இந்த முறைகளை நீங்கள் கடைப்பிடிப்பதில்லை எனில் நீங்கள் தான் சிறந்த டிரைவர்..!!

இந்த முறைகளை நீங்கள் கடைப்பிடிப்பதில்லை எனில் நீங்கள் தான் சிறந்த டிரைவர்..!!

By Arun

நம்மில் பெரும்பான்மையானோருக்கு சில மோசமான வாகனம் ஓட்டும் பழக்கவழக்கங்கள் இருக்கத்தான் செய்யும். சிலருக்கு இது அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம்.

இந்த முறைகளை நீங்கள் கடைப்பிடிப்பதில்லை எனில் நீங்கள் தான் சிறந்த டிரைவர்..!!

நம்மில் பெரும்பான்மையானோருக்கு சில மோசமான வாகனம் ஓட்டும் பழக்கவழக்கங்கள் இருக்கத்தான் செய்யும். சிலருக்கு இது அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம்.

10. நோ-பார்க்கிங்

10. நோ-பார்க்கிங்

பார்க்கிங் செய்யக்கூடாத இடங்கள் என பட்டியலிடப்பட்டுள்ள இடங்களே ‘நோ-பார்க்கிங்' என்றழைக்கப்படுகிறது.

நோ-பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்திச் சென்றுவிட்டு சில நிமிடங்களில் திரும்பிவிடலாம் என அவசரத்தில் செயல்படுபவர்கள் நம்மில் அனேகம் பேர். இது தவறான பழக்கம் ஆகும்.

9. மஞ்சள் விளக்கில் வேகமெடுப்பது

9. மஞ்சள் விளக்கில் வேகமெடுப்பது

போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்குக்கு முன்பாக ஒரு சில வினாடிகள் எரிந்து எச்சரிக்கக்கூடிய மஞ்சள் விளக்கு எரியும் போது, அதனை மதிக்காமல் அப்போது தான் வேகம் எடுப்பதை பலரும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

அலட்சியத்தின் வெளிப்பாடாக இருக்கக்கூடிய இந்த செயல், ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது நினைவில் கொள்ளவேண்டியது.

8. சாலைக்குறியீடுகளை மதிக்காமல் செல்வது

8. சாலைக்குறியீடுகளை மதிக்காமல் செல்வது

ஒவ்வொரு சாலைக்குறியீடும் ஒரு அர்த்தம் கொண்டிருக்கிறது. அவற்றை மதிக்காமல் சென்றால் அது நமக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.

7. பிளையிண்ட் ஸ்பாட்

7. பிளையிண்ட் ஸ்பாட்

ஒரு ஓட்டுநர் பிளையிண்ட் ஸ்பாட் எனப்படும் கண்ணுக்கு புலப்படாத பகுதிகள் மீது தான் அதிக கவனம் கொண்டிருக்க வேண்டும்.

நமக்கு பின்னால், மற்றும் பக்கவாட்டில் வரும் வாகனங்கள் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும். உடன் வரும் வாகனங்கள் குறித்து கவலைப்படாமல் இஷ்டப்படி லேன் மாற்றி பயணிப்பதை தவிர்க்க வேண்டும். கண்மூடித்தனமாக செல்லாமல் நமக்கு உறுதியாக தெரியாத பிளையின்ட் ஸ்பாட்டுகளில் அக்கறை செலுத்தி பயணிக்கத் தொடங்கினால் பெரிய விபத்துக்களில் சிக்காமல் தப்பலாம்.

6. சாலை சந்திப்புகளில் ஒழுங்கீனம்

6. சாலை சந்திப்புகளில் ஒழுங்கீனம்

இரண்டு சாலைகள் ஒரே கோட்டில் இணையும் போது இரண்டு புறமும் வரும் வாகனங்களை கண்காணித்து செல்லுதல் அவசியம்.

பின்வரும் வாகனங்கள் குறித்து கவலைப்படாமல் பலரும் அடுத்த லேன்களில் சென்று வளைந்து திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது முறையற்ற டிரைவிங்கின் அடையாளம் ஆகும்.

