Just In
- 2 min ago
மார்ச் மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!! ஹூண்டாய் எலக்ட்ரிக் காரை வாங்குவோர் ரூ.1.5 லட்சம் வரையில் சேமிக்கலாம்
- 2 hrs ago
தெரு விளக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்... எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?
- 3 hrs ago
விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!
- 4 hrs ago
லண்டனே பின்னால்தான்... கெத்து காட்டும் கொல்கத்தா... மம்தா அரசின் நடவடிக்கையால் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை!!
Don't Miss!
- News
முத்தூட் பைனான்ஸ் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் காலமானார்!
- Movies
மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன் !
- Finance
சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..!
- Sports
அரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்!
- Lifestyle
மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாகனங்களில் இந்தெந்த வகையான இன்ஜின்கள் தான் பயன்படுத்துகிறார்கள்…. தொழிற்நுட்ப தகவல்கள்
இன்று வாகனம் பயன்படுத்தாதவர்களை பார்க்கவே முடியாது, இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வானகங்களை பயன்படுத்துகின்றனர். இப்படியாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு விதமாக செயல்படும். சில வாகனங்கள் வேகமாக செல்லும் சில வாகனங்கள் குறைந்த அளவு எரிபொருளையே பயன்படுத்தும். இப்படி ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு திறன் என்பது இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க ஒரே கேப்பாசிட்டி கொண்ட இருவேறு வாகனங்களும் வேறு வேறு விதமாக செயல்படலாம், இதற்கு இந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜினின் வகைதான் காரணம். இந்த செய்தியில் வாகனங்களின் பயன்படுத்தப்படும் இன்ஜினின் வகைகளையும் அது எவ்வாறு செயல்படுகிறது இதனால் வாகனத்தின் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இங்கே காணலாம்.

வீ இன்ஜின்
இந்த இன்ஜினை முன் பகுதியில் இருந்து பார்த்தால் ஆங்கில எழுத்து V போல தெரியும். இதில் ஒவ்வொரு சிலிண்டரும் எதிர் எதிர் திசையில் இருக்கும். இவை இரண்டும் இரு வேறு திசைகளில் இருந்தாலும் ஒரே கிரேங்க் சாப்ட் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த வகையான இன்ஜின் பிரிமியம் மற்றும் அதிக பெர்பாமென்ஸ் வழங்கும் வாகனங்களில் பொருத்தப்படும். அதிக சிலிண்டர்கள் பயன்படுத்த ஏற்ற டிசைன் இது. மற்ற இன்ஜின்களை ஒப்பிடும் போது குறைந்த இடமே இந்த இன்ஜினிற்கு தேவைப்படும்.

இன்லைன் இன்ஜின்
இந்த இன்ஜினும் கிட்டத்தட்ட வி இன்ஜின் போன்ற தோற்றத்தில் தான் இருக்கும். ஆனால் இதில் சிலிண்டர்கள் ஒன்றுக்கு ஒன்று எதிர் திசையில் இருக்காது. ஒன்றின் பின் ஒன்றாக இருக்கும். இவை அனைத்தும் ஒரே கிரேங்க் சாப்டில் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த வகையான இன்ஜின்கள் சிறிய மற்றும் ஹெட்ச் பேக் ரக கார்களில் பயன்படுத்தப்படும். இந்த இன்ஜின்கள் பெரும்பாலும் காருக்கு செங்குத்தானவிடிவில் இருக்கும். இந்த இன்ஜினில் சிலிண்டர்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதன் ஆங்கிலில் மாற்றம் இருக்கலாம்.

ஸ்டிரைட் இன்ஜின்
இந்த இன்ஜின்களில் சிலிண்டர்கள் வரிசையாக ஒரே ஆங்கிலில் அடுக்கப்பட்டிருக்கும். இது காருக்கு இணையான போஷிஷனில் அமைக்கப்படும். மற்றபடி இதன் செயல்பாடு எல்லாம் இன்லைன் இன்ஜினை போன்றே அமைந்திருக்கும்.

பெரும்பாலும் பிரிமியம் கார்களான பிஎம்டபிள்யூ போன்ற கா்களின் இந்த வகையான சிலிண்டர் போஷிஷன்களுடன் கூடிய இன்ஜின்களை பயன்படுத்துவார்கள்.

