டர்போ சார்ஜர் VS சூப்பர் சார்ஜர்.. உங்கள் காருக்கு எது பெஸ்ட்?

டர்போசார்ஜர், சூப்பர் சார்ஜர் என்ற இரண்டு தொழிற்நுட்பங்கள் இன்ஜினில் பொருத்தப்படுகிறது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம், இரண்டிலும் உள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? இது குறித்த முழு விபரத்தைக் காணலாம் வாருங்கள்

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

இன்று உலக நாடுகள் எல்லாம் காற்று மாசு குறித்து அதிகம் கவலைப்படுகிறது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் காற்றுமாசுவை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுவை கட்டுப்படுத்துவது. நாம் சிறு வயதாக இருந்த போது நாம் பார்த்த வாகனங்களை ஸ்டார்ட் செய்தாலே வாகனத்தில் பின்னாலிருந்து கருப்பு நிறத்தில் புகை வரும். ஆனால் இன்று அப்படியான வாகனங்களை காண்பதே அரிது.

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

இதற்காக மத்திய அரசு பாரத் ஸ்டேஜ் என்ற ஒரு விஷயத்தைப் பின்பற்றுகிறது. அதன்படி ஒரு வாகனம் எவ்வளவு எரிபொருளைப் பயன்படுத்தி எவ்வளவு மாசுவை வெளியேற்றுகிறது என்பதற்கு ஒரு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இப்பொழுது இந்தியா பாரத் ஸ்டேஜ் 6 என்ற கட்டுப்பாட்டைப் பின்பற்றி வருகிறது. இந்த கட்டுப்பாட்டின்படி ஒரு வாகனம் குறைந்த அளவு தான் மாசுவை வெளியிட வேண்டும் என்ற விதி இருக்கிறது.

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

அப்படி குறைந்த மாசு தான் வெளியாக வேண்டும் என்பதற்காக இன்ஜினில் சில மாற்றங்களை செய்தனர். ஆனால் பழைய இன்ஜின் அளவிற்கு பெர்பாமென்ஸ் எல்லா மாடல்களிலும் கிடைக்கவில்லை. அதனால் இதே இன்ஜில் சில தொழிற்நுட்ப மாற்றங்களைச் செய்து இன்ஜினின் திறனை மேம்படுத்தினர். இப்படியாக இன்ஜினின் திறனை மேம்படுத்தப் பயன்படுத்த தொழிற்நுட்பம் தான் டர்போ சார்ஜர் மற்றும் சூப்பர் சார்ஜர். இந்த பதிவில் நாம் இது இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? இதனால் இன்ஜினில் என்ன மாற்றம் ஏற்படும்? உள்ளிட்ட தகவல்களைக் காணலாம்

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

டர்போ சார்ஜர், சூப்பர் சார்ஜர் இந்த இரண்டும் ஒரே வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறது. அதாவது இன்ஜினின் பவரை அதிகரிப்பது தான் இதன் வேலை, இன்ஜினில் அதையும் மாற்றாமல் எக்ஸ்ராவாக சில மாற்றங்களைச் செய்து அதன் மூலம் இன்ஜினின் பவரை செய்வது தான் இந்த இரண்டின் வேலையும். முதலில் இந்த இரண்டும் எப்படிச் செயல்படுகிறது எனக் காணலாம்

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

டர்போ சார்ஜர் எப்படி வேலை செய்கிறது?

டர்போ சார்ஜரை பொருத்தவரை இது இன்ஜினிற்குள் வரும் காற்றின் அளவை அதிகரிக்க இன்ஜினிற்குள் செல்லும் காற்றை அதிகரிக்க ஒரு டர்பன் பொருத்தப்படுகிறது. அதன் டர்பன் சுழலுவதால் இன்ஜிற்குள் அதிக காற்று சென்று கம்பஷன் நடக்கும் போது அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் அது ஸ்டாராங்காக நடக்கிறது. இந்த டர்பன் சுழலுதற்காக இன்ஜினிலிருந்து புகை வெளியேறும் இடத்தில் ஒரு டர்பன் வைத்துப் புகை வெளியேறும்போது ஏற்படுத்து அழுத்தம் காரணமாக அது சுழற்சி ஏற்படுகிறது. அந்த டர்பன் இன்ஜினிற்குள் காற்று உள்ள இழுக்கும் பகுதியில் இருக்கும் டர்பன் உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்ஜின் ஸ்டார் செய்த சிலநெடிகளில் டர்போ ஆக்டிவேட் ஆகிவிடும்.

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

சூப்பர் சார்ஜர்

சூப்பர் சார்ஜரும் இன்ஜினிற்குள் அதிக காற்றை ஈர்க்கும் ஒரு கருவி தான் இதுவும் டர்போ சார்ஜர் செய்யும் அதே பணியைத் தான் செய்கிறது. ஆனால் இதில் காற்றை உள்ளே இழுக்கும் கருவி சுழல்வதற்கு எக்ஸாஸ்டை பயன்படுத்துவதில்லை மாறாக கிராங் சாஃப்ட் உடனே ஒரு கருவி பொருத்தப்பட்டு அதன் மூலம் சுழற்சியை ஏற்படுத்தி இன்ஜினின் திறனை அதிகரிக்கிறது. ஒரே விஷத்தை இரண்டும் வேறு வேறு விதமாகச் செய்வதால் இரண்டும் வேறு வேறு விஷயமாக இருக்கிறது.

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

டர்போ சார்ஜரின் நன்மைகள்

டர்போ சார்ஜரில் டர்பைனிற்கும் சாஃப்டிற்கும் தொடர்பில்லை. அதனால் மெக்கானிக்கல் டிராக் இருக்காது. இந்த தொழிற்நுட்பம் பெரிய டிஸ்பிளேஸ்மெண்ட் இன்ஜின்களுக்கு பொருத்தம்.

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

சூப்பர் சார்ஜர் நன்மைகள்

சூப்பர்சார்ஜர் விரைவாக இன்ஜினிற்கு பவரை கொடுக்கும். இந்த தொழிற்நுட்பத்தை இன்ஜினில் பொருத்துவது எளிது இந்த தொழிற்நுட்பம் சிறிய டிஸ்பிளேஸ்மெண்ட் இன்ஜின்களுக்கு பொருத்தம்.

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

எது பெஸ்ட்?

டர்போ சார்ஜர் மற்றும் சூப்பர் சார்ஜர் இரண்டும் தனித்தனியான தன்மைகளைக் கொண்டுள்ளது. இரண்டும் இன்ஜினின் பவரை கூட்டும் வேலையைத் தான் செய்கிறது. இந்த இரண்டையும் ஒப்பிடும் போது இரண்டும் ஒரே மாதிரியாகவே பவரை கூட்டுகிறது. ஆனால் எரிபொருள் பயன்பாட்டைக் கணக்கிடும் போது டர்போ சார்ஜர் சூப்பர் சார்ஜரை விட குறைவான எரிபொருளைப் பயன்படுத்துகிறது. அதனால் வாகன தயாரிப்பாளர்கள் டர்போ சார்ஜர் இன்ஜினையே விரும்புகின்றனர்.

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

ட்வின் சார்ஜ்

ஒரே இன்ஜினில் டர்போ சார்ஜரையும், சூப்பர் சார்ஜரையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தவும் முடிவும் அந்த இன்ஜினிற்கு பெயர் ட்வின் சார்ஜர், இப்படியாக ட்வின் சார்ஜர் பயன்படுத்தும் போது அது குறைவான ஆர்பிஎம்மிலும், அதிகமான ஆர்பிஎம்மிலும் பவரை அதிகரித்துக்கொடுக்கும். பொதுவாக இது இது ரேஸ் கார்களில் அதிகம் பயன்படுத்தப்படும். இந்த ட்வின் சார்ஜரை பயன்படுத்தும் போது பெட்ரோல் கார்களில் பயன்படுத்துவது எளிது டீசல் இன்ஜினில் குறைந்த ஆர்பிஎமமில் டார்க் திறனைக் குறைவாக இருக்கும் என்பதால் அதை அந்த இன்ஜினில் பயன்படுத்த முடியாது.

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

பவர் எவ்வளவு அதிகரிக்கும் ?

சூப்பர் சார்ஜரை பொருத்தவரை இன்ஜினின் குதிரைத் திறன் மற்றும் டார்க்கை அதிகரிக்கிறது. இதனால் இன்ஜின் பவர் 70-80 சதவீதம் வரை அதிகரிக்கும். இந்த பவர் விரைவாகவும் சீராகவும் கிடைக்கும். ஆனால் சூப்பர் சார்ஜர் நேரடியாக ஆர்பிஎம் உடன் தொடர்பில் இருப்பதால் இது எரிபொருள் பயன்பாட்டையும் அதிகரிக்கும். அதனால் காரின் மைலேஜ் குறையும். டர்போ சார்ஜரை பொருத்தவரை 20-30 சதவீதம் இன்ஜினின் பவர்அதிகரிக்கும். சில நேரங்களில் 50 சதவீதம் கூட அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் வழக்கமாகப் பயன்படும் எரிபொருளை விட இதைப் பயன்படுத்துவதால் குறைவான எரிபொருள் மட்டுமே தேவைப்படும்.

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

மைலேஜ்

மைலேஜை பொருத்தவரை டர்போ சார்ஜர் தான் சிறப்பான மைலேஜை தரும். ஆனால் இன்ஜினிற்கு அதிகபட்சமே 50 சதவீத பவரை தான் வழங்கும். சராசரியாக 25-30 சதவீத பவரை வழங்கும். ஆனால் சூப்பர் சார்ஜர் 80 சதவீத பவரைவழங்கும் அதே நேரத்தில் இது ஆர்பிஎம்உடன் இணைக்கப்படுவதால் அதற்கு 20% மெக்கானிக்கல் லேக் ஏற்படும். எப்படி இருந்தால் நல்ல பவர் தான் வேண்டும் என நினைத்தால் சூப்பர் சார்ஜர் சிறந்தது. பவருடன் மைலேஜூம் வேண்டும் என நினைத்தால் டர்போ சார்ஜர் சிறந்தது.

டர்போ சார்ஜர் V S சூப்பர் சார்ஜர் . . . உங்கள் காருக்கு எது பெஸ்ட் ?

எந்தெந்த கார்களில் எந்தெந்த சார்ஜர் இருக்கிறது ?

டர்போ சார்ஜரை பொருத்தவரை டாடா நெக்ஸான், ஃபோக்ஸ்வாகன் ஜிடி, மாருதிசுஸூகி பலேனோ, டாடா போல்ட், டாடா ஸெஸ்ட், ஃபியட் லீனியா டி-ஜெட், ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட், ஃபோக்ஸ்வாகன் வென்டோ டிஎஸ்ஐ ஆகிய கார்களில்இருக்கிறது. சூப்பர் சார்ஜர் களை பொருத்தவரை மெர்சிடிஸ பென்ஸ், ஜாக்குவார், ரேஞ்ச்ரோவர் ஆகிய கார்களில் இருக்கிறது.

Most Read Articles
English summary
Turbocharger vs Supercharger know differences advantages and Disadvantages
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X