்தும், சர்வீஸ் செய்த நபருடன் சிறிது தூரம் காரை ஓட்டி சென்று பார்ப்பது நல்லது அப்பொழுது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அல்லது நீங்கள் சொன்ன பிரச்சனை சரியாகாமலிருந்தால் அதை உடனடியாக அவரிடம் சொல்லிச் சரி செய்துவிட முடியும். காரை டெலிவரி எடுத்த பின்பு அந்த பிரச்சனை சரி செய்ய வில்லை என்று உங்களுக்குத் தெரிந்தால் அதற்கு சர்வீஸ் சென்டர் பொறுப்பாகாது. அதனால் காரை டெலிவரிஎடுக்கும் முன் ஒரு டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது தான் என்றுமே நல்லது!

நீங்கள் உங்கள் காரை முறையாகப் பராமரித்தால் அது உங்களுக்கு எந்த பெரிய செலவுகளையும் இழுத்துவிடாது. இதே போல முறையான பராமரிப்பு இருந்தால் அதன் ஆயுளும் கூடும். அதே நேரத்தில் பராமரிப்பில்லாத கார் தற்போது நன்றாக ஓடினாலும் எதிர்காலத்தில் பெரிய செலவுகளை இழுத்துவிடும். இதுபோல வாகனத்தின் ஆயுளும் வேகமாகக் குறைய ஆரம்பித்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

Most Read Articles
English summary
Things to check in your car before taking delivery from service center
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X