விஆர் மற்றும் டபிள்யூ
இந்த இன்ஜினை ஃபோக்ஸ்வாகன் குழு தயாரித்தது. இந்த இன்ஜின் வி இன்ஜினின் அதே தொழிற்நுட்பத்தில் தான் இயங்கும். ஆனால் எதிர் எதிரே அமைந்துள்ள சிலிண்டர்களின் இடைவெளி குறைவாக இருக்கும் அதாவது இரண்டு சிலிண்டர்களும் குறைவான ஆங்கிலில் உள்ள V என்ற ஆங்கில எழுத்தை போன்ற அமைப்பில் இருக்கும்.

இந்த இன்ஜின் W கான்ஃபிகரேஷன் உடன் இணைந்து இயங்கும். தயாரிப்பாளர்கள் இந்த இன்ஜினை பெரும்பாலும் குறைவான கார்களிலயே பயன்படுத்துகின்றனர். பென்ட்லி கார்களின் இந்த வகையான இன்ஜின்கள் தான் பயன்படுத்தப்படுகிறது.

பாக்ஸர் இன்ஜின்
இந்த இன்ஜினை சிலர் பிளாட் இன்ஜின் எனவும் கூறுவார்கள். இதில் உள்ள சிலிண்டர்கள் சாய்வாக ஒன்றோடு ஒன்று எதிர் எதிர் திசையில் இருக்கும். எதிர் எதிர் திசையின் இருந்தாலும் இதன் பிஸ்டன்கள் ஒரே இடத்தில் தான் இணைக்கப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் செயல்படும் விதத்தை விளக்கி படம் வரைந்தால் அது குத்து சண்டை போது வது போன்ற அமைப்பில் இருக்கும் என்பால் இந்த பெயரை அந்த இன்ஜினிற்கு வைத்துள்ளனர்.

இந்த வகையான இன்ஜின் பயன்படுத்தப்படும் கார்கள்களில் கிராவிட்டி குறைாவக இருக்கும். அதே நேரத்தில் வாகனத்தை இயக்க சுலபமாக இருக்கும். போர்ஷே போன்ற கார்களில் இந்த வகையான இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

ரோட்டரி இன்ஜின்
இதை சிலர் வான்கல் இன்ஜின் எனவும் குறிப்பிடுவார்கள். இந்த வகை இன்ஜின்களில் பிஸ்டன்களே கிடையாது. பிஸ்டன்களுக்கு பதிலாக ரோட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. ரோட்டரி இன்ஜின்களை சிறியதாக தயாரிக்க முடியும். இந்த இன்ஜினிலும் 4 ஸ்டோக்குகள் இருக்கிறது இதை 4 ஓட்டோ ஸ்டோக் என குறிப்பிடுவார்கள். இன்டேக், கம்பிரஷன், பவர், மற்றும் எக்ஸாட் ஆகிய பணிகளை தான் இந்த இன்ஜினினும் செய்கிறது.

இந்த வகையான இன்ஜின் சில கார்களின் மட்டும் தான் இருக்கிறது. மஸாட்டா ஆர்எக்ஸ் - 8. காரில் இந்த இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகமாக பிரபலமாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த வகை இன்ஜின் குறைந்த அளவு டார்க் திறனையே வெளிப்படுத்தும்.

இவைகள் தான் உலகில் பெரும்பாலான கார்களின் பயன்படுத்தப்படும் இன்ஜின்களின் வகைகள். இன்ஜின்களின் சிலிண்டர்களின் போஷிஷனை வைத்தே இது இந்தவகையான இன்ஜின் என்பதை நாம் கணித்து விட முடியும். ஒவ்வொரு வகையான இன்ஜினிற்கும் ஒவ்வொரு வகையான பராமரிப்பு தேவைப்படும்.

மேலும் வாகனங்களின் பயன்படுத்தப்படும் இன்ஜின்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாடலுக்கும் மாறுபடலாம். சாதாரணமாக இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஏன் பத்து என்ற எண்ணிக்கையில் கூட சிலிண்டகள்களை கொண்ட வாகனங்கள் இருக்கின்றன. சிலிண்டரின் எண்ணிக்கையை பொருத்து வாகனத்தின் திறன் மாறுபடும்.

