மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக பயணம் செய்வது எப்படி?

Written By:

பரபரப்பாக இயங்கும் சாலைகளில் பயணிக்கும் நாம் மோட்டார் சைக்கிளின் ஆக்ஸல்ரேட்டரை பயன்படுத்துவதை விட, பிரேக்கை தான் அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம். அதனால் பிரேக் போடும்போது நாம் செய்ய வேண்டியதையும், செய்யக் கூடாததையும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.

பிரேக் போடும்போது செய்யவேண்டியவை

பிரேக் போடும்போது செய்யவேண்டியவை

  • மோட்டார் சைக்கிள்களில் பிரேக் அமைப்பை எப்போதும் மென்மையாகவே கையாளுங்கள்.
  • பிரேக் போட, அதிகப்பட்ச அழுத்தம் தேவைப்படும் போது அதன் லிவரை படிபடியாகவே உயர்த்த பழகிக்கொள்ளுங்கள்.
  • மற்றொரு முக்கியமான செயல்பாடு என்றால், முன் பின் என இரண்டும் சக்கரங்களுக்கும் சேர்த்தே பிரேக் பிடியுங்கள். இதனால் பின்பகுதியில் ஏற்படும் உராய்வு தடுக்கப்பட்டு, வண்டியின் மொத்த எடையும் முன்பகுதியில் உணரப்படும், இது வாகனத்தில் மீதான் கட்டுபாடு முழுவதுமாக உங்களுக்கு கிடைக்கும்.
 விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்?

சாலையில் டிராஃபிக் அதிகமாக இருந்தாலும், முடிந்தவரையில் உங்களை சுற்றி ஒரு சிறிய இடைவெளி இருக்குமாறு வாகனத்தை செலுத்துங்கள். காரணம், அவசர கதியில் நீங்கள் பிரேக் பிடிக்க நேரும்போது, பெரும் அச்சம் மனதில் எழும். அவற்றை சமாளிக்க அந்த இடைவெளி உங்களுக்குள் அசுவாசத்தை ஏற்படுத்தும்.

 விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்?

இருசக்கர பயணத்தின் போது சாலையில் நிச்சயம் கவனம் தேவை, குறிப்பாக நீங்கள் இருவேறு வழித்தடத்தில் போகும்போது அதிக கவனம் தேவை. கார்களும், பைக்குகளும் அதிகம் சந்தித்து கொள்ளும் நேரங்களில் டிராஃபிக் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அந்த தருணங்களில் பிரேக் உடன் கூடிய நிதானமானவே ரைடிங்கே பாதுகாப்பை தரும்.

 விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்?

இருசக்கர வாகனங்களில் வலிமையாக பிரேக் பிடிப்பது பாதுகாப்பான ஒன்று, அப்போது தான் உங்களது பின்பகுதி சக்கரம் சிறிது உயர்ந்து வண்டியின் எடை முழுக்க உங்களது கட்டுபாட்டில் வரும். அல்லது ஆண்டி லாக் பிரேக் அமைப்பு (ABS) துரிதமாக செயல்படும்.

ஆனால் இதில் உள்ள சிறிய குறைபாடு என்னவென்றால், வண்டியின் மைலேஜ் பாதிக்கப்படலாம். அனால் அதற்கு முக்கியத்துவம் தந்தால் ஆபத்து காலத்தில் அபாயத்தை சந்திக்க நேரிடும்.

பிரேக்கின் போது செய்யக்கூடாதவை

பிரேக்கின் போது செய்யக்கூடாதவை

மோட்டார் சைக்கிள்களில் பின்பகுதியை விட எப்போதும் முன் சக்கரத்திற்கான பிரேக்குகள் தான் வலிமையானவை. இதை மறந்து, அவசர காலத்தில் பின் சக்கரத்திற்கான பிரேக்குகளை நீங்கள் பயன்படுத்தினால், வண்டியின் மொத்த எடையும் உங்கள் கட்டுபாடிற்கு வராமல், பின்பகுதியில் உராய்வை ஏற்படுத்தும்.

 விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்?

சாலைகளில் மற்ற வாகன ஒட்டிகள் உங்களது வழியில் இடையூறு ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்காதீர்கள். காரணம், இதனால் உங்களது பயணத்தில் சிக்கல் ஏற்படலாம். எப்போதும் டிராஃபிக் நேர்ந்தாலும் தன்னம்பிக்கை கொண்டு வண்டியை முன் செலுத்துங்கள்.

 விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்?

அசம்பாவிதம் நேர உள்ளதற்கான வாய்ப்பை உணர்ந்தால், மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். சாலையில் உங்களது பார்வையை செலுத்தி, டிராப்பிக்கை கவனித்து, அவசர கால தருணத்தை சாத்தியமாக்கிக் கொள்ள முயலுங்கள்.

 விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்?

அவசர காலத்தில் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க, முன்பே நாம் பார்த்தது போல, சாலையில் நமக்கான வழியில் சிறிது இடைவெளியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நேரும் அபாயத்தை கடக்க இது ஒரு எளிமையான டிரிக்.

 விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்?

சில சமயம் ஆபத்தும் நேரிடும்போது சரியாக சிந்திக்க வராது தான், அதனால் தருணத்தை வீணாக்காதீர். நீங்கள் ஓட்டும் மோட்டார் சைக்கிளின் லிமிட், வேகம், பிரேக்கிங் அமைப்பு அகியவற்றை முன்பே தெரிந்து வைத்திருந்தால், அதுகூட அப்போதைய நேரத்திற்கு சமயோஜித சிந்தனையை தரலாம்.

 விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்?

உங்களது மோட்டார் சைக்கிளின் மேல் நம்பிக்கை வையுங்கள். அதை ஒட்டிசெல்லும் போது தன்னம்பிக்கையை வளருங்கள். இதை கடைப்பிடித்தால் ஆபத்து என்று ஒன்று வந்தால் அதுவே நமக்கு பாதுகாப்பாக அமையும்.

இறுதியாக, எப்போதும் ஹெல்மெட் அணியுங்கள். ஹெல்மெட் அணிந்த பிறகு, பக்கிள் போட மறக்காதீர்கள்

இந்தியாவின் பஜாஜ் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் பஜாஜ் டோமினோ 400 மாடல் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டில் மக்களின் பயன்பாட்டிற்கு வெளிவரும் பஜாஜ் டோமினோ 400 மோட்டார் சைக்கிளின் புகைப்படங்கள்.

English summary
The most important part of riding a motorcycle is braking. Here are the do's and don'ts of motorcycle braking. Read to know how to be safe while riding your motorcycle.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark