கார் ஏசியை குளிர் காலத்துல எப்படி பயன்படுத்தனும்? தப்பா பண்ணிட்டா வெயில் காலத்துல பெரிய செலவு வந்துடும்!

குளிர் காலத்திலும் காரில் ஏசியை பயன்படுத்த வேண்டுமா? அப்படிப் பயன்படுத்த வில்லை என்றால் என்ன நடக்கும்?

கோடைக் காலங்களில் வெயில் சுட்டெறிக்கும் போது காரில் செல்பவர்கள் ஏசியை ஆன் செய்துவைத்துக்கொண்டு சுகமாகப் பயணிப்பார்கள். இது வெளியில் காலத்தில் நன்றாக இருக்கும் ஆனால் குளிர் காலத்தில்? இது குறித்து விரிவாகக் காணலாம்.

கார் ஏசியை குளிர் காலத்துல எப்படி பயன்படுத்தனும்? தப்பா பண்ணிட்டா வெயில் காலத்துல பெரிய செலவு வந்துடும்!

கோடைக் காலத்தில் நாம் ஏசியை பயன்படுத்துவதைப் போல நாம் குளிர் காலத்தில் ஏசியை பயன்படுத்துவதில்லை. கார்களில் குளிர் காலங்களில் பயணிக்கும் போது ஜன்னலை இறக்கி விட்டுக்கொண்டே பயணிப்போம். ஏசியை ஆன் செய்ய மாட்டோம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை நவம்பர் துவங்கி ஜனவரி வரை குளிர் காலம் தான்.

கிட்டத்தட்ட 3 மாதம் காரில் ஏசியை பயன்படுத்தாமல் விட்டுவிட்டோம் என்றால் ஏசி யூனிட்டில் தூசு படித்து கம்பிரஷர், கூலிங் காயில், ஏசி ஃபில்டர் உள்ளிட்டவை பாதிக்கப்படும். இதனால் குளிர்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்கும் போது ஏசியை ஆன் செய்தால் குளிர் குறைவாக இருக்கும். சிலநேரம் மனிதர்களுக்குக் கெடுதலான காற்றைக் கூட வெளிப்படுத்தும். இதனால் குளிர் காலத்திலும் ஏசியை பயன்படுத்துவது தான் சிறந்தது.

பலர் ஏசி என்றால் குளிர்விக்கும் ஒரு கருவி என்றே கருதுகின்றனர். ஆனால் ஏசி என்பது காற்றை கண்டிஷன் செய்யும் கருவி தான். இதனால் குளிர் காலங்களில் காற்றை சூடாக கண்டிஷன் செய்யும் ஆப்ஷனும் ஏசியில் இருக்கிறது. இதை ஆன் செய்தால் காருக்குள் உள்ள குளிரை போக்கி வெதுவெதுப்பான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். மேலும் குளிர் காரணமாக காருக்குள் சேர்ந்த பாக்டீரியாக்களும் அழிக்கப்படும்.

இப்படியாக ஏசியை சூடாக்குவதற்காகப் பயன்படுத்தும் போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சிறிது நேரம் மட்டுமே காரை இப்படியாகப் பயன்படுத்த வேண்டும். அதிகம் பயன்படுத்தினால் இன்ஜினிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இன்ஜீனே சீஸ் ஆகிப் போகக் கூட வாய்ப்பு இருக்கிறது.

இதனால் குளிர் காலம் தானே ஏசி எதற்கு என இந்த காலத்தில் ஏசியை ஆன் செய்யாமலேயே வைத்துவிடாதீர்கள். இந்த காலத்திலும் ஏசியை பயன்படுத்துங்கள். பயன்படுத்தும் அளவை மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து 3-4 மாதங்கள் பயன்படுத்தாமல் விட்டால் பின் ஏசி பழுதாகிவிடும்.

இப்படி ஏசி பழுதானால் நீங்கள் பின்பு கோடைக் காலம் வரும் போது அதைச் சரி செய்ய ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியது வரும். இந்த டிப்ஸ் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Tips to use your car ac in winter times
Story first published: Thursday, November 17, 2022, 13:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X