5. இண்டிகேட்டர்கள் பயன்படுத்தாமல் இருப்பது

5. இண்டிகேட்டர்கள் பயன்படுத்தாமல் இருப்பது

பின்வரும் அல்லது எதிர்வரும் வாகனங்களுக்கு நீங்கள் எந்தப்பக்கம் செல்லவிருக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்தவே இண்டிகேட்டர்கள் பயன்படுகின்றன.

ஆனால் இதனை பலரும் பயன்படுத்தாமல் அலட்சியமாக வளைவதையோ, லேன் மாற்றுவதையோ வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது நமக்கும், அடுத்தவருக்கும் இன்னலை ஏற்படுத்தும் ஒரு செயல் ஆகும்.

4. கட் அடித்து ஓட்டுவது

4. கட் அடித்து ஓட்டுவது

வாகனம் ஓட்டும் முறையில் தவிர்க்க வேண்டிய ஒரு ஆபத்தான முறை கட் அடிப்பது. சிலர் உற்சாக மிகுதியால் அல்லது அவசரத்தினால் இதை செய்கின்றனர்..

நம்மைப் போலவே அனைத்து ஓட்டுநர்களும் இருப்பர் என்று நினைக்க முடியாது, வயதானவர்களோ, பெண்களோ வாகனங்கள் ஓட்டும் போது நீங்கள் கட் அடித்து வாகனம் ஓட்டினால் அவர்கள் இதனால் அதிர்ச்சியடைய வாய்ப்பு உண்டு. நம்மால் அடுத்தவரின் வாகனம் விபத்தில் சிக்க வாய்ப்பு ஏற்படுவதோடு, கட் அடிக்கும் வாகனம் வேறு வாகனத்துடன் மோத அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு என்பதை மறக்கக்கூடாது.

3. டெயில்கேட்டிங் ( Tailgating)

3. டெயில்கேட்டிங் ( Tailgating)

டெயில்கேட்டிங் என்பது முன் செல்லும் வாகனத்தின் பம்பருக்கு நெருங்கிச் சென்று திடீரென்று திருப்பும் ஆபத்தான டிரைவிங் முறை ஆகும்.

இது முன் செல்லும் வாகன ஓட்டுநரை வெறுப்படையச் செய்யும் ஒரு செயலாகவும் பார்க்கப்படுகிறது.

அதிவேகத்தில் சென்று இவ்வாறு டெயில்கேட்டிங் செய்வது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். எப்போது பாதுகாப்பான இடைவெளியில் வாகனம் ஓட்டுவதே சிறந்ததாகும்.

2. அதிவேகம்

2. அதிவேகம்

அதிவேகத்தில் வாகனத்தை செலுத்துவது மிகவும் பொதுவாக ஒரு தவறாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட வேகத்தை தாண்டிச் செல்லும் போது ஆபத்தை விரைவாக விரட்டிச் செல்கிறோம் என்று கருத்தில் கொள்ளவேண்டும்.

அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டுவதே விபத்துக்களுக்கு 80% காரணம் என்பது கவனிக்கத்தக்கது.

1. மொபைல் பயன்படுத்துவது

1. மொபைல் பயன்படுத்துவது

மிகவும் ஆபத்தான ஆனால் தற்போது பெரும்பாலான ஓட்டுநர்களிடத்தில் காணக்கூடிய பழக்கம் மொபைல் பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டுவது.

சாலையில் செல்லும் போது சிறிய அளவிலான கவனச்சிதறலும் பெரிய விபத்தை ஏற்படுத்திவிடும்.

இந்த முறைகளை நீங்கள் கடைப்பிடிப்பதில்லை எனில் நீங்கள் தான் சிறந்த டிரைவர்..!!

இதுமட்டுமல்லாமல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதலும் ஆபத்தானது என்பதை மறுக்க முடியாது.

