விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போயிடாதீங்க! கார் வாங்குறதுல எவ்வளவு சிக்கல் இருக்குது தெரியுமா?

கார் வாங்கும் போது பலர் காரின் விலை, இஎம்ஐ, ஆகிய விஷயங்களை மட்டும் கணக்கிடுகின்றனர். இதனால் கார் வாங்கிய பின்பு வரும் செலவுகளைப் பார்த்துச் சமாளிக்க முடியாமல் காரை விற்கும் முடிவுக்கு வருகின்றனர். இதனால் கார் வாங்கும் போது நாம் எந்தெந்த செலவுகளை எல்லாம் நாம் யோசிக்க வேண்டும் என இங்கே விரிவாக வழங்கியுள்ளோம் காணலாம் வாருங்கள்

கார் வாங்குவது என்பது பலருக்கு பெரும் கனவாக இருக்கிறது. பலர் தன் வாழ்நாள் முழுவதும் தான் பணம் சேர்த்து வைத்து கார் வாங்க வேண்டும் என்பதற்காகத் தனது மாத வருமானத்தில் பல கஷ்டங்களையும் மீறி ஒரு குறிப்பிட்ட பணத்தை கார் வாங்குவதற்காகச் சேர்த்து வைக்கிறார்கள். சிலர் தன் வருமானத்தின் பெரும் பங்கை கார் வாங்கியதற்கு இஎம்ஐயாக செலுத்தி வருகின்றனர்.

விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போயிடாதீங்க! கார் வாங்குறதுல எவ்வளவு சிக்கல் இருக்குது தெரியுமா?

இது ஒரு புறம் இருக்க எவ்வளவுக்கு எவ்வளவு கார் விற்பனை அதிகமாகிறதோ அதே அளவிற்கு செகண்ட் ஹேண்ட் கார் சந்தையும் அதிகமாகிறது. ஆர்வமாக கார் வாங்கும் பலர் அதன்பின்னர் பட்ஜெட் பிரச்சனை வந்து காரை நஷ்டமானாலும் பரவாயில்லை என செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். பல கனவுகளுடன் கார் வாங்கிய பலர் அதற்காகக் கடனாளியாக மாறியது தான் மிச்சம் என வருத்தப்படும் நிலையும் இங்கு உள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் கார் வாங்கும் போது அதற்கு ஆகும் செலவு, உள்ளிட்ட விஷயங்களை முறையாகக் கணக்கிடாதது தான் எனத் தெரிகிறது. தன் வருமானம் எவ்வளவு அதில் எவ்வளவு பணத்தை காருக்காக செலவு செய்யலாம் எனக் கணக்கிடுவது முதல் ஒரு காருக்கான விலையிலிருந்து அந்த காரை வாங்கிய பின்பு அதற்கான செலவுகளை முன்பாக யோசிக்காமல் இருப்பது தான் முக்கியமான காரணம். தற்போது இந்த பதிவில் ஒரு காரை வாங்கும் போது அதற்கான செலவுகளாக எதை எல்லாம் கணக்கிட வேண்டும் என்று தான் காணப்போகிறோம்.

விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போயிடாதீங்க! கார் வாங்குறதுல எவ்வளவு சிக்கல் இருக்குது தெரியுமா?

காருக்கான விலை

பலர் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தரும் விளம்பரங்களில் காரின் விலையைப் பார்த்துவிட்டு இவ்வளவு பணம் கொடுத்தால் போதும் காரை சொந்தமாக்கிக்கொள்ள முடியும் என நினைத்துக்கொண்டு கார் வாங்க வருகின்றனர். ஆனால் விளம்பரங்களில் குறிப்பிட்ட தொகை காருக்கான விலை மட்டுமே ஆனால் ஒரு கார் வாங்க வேண்டும் என்றால் அதற்கு இன்சூரன்ஸ், சாலைவரி, மாநில வரிகள், டீலர் ஹேண்டிங் கட்டணம், காருக்கான உதிரிப்பாகங்கள் எனப் பல விதமான வரிகள் உள்ளது. இது எல்லாம் சேர்ந்து காரை வாங்கி சாலையில் இறக்க விளம்பரத்தில் வந்ததைவிட அதிகமான பணம் செலவாகும். பலர் இதைப் பற்றி யோசிக்காமல் காரை வாங்கும் முடிவை எடுக்கின்றனர்.

லோன்

இன்று பலர் லோன் மூலம் காரை வாங்குகின்றனர். அவர்கள் அந்த அப்பொழுதும் காருக்கான பணத்தை மாத தவணையில் செலுத்தினால் போதும் என நினைக்கின்றனர். ஆனால் நீங்கள் உங்கள் கார் மீது கடன் வாங்குகிறீர்கள். அதற்கு உங்களுக்குக் கடன் வழங்கிய நிறுவனம் வட்டி வசூலிக்கும். இதுவும் காருக்கு நீங்கள் செய்யும் செலவு தான். இந்த வட்டியையும் நீங்கள் உங்கள் வருமானத்திலிருந்து காருக்காக செலவு செய்வதாகக் கணக்கிட வேண்டும்.

இன்சூரன்ஸ்

இந்தியாவிற்கு வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் அதற்கு இன்சூரன்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும். புதிய வாகனம் வாங்கும் போதும் இன்சூரன்ஸ் செலுத்த வேண்டும், அதைக் குறிப்பிட்ட ஆண்டிற்கு ஒரு முறை அதைப் புதுப்பிக்க வேண்டும். அதற்கான செலவையும் நாம் கணக்கிட வேண்டும். அதுவும் நம் கையிலிருந்து செலவு செய்ய வேண்டிய பணம் தான் என்பதால் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எரிபொருள் செலவு

இந்தியாவில் கார் வாங்கி விற்கும் முடிவுக்கு வரும் பலர் அந்த முடிவை எடுக்க முக்கியமான காரணம் காருக்கு பெட்ரோல் போட்டு முடியவில்லை என்பது தான் கார் வாங்குகிறீர்கள் என்றால் எதற்கு எரிபொருள் ஊற்றிப் பயணிக்க வேண்டும். அதற்காகச் செலவு செய்ய வேண்டும். அதனால் நீங்கள் எவ்வளவு பயணம் செய்வீர்கள், உங்கள் வாகனம் எவ்வளவு மைலேஜ் தரும் என்பதைக் கணக்கிட்டு அதற்கான செலவுகளைச் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் கார் வாங்கிய சில மாதங்களிலேயே அதை நஷ்டத்தில் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

சர்வீஸ்

புதிதாக கார் வாங்கினால் முதலாமாண்டு சர்வீஸ் பெரும்பாலும் இலவசமாகத் தான் இருக்கும். ஆனால் அடுத்தடுத்து வரும் சர்வீஸ்களை நீங்களே தான் செய்து கொள்ள வேண்டும். அதற்கான பணத்தைச் செலவு செய்ய யோசித்தால் பின்னர் பெரிய செலவை இழுத்துவிட்டுவிடும். அதனால் சரியான நேரத்தில் சர்வீஸ் செய்ய வேண்டும். இது மட்டுமல்ல இலவச சர்வீஸ் செய்யும் போது காருக்கான இன்ஜின் ஆயில் மற்றும் மற்ற உதிரிப்பாகங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதையும் நீங்கள் செலவு செய்து மாற்றிவிடுங்கள்.

பராமரிப்பு

காரின் டயரை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற்ற வேண்டும். காருக்கு அவ்வப்போது வீல் அலைன்மென்ட் செய்ய வேண்டும். காரின் ஏசிக்கான கேஸை அவ்வப்போது ரீஃபில் செய்ய வேண்டும். இப்படியாக ஒரு காரை வாங்கினால் அதற்கு பராமரிப்பிற்காக சில செலவுகளை நீங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் செய்ய வேண்டும். இதுவும் காரை வாங்கும் முன்பு அதற்கான எதிர்வரப்போகும் செலவுகளாக நாம் கணக்கிட வேண்டியவை,

பார்க்கிங்/ டோல்கேட்

கார் வாங்குவது முக்கியமல்ல அதை முறையாகப் பாதுகாக்க வேண்டியதும் நம் கடமை தான். காரை பார்க்கிங்கில் நிறுத்த வேண்டும். உங்கள் வீட்டிலேயே அதற்கு இடம் இருந்தால் பரவாயில்லை. ஆனால் இல்லை என்றால் நீங்கள் தனியார் பார்க்கிங்கிற்கு நீங்கள் பணம் செலுத்தி காரை பார்க்கச் செய்ய வேண்டும். மேலும் காரை தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டி செல்லும் போது சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும். இதுவும் கார் வாங்கிய பின்பு வரும் முக்கியமான செலவுகளில் ஒன்று.

கார் மதிப்பு குறையும்

ஒரு கார் என்பது மதிப்பு கூட்டும் பொருள் அல்ல அது உங்கள் வாழ்க்கைக்கான தரத்தை உயர்த்தினாலும் அதன் மதிப்பு நாளாக நாளாகக் குறைந்து கொண்டே தான் வரும். ஒரு கார் வாங்கி ஒரு ஆண்டிற்குப் பிறகு அந்த கார் வாங்கி தொகையிலிருந்து 20 சதவீத மதிப்பை இழந்துவிடுகிறது. அதன் பின்பு படிப்படியாக அதன் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. அதனால் காரின் மதிப்பு குறைவையும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இதை நாங்கள் உங்களைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை. எதைச் செய்தால் முறையான திட்டமிடலுடன் செய்ய வேண்டும். கார் வாங்கும் போது இதையெல்லாம் யோசிக்காமல் காரை வாங்கினால் நீங்கள் இந்த செலவுகள் வரும் போது சமாளிக்க முடியாமல் காரே வேண்டாம் என்ற முடிவுக்கு வரக்கூடும். இதனால் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீங்கள் கார் வாங்கும் முன்பு இதையெல்லாம் நிச்சயம் யோசித்து முடிவு செய்யுங்கள். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Things to think about While budgeting to buy a new cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X