இன்ஜின்களின் டிசைன்களிலும் இரண்டு வகையான இன்ஜின்கள் இருக்கின்றன. அது இன்டர்னல் கம்பஷன் இன்ஜின், எக்ஸ்டர்னல் கம்பஷன் இன்ஜின், இந்த இரண்டு இன்ஜின்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கீழே பார்க்கலாம்

எக்ஸ்டர்னல் கம்பஷன் இன்ஜின்
இந்த வகையான இன்ஜின், எரிபொருளை இன்ஜினிற்கு வெளிபுறம் கம்பஷன் செய்யும், இவ்வாறு கம்பஷன் செய்யும் போது எரிபொருள் எரிவதால் அதில் இருந்து அதிக வெப்பம் வெளியாகும். இந்த வெப்பம் ஆவியை உருவாக்கும். அதிக பிரஷர் உடனான ஆவி டர்பைனில் ரோட்டேஷனை உருவாக்கும். இதில் பயன்படுத்தப்படும் எரிபொருள் திடப்பொருள், திரவப்பொருள் ஏன் வாயுவாக கூட இருக்கலாம்.

இந்த வகையான இன்ஜின்கள் கப்பல்கள், ரயில் இன்ஜின்கள், மின்சாரம் தயாரிக்கும் இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் ஒரு முக்கிய அம்சமே இதை குறைந்த விலையுல்ல எரிபொருளை பயன்படுத்தி இயக்க வைக்கலாம். இதில் பயன்படுத்தப்படும் திட வடிவிலான எரிபொருள் அதிக டார்க்கை உருவாக்கும்.

இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்
இந்த வகையான இன்ஜின்களில் எரிபொருளை இன்ஜினிற்குள்ளேயே எரிக்கும். அதிக எரிபொருள் இன்ஜினிற்குள் உள்ளேயே எரிவதால் அதிக பிரஷர் மற்றும் வெப்பம் உருவாகும். இந்த பிரஷர் பிஸ்ஷரில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சுழற்சியை உருவாக்கி வீல்களை சுழற்றி செய்ய வைக்கிறது.

இந்த வகையான இன்ஜின்களில் எளிதில் ஆவியாகும் வகையிலான எரிபொருட்களான டீசல், பெட்ரோல், மற்றும் கேஸ் போன்றவற்றையே பயன்படுத்த முடியும். இந்த வகையான இன்ஜின்கள் பெரும்பாலும் ஆட்டோமொபைல் துறையில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் கம்பஷன் இன்ஜின்களை ஒப்பிட்டு அதன் பலன்களை பார்க்கும் போது இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் தான் சிறிய அளவிலும், குறைந்த இட வசதியிலும் அமைக்கும் வகையில் இருக்கிறது. மேலும் இந்த வகையான இன்ஜின் தயாரிக்க ஆகும் செலவும் குறைவும் தான். எக்ஸ்டர்னல் இன்ஜினில் தயாரிப்பு செலவு அதிகமாக இருந்தாலும் அதில் குறைந்த செலவுடைய எரிபொருளை பயன்படுத்த முடியும்.

மேலும் குளிரான நாட்களிலோ, குளிர் அதிகமாக உள்ள பகுதிகளிலோ எக்ஸ்டர்னல் கம்பஷன் இன்ஜினை ஸ்டார்ட் செய்வது சிரமம், இதை எல்லாம் மனதில் கொண்டே எக்ஸ்டர்னல் கம்பஷன் இன்ஜினை இன்றும் பெரும் அளவில் பலர் பயன்படுத்துவதில்லை.

தற்போது உங்களுக்கு கார்களின் இன்ஜின் வகைகள் அதில் உள்ள சிலிண்டர்கள், பற்றி எல்லாம் ஒரளவிற்கு தகவல்கள் கிடைத்திருக்கும் என நம்புகிறோம். ஆட்டோமொபைல் துறையில் மேலும் பல கண்டு பிடிப்புகள் தினமும் வந்து கொண்டே தான் இருக்கிறது. இன்று எலெக்ட்ரிக் மோட்டாரை வைத்தே செயல்படும் வாகனங்களும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. தொடர்ந்து தொழிற்நுட்பங்கள் குறித்த அப்டேட்களை பெற டிரைவ்ஸ்பார்க் தளத்ததுடன் இணைந்திருங்கள்.