டிரான்ஸ்ஃபோர்ட் நிறுவனங்களிடம் பைக்கை ஒப்படைக்கும் போது நாம் செய்ய வேண்டிய கடமைகள்..!!

வெளியூர்களுக்கு எடுத்து செல்ல டிரான்ஸ்ஃபோர்ட் நிறுவனங்களிடம் பைக்கை ஒப்படைக்கும் போது நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகள்..!!

தனியார் டிரான்ஸ்ஃபோர்ட் நிறுவனங்கள் இருசக்கர வாகனங்களை டெலிவிரி கொடுக்கும் போது, அவற்றில் சேதம் அதிகம் காணப்படுவதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் புகார் எழுந்து வருகின்றன.

டிரான்ஸ்ஃபோர்ட்டின் போது சேதமடையும் இருசக்கர வாகனங்கள்..!!

சமீபத்தில் கேரளாவில் இருந்து மனாலிக்கு டெலிவிரி கொடுக்கப்பட்ட இருசக்கர வாகனத்தில் அதிகம் சேதம் காணப்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் சமூகவலைதளத்தில் கருத்து பகிர்ந்திருந்தார்.

இதன் மூலம் வாகனங்களை இடமாற்றி தரும் தனியார் நிறுவனங்கள் மீது பல வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கும் விதமான தகவல்களும், புகைப்படங்களும், செய்திகளும் வெளிவந்தன.

டிரான்ஸ்ஃபோர்ட்டின் போது சேதமடையும் இருசக்கர வாகனங்கள்..!!

இந்த சம்பவத்தால் வாகனங்களை டிரான்ஸ்ஃபோர்ட் செய்வதற்கான விழிப்புணர்வு தரக்கூடிய தகவல்கள் பல வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாகி வருகிறது.

இருந்தாலும், தொடர்ந்து பல தனியார் டிரான்ஸ்ஃபோர்ட் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் புகார் எழுந்து தான் வருகின்றன.

இருசக்கர வாகனங்களை டிரான்ஸ்ஃபோர்ட் செய்யும் போது, அதில் சேதம் ஏற்படும் அளவிற்கு அப்படி என்ன தான் நடக்கிறது..?

குறைபாடான பேக்கிங்

குறைபாடான பேக்கிங்

ஒரு பொருளை உரியவரிடம் சேர்க்க அதற்கு பேக்கிங் தான் முக்கியம். அதற்கு முக்கியத்துவம் தராத பொருட்கள் தற்போதைய வாகனங்கள் செல்லும் விதங்களால் சேதமடையத்தான் செய்யும்.

குறிப்பாக அதிக மதிப்புப்பெற்ற வாகனங்களை டிரான்ஸ்ஃபோர்ட் செய்ய உரிய பேக்கிங் தேவை. அதை பெரும்பாலான டிரான்ஸ்ஃபோர்ட் நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்பது வாடிக்கையாளர்களின் புகாராக இருக்கிறது

டிரான்ஸ்ஃபோர்ட்டின் போது சேதமடையும் இருசக்கர வாகனங்கள்..!!

இதுவே வாகனங்களை நிறுவனங்களிடம் இருந்து திரும்பப் பெறும் போது வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துவிடுக்கின்றனர். மேலும் வாகனங்களை கையாள்வதிலும் நிறுவனங்கள் அலட்சியம் காட்டுவதாகவும் புகார் எழுகின்றன.

பேக்கிங் செய்யும் முறை

பேக்கிங் செய்யும் முறை

  • கண்ணாடிகளான விளக்குகள் கொண்ட பாகங்களை உள்ளே கவர் வைத்து பிளாஸ்டிக் சாக்குகள்கொண்டு கட்டவேண்டும்.
  • தெர்மோகோல் இருந்தால், அவற்றையும் சேர்த்தே பயன்படுத்தலாம்.
  • பிறகு மெட்டல், பிளாஸ்டிக் பாகங்களை துணி சாக்கு பைகள் இருந்தால் அதை வைத்து கவர் செய்யவேண்டும்.
  • எந்த இடத்திலும் நழுவாமல் இருக்க, பிளாஸ்டிக் கயிறு அல்லது சனல் கயிறைக்கொண்டு பேக்கிங்கை இறுக்க வேண்டும்.
  • கயிறுகள் அதிகளவில் தற்போது பயன்படுத்துவது கிடையாது. அனைத்தும் செலஃபென் டேப் மூலம் தான் ஒட்டப்படுகின்றன.
  • பேக்கிங்கிற்கு பிறகு

    பேக்கிங்கிற்கு பிறகு

    • இருந்தாலும், உள்ளே ஒரு பிளாஸ்டிக் பொருட்களை வைத்து டேப்பை சுற்றுவது சால சிறந்தது.
    • பேக்கிங் ஏரியாவில் இருந்து, தள்ளு வண்டி உடன் கூடிய இரும்புக் கூண்டில் பைக்கை ஏற்றும் போது , அது நிச்சயம் பிளாஸ்டிக் பைகள்கொண்டு கவர் செய்திருக்க வேண்டும்.
    • கூண்டில் ஏற்றப்பட்ட பிறகு பைக் ஆடாமல் இருக்க, அதை பக்கிள் கொண்ட பிளாஸ்டிக் கயிறுகளை வைத்து இறுக்கி கட்டப்படும்.
    • டிரான்ஸ்ஃபோர்ட்டின் போது சேதமடையும் இருசக்கர வாகனங்கள்..!!
      • பிறகு அதை டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு, பைக் செல்வதற்கான வண்டியில் ஏற்றப்படும்.
      • பேக்கிங் முதல் டிராலியில் பைக்கை ஏற்றும் வரை அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிப்பார்கள்.
      • அதனால், முடிந்தவரை பேக்கிங் செய்பவர்களிடம் உடன் இருந்து, மேற்பார்வை செய்வது நல்லது.
      • டிரான்ஸ்ஃபோர்ட்டின் போது சேதமடையும் இருசக்கர வாகனங்கள்..!!

        வாடிக்கையாளர்கள் பைக்கை எந்த நிலையில் விட்டு சென்றார்களோ அதே நிலையோடு எந்த பேக்கிங்கும் செய்யாமல், வாகனங்களை டெலிவிரி பண்ணக்கூடிய சில டிரான்ஸ்ஃபோர்ட் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

        அவர்களிடமிருந்த உஷாராக இருக்கச்சொல்லி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பல விழிப்புணர்வு வீடியோக்களும் பதிவிடப்பட்டுள்ளன.

        டிரான்ஸ்ஃபோர்ட்டின் போது சேதமடையும் இருசக்கர வாகனங்கள்..!!

        இதுபோன்ற அலட்சியத்தால், முகப்பு விளக்கு, ஹேண்டில் பார், பெட்ரோல் டேங் போன்றவற்றில் சேதம் ஏற்பட்டு அதை பெறும் வாடிக்கையாளர்கள் விரக்தியின் உச்சிக்கே செல்வர்.

        டிரான்ஸ்ஃபோர்ட்டின் போது சேதமடையும் இருசக்கர வாகனங்கள்..!!

        இப்படி டிரான்ஸ்ஃபோர்ட் செய்ய வாடிக்கையாளர்கள் விட்டு சென்ற 4 ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் மிக சேதம் ஏற்பட்டதாக வாடிக்கையாளர் பதிவிட்டு, வெளியான வீடியோ அதை நிர்வாகிக்கும் நிறுவனங்கள் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன

        இதனால் டிரான்ஸ்ஃபோர்ட் நிறுவனங்களிடம் இல்லை என்றாலும், நமது பைக்கை காப்பாற்ற பப்பிள் ராப், கார்டுபோர்டு என பொருட்களை பாதுகாக்கும் சிலவற்றை நாமே பேக்கிங் செய்ய கொண்டுசெல்வது மேலும் சிறந்தது.

Most Read Articles
English summary
Despite Cage Protection Home News Motorcycles Suffer Massive Damage During Transportation. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X