எனவே மேற்கூறிய ஆபத்தான பழக்கவழக்கங்கள் இருப்பினில் அதனை கைவிட்டு பாதுகாப்பான வாகனம் ஓட்டும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என டிரைவ் ஸ்பார்க் வாசகர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். நன்றி

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

இந்தியாவில் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை செய்து விதிமீறல்களுக்கான அபராதங்களை உயர்த்தியுள்ளது. இனி பழைய அபராதம் எவ்வளவு? திருத்தியமைக்கப்பட்ட புதிய அபராதம் எவ்வளவு? என்பதை விரிவாக பார்க்கலாம்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

வாகன ஓட்டிகள் பொதுவான குற்றங்களில் ஈடுபட்டால், செக்ஸன் 177ன்படி முன்பு 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே சமயம் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமை என்ற குற்றத்திற்கு, செக்ஸன் 179ன் கீழ் பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டும்தான். ஆனால் புதிய அபராத தொகை 2,000 ரூபாய்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு முன்பு செக்ஸன் 181ன் கீழ் 500 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், 5,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். அதே நேரத்தில் வாகனங்களை அதிவேகமாக இயக்குபவர்களுக்கு செக்ஸன் 183ன்படி முன்பு 400 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

ஆனால் இனி வாகனங்களை அதிவேகமாக இயக்கினால், இலகுரக மோட்டார் வாகனம் என்றால் 1,000 ரூபாயும், மீடியம் பாசஞ்சர் வாகனம் என்றால் 2,000 ரூபாயும் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். அதே நேரத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் முன்பு செக்ஸன் 185ன் கீழ் 2,000 ரூபாயாக மட்டுமே இருந்தது. தற்போது இது அதிரடியாக 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

பொது சாலைகளில் ரேஸிங்கில் ஈடுபடுபவர்களுக்கான பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டும்தான் (செக்ஸன் 189). ஆனால் புதிய அபராத தொகை 5,000 ரூபாய். பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு முன்பு செக்ஸன் 192ஏ-ன் கீழ் 5,000 ரூபாய் வரை மட்டுமே அதிகாரிகளால் அபராதம் விதிக்க முடியும். ஆனால் இந்த குற்றத்திற்கான புதிய அபராத தொகை 10,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம் ஓவர்லோடு. வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றி செல்பவர்களுக்கு முன்பு செக்ஸன் 194ன் படி வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இது தவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

ஆனால் ஓவர்லோடிங் குற்றத்திற்கான புதிய அபராத தொகை 20,000 ரூபாய் என ஒரே அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு முன்பு செக்ஸன் 194பி-ன் படி 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. இது தற்போது 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

முன்பு இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு செக்ஸன் 196ன் கீழ் 1,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்கள் வந்தால் வழி விடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இருந்தால் நிச்சயமாக நல்லது. தொடர்ந்து கடைபிடியுங்கள்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

ஒரு வேளை அப்படிப்பட்ட ஒரு நல்ல பழக்கம் உங்களுக்கு இல்லாவிட்டால், இனியாவது பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் எமர்ஜென்ஸி வாகனங்களுக்கு வழி விடாவிட்டால், செக்ஸன் 194இ-ன் படி உங்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சரி, தண்டனை எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? என நீங்கள் கேட்பது புரிகிறது.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

இது அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் பொருந்தும். ஆம், இந்த விதிமுறைகளை அமல்படுத்த கூடிய அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இதில், விசேஷம் என்னவென்றால், அந்த அதிகாரிகள் என்ன தவறு செய்தாலும், அந்த குற்றத்திற்கு சாதாரண வாகன ஓட்டிகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறதோ, அதை விட இரு மடங்கு அதிக அபராதம் அதிகாரிகளுக்கு விதிக்கப்படும்.

எதிர்ப்புக்கு மத்தியில் சாதித்தது மோடி அரசு! உயர்த்தப்பட்ட அபராதம் தெரிந்தால் இனி விதிமீற மாட்டீங்க!

மத்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் பாராட்டுக்குரியது. ஏனெனில் கரிசணம் காட்டி கொண்டே இருப்பதால்தான் வாகன ஓட்டிகள் தொடர்ந்து தவறு செய்து கொண்டே உள்ளனர். இனி ஒரு முறை அபராதம் செலுத்தி விட்டால், அடுத்த முறை அந்த தவறை செய்ய வாகன ஓட்டிகள் சிந்திப்பார்கள். இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil about top10 worst driving habits
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X