காரில் தீப்பிடிப்பதற்கான காரணங்களும், தவிர்க்கும் வழிகளும்...!!

Written By:

வாகனங்களில் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி படிப்பதும், கேள்விப்படுவதும் தொடர்கதையாக மாறி வருகிறது.

குறிப்பாக, வெயில் அதிகமிருக்கும் கோடை காலங்களில் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்த நிலையில், வாகனங்களில் தீப்பிடிப்பதற்கான காரணங்களையும், அதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

சிக்கலான நுட்பம்

சிக்கலான நுட்பம்

எளிதில் தீப்பற்றும் எரிபொருள் மற்றும் மின் சாதனங்களில் இயங்கும் வாகனங்களில் தீப்பிடிக்கும் ஆபத்து எப்போதுமே அதிகம். என்னதான் பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டாலும், பராமரிப்பு, விபத்து, சீதோஷ்ண நிலை போன்றவை வாகனங்களில் தீப்பிடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

10. டிசைன் குறைபாடு

10. டிசைன் குறைபாடு

வாகனங்களை டிசைன் செய்யும்போது, மின்சார ஒயர்கள் மற்றும் எரிபொருள் செல்லும் வழிகள் ஆகியவற்றில் கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே, வாகன டிசைன் குறைபாடுகளும் தீப்பிடிப்பதற்கான காரணங்களாகின்றன. இதனை கார் தயாரிப்பு நிறுவனங்கள் உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு சரிசெய்வது அவசியம். மேலும், டிசைன் குறைபாடுடைய கார்களை வாங்குவதை தவிர்த்தல் நலம்.

9. பராமரிப்பு

9. பராமரிப்பு

வாகனங்களின் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்தி பராமரிப்பில் வைத்திருப்பது அவசியம். தயாரிப்பாளர் பரிந்துரை செய்த கால இடைவெளிகளில் பரிசோதனைகள் மேற்கொள்வதும் அவசியம். இல்லையெனில், பாகங்களில் பழுது ஏற்பட்டு தீப்பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

8. விபத்து

8. விபத்து

வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது எரிபொருள் தொட்டி உடைந்து அல்லது எரிபொருள் கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்கிறது. மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்குவதால், விபத்துக்களை தவிர்க்க முடியும். மேலும், மோதல் நிகழும்போது மின்சாதனங்களிலிருந்து ஏற்படும் மின்கசிவு அல்லது தீப்பொறிகள் மூலமாகவும் தீப்பிடிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

7. போலி உதிரிபாகங்கள்

7. போலி உதிரிபாகங்கள்

அனைத்து கார் நிறுவனங்களும் வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் உதிரிபாகங்களை தவிர்க்குமாறு பரிந்துரைக்கின்றன. மலிவு விலையில் வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் போலி உதிரிபாகங்களும் தீப்பிடிப்பதற்கான ஒரு காரணமாகிறது. குறிப்பாக, மின்சாதனங்கள் மற்றும் உதிரிபாகங்களை தவிர்த்தல் நலம் பயக்கும்.

6. எஞ்சின் சூடு

6. எஞ்சின் சூடு

எஞ்சினில் ஆயில் அளவு மற்றும் கூலண்ட் அளவுகள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், எஞ்சின் அதிக சூடாகி அருகிலுள்ள பாகங்களிலும் சூடு பரவி தீப்பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

4. கூலண்ட் கசிவு

4. கூலண்ட் கசிவு

எஞ்சின் பாகங்களின் உராய்வு காரணமாக அதிக சூடாகும்போது ஆயில் மற்றும் கூலண்ட் ஆகியவை விரிவடைந்து வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, சரியான அளவில் ஆயில் மற்றும் கூலண்ட்டை பராமரிப்பதோடு, அதன் தொட்டி மற்றும் ஹோஸ் குழாய்களிலும் கசிவு ஏதெனும் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

3. மின்சார பாகங்கள்

3. மின்சார பாகங்கள்

பெரும்பான்மையாக வாகனங்களில் தீப்பிடிக்கும் சம்பவங்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் அல்லது கடத்தும் சாதனங்களில் ஏற்படும் கசிவு காரணமாக அமைகிறது. பேட்டரி மற்றும் ஒயர்களை அவ்வப்போது பரிசோதித்து, தேய்மானம் அல்லது பழைய ஒயர்களை மாற்றுவதுடன், சரியாக பிணைக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்ப்பது அவசியம்.

2. எரிபொருள் கசிவு

2. எரிபொருள் கசிவு

வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவை எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பது தெரிந்ததே. எனவே, எரிபொருள் செல்லும் குழாய்கள் மற்றும் வழிகளில் கசிவு இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். மேலும், எரிபொருள் குழாய் செல்லும் இடங்களில் தீக்குச்சிகளை பற்ற வைப்பது, சிகரெட் பிடிப்பது, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரிப்பேர் செய்வது போன்றவற்றை தவிர்ப்பது அவசியம்.

1. சிகரெட் பிடிப்பதும் ஆபத்து

1. சிகரெட் பிடிப்பதும் ஆபத்து

சிகரெட் உடலுக்கு மட்டுமல்ல. சில வேளைகளில் வாகனத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் சமாச்சாரம். கவனக்குறைவாக அல்லது கைதவறி சிகரெட்டிலிருந்து நெருப்பு காருக்குள் விழுந்து தீப்பிடித்துவிடும். காருக்குள் சிகரெட் பிடிப்பது தவிர்ப்பதும் கட்டாயம்.

 
English summary
In our Top 10 list today, we take a look at 10 reasons that can cause your beloved vehicle to go up in flames.
Story first published: Monday, March 16, 2015, 14:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark