எவ்வளவு யூஸ் பண்ணாலும் டயர் புதுசாவே இருக்கனுமா? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க போதும்!

ஒரு வாகனத்திற்கு டயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று, ஒரு வாகனம் நகர வேண்டும் என்றால் அதன் அனைத்து டயர்களும் சரியாக இருக்கவேண்டும். வாகனத்தையும் சாலையையும் இணைக்கும் ஒரே விஷயம் இதுதான். இதனால் இந்த டயர்களை சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

கார் டயர் பயன்படுத்தப் பயன்படுத்த தேய்மானம் ஆகும் தான். ஆனால் முறையாகப் பராமரித்தால் தேய்மானம் ஆகும் காலத்தை நீட்டிக்க முடியும். அதாவது ஒரு டயர் முறையான பராமரிப்பு இல்லை என்றால் 2 ஆண்டுகளில் தேய்மானம் ஆகிறது என வைத்துக்கொண்டால் முறையாகப் பராமரிப்பு செய்வதன் மூலம் அதை 4 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும். இதற்கு அவ்வப்போது டயரை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படியா டயரின் வாழ்நாளை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் எனக் காணலாம் வாருங்கள்.

எவ்வளவு யூஸ் பண்ணாலும் டயர் புதுசாவே இருக்கனுமா? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க போதும்!

சுழற்சி முறை

நீங்கள் பயன்படுத்தும் காரில் ஒவ்வொரு 5 ஆயிரம் கி.மீக்கு ஒரு முறை காரின் டயரை மாற்றுங்கள் அதாவது இடதுபக்க வீலில் உள்ள டயரை வலது பக்க வீலுக்கும், வலது பக்க வீலில் உள்ள டயரை இடது பக்க வீலுக்கும் ஒரு முறையிலும் அடுத்தமுறையில் முன்பக்கம் உள்ள டயரை பின்பக்கத்திற்கும், பின்பக்கம் உள்ள டயரை முன்பக்கத்திற்கும் மாற்ற வேண்டும். இப்படியா டயரை சுழற்சி முறையில் மாற்றுவது என்பது டயருக்கான தேய்மானத்தைச் சரிசமமாக வைக்க வழி வகுக்கும் இதனால் டயர் ஒரே பக்கமாகத் தேய்ந்து போகாமல் இருக்கும்.

வீல் அலைன்மெண்ட்:

கார் பயன்படுத்தப் பயன்படுத்த அதன் வீல் அலைன்மெண்ட் மாறிக்கொண்டே இருக்கும். இதனால் ஒவ்வொரு 10 ஆயிரம் கி.மீக்கு ஒரு முறை கார் டயரை வீல் பேலன்ஸிங் மற்றும் அலைன்மெண்டை செய்து விடுவது நல்லது. சரியான அலைன்மெண்டில் இல்லாத வில்களில் உள்ள டயர்கள் விரைவாக ஒரே பக்கமாகத் தேய்ந்து தேய்மானமாகிவிடும். இது மட்டுமல்ல கார் ஓட்டும் போது ஸ்டியரிங்கில் வைப்ரேன் வர துவங்கிவிடும்.

டயர் பிரஷர்:

காரின் டயர்களில் காற்றின் அளவு சமமாக இருக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு 2-4 வாரங்களுக்கு ஒரு முறையை காரின் டயர் பிரஷரை செக் செய்து கொள்வது நல்லது. காரின் டயரில் கார் தயாரிப்பு பரிந்துரை செய்த அளவு பிரஷரை வைத்துக்கொள்ளுங்கள். அதைவிட அதிகமாகவும் இருக்க வேண்டாம். குறைவாகவும் இருக்க வேண்டாம். அதிகமாகிவிட்டால் பயங்கர ஸ்டிஃப்பாக இருக்கும். கார் ஓட்ட சிரமமாக இருக்கும். குறைந்து விட்டால் டயர் சேதாரமாக வாய்ப்பு இருக்கிறது.

கார் வீல் போல்ட்:

கார்களில் வீல்களில் போல்ட் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் போல்ட்களே காரின் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். இதை மாற்றிவிடாதீர்கள். அப்படியே மாற்றினாலும் கார் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய அதே அளவு போல்டை பயன்படுத்துங்கள் அதிகமாக நீளத்திலோ அல்லது குறைவான நீளத்திலோ இல்லாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி இருந்தால் அது காரின் டயரில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தும்,இதனால் சஸ்பென்சன் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது.

தண்ணீரில் கவனம்:

காரை நீங்கள் தண்ணீர் அதிகமாக இருக்கும் பகுதிக்குள் காரை பயன்படுத்தினால் அல்லது காரை குறைவான நீர் ஓடும் ஓடையில் பயன்படுத்தினால் அல்லது மழை வெள்ள நேரங்களில் சாலைகளில் பயன்படுத்தினால் காரின் டயர் சேதமாக வாய்ப்பு அதிகம் இருக்கிறது. முடிந்தளவிற்கு இதைத் தவிர்ப்பது நல்லது. அந்த நேரங்களில் காரின் டயரின் பட்டன்கள் அதிகமாக இரக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்,

கூடுதல் டிப்ஸ்:

நீங்கள் காரில் ரேடிகல் அல்லது நான் ரேடிகல் டயரை பயன்படுத்தினால் அதை ஒரே ஆக்ஸிலில் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள், அதிக பட்டன் அளவு கொண்ட டயர்களை காரின் பின்பக்க ஆக்ஸிலில் பயன்படுத்துங்கள். வேறு வேறு ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்களை ஒரே காரில் பயன்படுத்த வேண்டாம். டயர்களை மாற்றும் போது ரிம்மின் அகலம் தெரிந்து கொண்டு அனுபவசாலிகளின் அறிவுரைகளின் படி மாற்றுங்கள்.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
Tips to extend your car tyre life
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X