பாட்டு கேட்கிறதுக்காகப் பணத்தை இழந்துடாதீங்க... காரில் ஸ்பீக்கர் மாற்றுவதில் நடக்கும் மோசடியில் உஷாரா இருங்க!

உங்கள் காருக்கு புதிதாக ஸ்பீக்கர் பொருத்தும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அதற்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ உங்களுக்காக.

இன்று கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களை தயாரிக்கும் போதே ஸ்பீக்கர் செட்டப்களுடன் தயாரித்து விற்பனை செய்கிறது. ஆனால் சிறிய ரக கார்களில் இந்த செட்டப் இருக்காது. இதை அவர்கள் வெளி மார்கெட்டில் வாங்கி தான் பொருத்திக்கொள்ள வேண்டும்.

பாட்டு கேட்கிறதுக்காகப் பணத்தை இழந்துடாதீங்க... காரில் ஸ்பீக்கர் மாற்றுவதில் நடக்கும் மோசடியில் உஷாரா இருங்க!

இப்படியாக உங்கள் காருக்கான ஸ்பீக்கரை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? அதற்கு முன்னர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? எந்த இடத்தில் எல்லாம் நீங்கள் ஏமாந்து போக வாய்ப்புள்ளது? மியூசிக் சிஸ்டத்தின் எந்தெந்த பாகங்கள் எப்படி வேலை செய்யும் முழு விபரங்களை இங்கே காணலாம்.

பொதுவாக கார்களில் 2 விதமான ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்படுகிறது. காம்போனென்ட் ஸ்பீக்கர், கோ ஆக்ஸில் ஸ்பீக்கர் என அழைக்கப்படுகிறது. இதில் கம்போனென்ட் ஸ்பீக்கரில் ட்விகர்களை தனியாகப் பயன்படுத்த வேண்டும். ட்விகர்கள் என்றால் சில் வாய்ஸ் ஸ்பீக்கர் என அழைப்பார்கள். இதுவே கோ ஆக்ஸில் ஸ்பீக்கர்களில் இந்த இரண்டும் சேர்ந்தே இருக்கும்.

இதில் கார்களில் கோ ஆக்ஸில் ஸ்பீக்கர்களை காரின் பின்புறத்திலும், காம்போனென்ட் ஸ்பீக்கரை காரின் முன்புறத்திலும் பயன்படுத்தலாம். கோ ஆக்ஸில் ஸ்பீக்கரில் ஸ்பீக்கர் சத்தம், ட்விகர் சத்தம் தனித்தனியாக ஒலிக்கும் இந்த இரண்டும் சேர்ந்து ஒரு நல்ல அனுபவம் கிடைக்க வேண்டும் என்றால் ஸ்பீக்கரிலிருந்து சற்று தொலைவிலிருந்து கேட்க வேண்டும். அதனால் தான் இதை காரின் பின்பக்கம் இந்த ஸ்பீக்கரை பொருத்துகிறார்கள்.

கார் தயாரிப்பு நிறுவனங்களே ஸ்பீக்கர் பொருத்திக் கொடுப்பது சிலருக்குப் பிடிக்காது. அதில் சவுண்ட் குவாலிட்டி சிறப்பாக இருக்காது எனக் கருதுவார்கள். இதற்கு முக்கியமான காரணம் இதில் பயன்படுத்தப்பட்ட கோன்தான். கார் தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்தும் பெரும்பாலான ஸ்பீக்கர்களில் பேப்பர் கோன் பயன்படுத்தப்படும். ஆனால் வெளிமார்கெட்டில் சிலிக்கான கோன் கிடைக்கிறது. பேப்பர் கோனை விட சிலிக்கான கோன் தான் சிறப்பான சவுண்ட் குவாலிட்டியை தரும்.

இது போக வெளிமார்கெட்டில் ஆம்பிளிஃபையர்களும் கிடைக்கிறது. இந்த ஆம்பிளிஃபையர் மல்டி ஸ்பீக்கர் செட்டப்பிற்கு பயன்படும். இந்த ஆம்பிளிஃபையரும் தரத்திற்கு ஏற்றார் போல இருக்கிறது. இது சிறிய கார்களில் சிறப்பான சவுண்ட் எஃபைக்டை எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் உதவும்.

இந்த ஸ்பீக்கரை பொருத்துவதில் பலர் ஏமாறும் இடம் ஏற்கனவே கார் நிறுவனங்கள் பொருத்திய ஸ்பீக்கர்களை கழட்டிவிட்டு வெளிமார்கெட்டில் ஸ்பீக்கரை பொருத்தும் போது பலர் இதற்குத் தனியாக ஒயரிங் செய்ய வேண்டும் எனக் காசை கறந்துவிடுவார்கள்.ஆனால் கார் தயாரிப்பு நிறுவனம் செய்த ஒயரிங்கிலேயே வெளி மார்கெட்டில் வாங்கிய ஸ்பீக்கரையும் பொருத்திக்கொள்ள முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tips to upgrading your car speakers
Story first published: Wednesday, November 16, 2022, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X