மழைக்காலத்தில் கார் 'ஹைட்ரோ - லாக்' ஆவதற்கான காரணங்களும், தவிர்க்கும் முறைகள்!

Written By:

மழைக்காலத்தில் காரை பராமரிப்பதிலும் சரி, ஓட்டுவதிலும் சரி இரட்டிப்பு கவனம் செலுத்துவது அவசியம். இல்லையெனில், சிறிய பிரச்னை கூட அல்லல் தொல்லையில் விட்டுவிடும் என்பதுடன், பர்சையும் பதம் பார்த்துவிடும்.

அதுபோன்று, மழைக்காலத்தில் காரில் ஏற்படும் பிரச்னைகளில் முக்கியமானது ஹைட்ரோ லாக். அதாவது, கார் எஞ்சினுக்கு காற்றை எடுத்துச் செல்லும் குழாய் வழியாக எஞ்சினுக்குள் தண்ணீர் புகுந்து எஞ்சின் செயலிழப்பு பிரச்னையே ஹைட்ரோலாக் என்கிறோம். இந்த பிரச்னை பாக்கெட்டை மட்டுமல்ல, நிம்மதிக்கும் வேட்டு வைக்கும். இப்பிரச்னை குறித்தும், அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் ஸ்லைடரில் காணலாம்.

ஹைட்ரோலாக்... அப்படீன்னா?

ஹைட்ரோலாக்... அப்படீன்னா?

எஞ்சினுக்கு காற்றை வழங்கும் ஏர் இன்லெட் குழாய் வழியாக எஞ்சினுக்குள் தண்ணீர் புகுந்து எஞ்சினை செயலிழக்க வைப்பதே ஹைட்ரோ லாக் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, காற்றை உறிஞ்சுவதற்கு பதிலாக கார் எஞ்சின் தண்ணீரை உறிஞ்சிவிடும்போதுதான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. எனவே, ஏர் இன்லெட் குழாய் எப்போதுமே தண்ணீர் புகாத அளவு உயரத்தில் இருப்பது அவசியம்.

அதிக செலவு

அதிக செலவு

ஹைட்ரோ லாக் ஆகும்பட்சத்தில் எஞ்சின் சிலிண்டர்களில் தண்ணீர் புகுந்துவிடுவதால் எஞ்சின் இயக்கம் திடீரென தடைபட்டுவிடும். இதனால், எஞ்சின் பாகங்களில் அதிக பாதிப்புகளும், சேதமும் ஏற்படும். இதனை சரிசெய்வதற்கான செலவுகளும் அதிகமாகும் என்பதுடன், நடுவழியில் பயணத்தின் இடையே மிகப்பெரிய தடையையும் ஏற்படுத்தி மன நிம்மதியை கெடுத்துவிடும்.

 தவிர்க்கும் முறை...

தவிர்க்கும் முறை...

மழைக்காலத்தில்தான் இந்த பிரச்னை அதிகம் ஏற்படும். ஏனெனில், கனமழை காரணமாக பள்ளங்களில் அதிக தண்ணீர் தேங்கி நிற்பதால், அதில் செல்லும் கார்களின் எஞ்சினில் தண்ணீர் புகுந்து இந்த பிரச்னை ஏற்படும். எனவே, தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளங்கள் வழியாக செல்வதை தவிர்க்கவும்.

 வேகத்தை தவிர்க்கவும்

வேகத்தை தவிர்க்கவும்

அதிவேகத்தில் காரை ஹீரோயிசமாக செலுத்துவதையும் தவிர்க்கவும். ஹைட்ரோலாக் ஆவதற்கு வேகமாக தண்ணீரில் இயக்குவதும் முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, 2,000 ஆர்பிஎம்.,க்குள்ளாகவே காரை செலுத்துங்கள். குறிப்பாக, சிறிய காரை வைத்திருப்பவர்கள் மிக மிக கவனமாக செல்ல வேண்டும்.

சிறந்த உபாயம்...

சிறந்த உபாயம்...

காரை வாங்கும்போதோ அல்லது சர்வீஸ் சென்டர் செல்லும்போதோ, உங்கள் கார் எஞ்சினின் ஏர் இன்லெட் குழாய் எங்கு இருக்கிறது. அது தரையிலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம், உங்களுக்கு ஒரு ஐடியா வந்துவிடும்.

தவிருங்கள்...

தவிருங்கள்...

சில கார் மாடல்களின் எஞ்சின் டிசைன், எளிதாக ஹைட்ரோலாக் பிரச்னை ஏற்படும் விதத்தில் இருக்கும். இதுபற்றி, சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களின் வாசகர் கருத்து பெட்டிகளில் தெரிவிக்கப்படும் ஹைட்ரோலாக் ஆகும் கார் மாடல்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு கார் வாங்கும்போது, குறிப்பிட்ட மாடல்களை தவிர்ப்பது நலம்.

 
English summary
Tips to avoid Car Engine hydrolock.
Story first published: Tuesday, July 21, 2015, 9:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark