பார்க்க ஒரிஜினல் மாதிரி இருக்கும் ஆனா சைனா பீஸை மாத்தி கொடுத்திருவாங்க! மியூசிக் பிளேயரை பொருத்துவதில் கவனம்

இன்று காருக்கு மியூசிக் பிளேயரை அனைவரும் பொருத்தி வருகின்றனர். வெளிச்சந்தையில் மியூசிக் பிளேயர் பொருத்துவது அதிக ஏமாற்று வேலை நடக்கும் இடமாக இருக்கிறது. பலர் இப்படியாக மியூசிக் பிளேயரை பொருத்துவதில் ஏமாற்றப்படுகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

நீங்கள் சொந்தமாக கார் வைத்திருக்கிறீர்களா? உங்கள் காரில் புதிதாக மியூசிஸ் சிஸ்டம் இஸ்டால் செய்யும் ஐடியாவில் இருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் அதைச் செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. இது உங்களுக்குத் தெரிந்தால் தான் மியூசிக் சிஸ்டம் இஸ்டால் செய்த பிறகு எந்த பிரச்சனை இல்லாமல் இருக்கும். மேலும் எந்த விதமான ஏமாற்று வேலையிலும் சிக்காமல் இருப்பீர்கள். காருக்கு மியூசிக் சிஸ்டம் இஸ்டால் செய்வதில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடக்கிறது. அதைப் பற்றி விரிவாகக் காணலாம்

பார்க்க ஒரிஜினல் மாதிரி இருக்கும் ஆனா சைனா பீஸை மாத்தி கொடுத்திருவாங்க! மியூசிக் பிளேயரை பொருத்துவதில் கவனம்

மார்கெட்டில் பல போலியான மியூசிக் பிளேயர்கள் விற்பனையாகிறது. சிலர் போலியான பொருளை அசல் பொருளின் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். இப்படியான போலியான பொருளை வாங்கி இன்ஸ்டால் செய்து விட்டால் சில காலங்களில் இது பாழாகிவிடும். உங்கள் பணமும் இதில் வீணாகிவிடும். இப்படியாக நடக்கும் ஏமாற்று வேலைக்கு நீங்கள் பலி கடா ஆகிவிடுவீலர்கள். சரி அப்படி என்றால் சரியான பொருளை எப்படிக் கண்டுபிடிப்பது எனக் காணலாம்.

வெளிப்புறத்தோற்றம்

நீங்கள் முதலில் ஒரு மியூசிக் பிளேயரை வாங்க முடிவு செய்தால் அதை வாங்கி நீங்களே செக் செய்து பாருங்கள். அதன் லோகோ, அதில் உள்ள பிற தகவல்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என செக் செய்து பாருங்கள். சில மோசமான அல்லது போலியான மியூசிக் பிளேயர்களை பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிட முடியும். அதனால் முதலில் அதை நீங்கள் கையில் வாங்கி செக் செய்து பாருங்கள். மெக்கானிக் அல்லது வேறு நபர்களிடம் கொடுத்து நீங்கள் பார்க்காமலேயே இன்ஸ்டால் செய்யச் சொல்லிவிடாதீர்கள்.

வாசம் மற்றும் எடை

மார்கெட்டில் விற்பனையாகும் பல போலியான மியூசிக் பிளேயர்கள் ஒரிஜினலை விட எடை குறைவாக இருக்கும். தூக்கிப் பார்த்தால் காற்று போல இருக்கும் பெரும்பாலான மியூசிக் பிளேயர்கள் போலியானவையாக இருக்கலாம். அதனால் கவனமாக இருங்கள், காரில் பொருத்தப்படும் மியூசிக் பிளேயரை குறைந்த எடையில் தயாரிக்க வேண்டிய அவசியம் ஒரிஜினல் நிறுவனத்திற்கு கிடையாது. அவர்கள் வழக்கமாகத் தேவையான எடையில் தயாரிப்பார்கள், போலியான உதிரிப் பாகங்களைக் கொண்டு தயாரிப்பவர்கள் தான் குறைவான எடையில் தயாரிப்பார்கள்.

அதே போல வாசம் சில போலியான மியூசிக் பிளேயர்களை போலி நிறுவனத்தார்கள் பல்வேறு கெமிக்கலை பயன்படுத்தின அதை ஒட்டி வேலைப்பாடு பார்த்திருப்பார்கள். அந்த கெமிக்கலின் வாசம் இந்த மியூசிக் பிளேயரில் இருக்கும். அதனால் அப்படியான ஏதாவது தேவையில்லாத கெமிக்கல் வாசம் வருகிறதா என்பதையும் செக் செய்து கொள்ளவும்.

இறுதியாக நீங்கள் வாங்கியுள்ள மியூசிக் பிளேயர் ஒரிஜினல் தானா என்பதை நீங்கள் ஆன்லைன் மூலம் செக் செய்து கொள்ளுங்கள். ஆன்லைனில் உள்ள தகவல்களை ஒப்பீட்டு பார்ப்பது, ஆன்லைனில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் புகைப்படங்களை ஒப்பீட்டு பார்ப்பது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். சில நிறுவனங்கள் வாரண்டிக்காக ஆன்லைனில் பதிவு செய்யச் சொல்லிருப்பார்கள். அதன் படி பதிவு செய்ய முடிகிறதா என்பதையும் செக் செய்து பாருங்கள். இனி உங்கள் காருக்கு மியூசிக் பிளேயர் பொருத்தும் போது உஷாராக இருங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Things to keep in mind before installing a music system in your car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X