டயர் வெடித்ததால் விபரீதம்: தர்மபுரி விபத்து கார் உரிமையாளர்களுக்கு கற்றுத் தரும் பாடம்!

Written By:

பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி ஒன்று தர்மபுரி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கி சின்னாபின்ன செய்தி நெஞ்சை பதற வைக்கிறது.

முதல் கட்ட விசாரணையில் காரின் முன்பக்க டயர் வெடித்ததாலேயே விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கோர சம்பவம் கற்றுத் தரும் பாடம், அதற்கான தீர்வுகளை தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

சோகம்

சோகம்

பெங்களூரில் இருந்து சுற்றுலா வந்த 5 பேர் மற்றும் லாரி ஓட்டுனர் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர். காரின் டயர் வெடித்ததாலேயே 6 பேரின் உயிர் காவு வாங்கப்பட்டிருக்கிறது.

Image Source: The Covai Post

டயர் வெடிக்கும் வாய்ப்பு

டயர் வெடிக்கும் வாய்ப்பு

கோடை காலத்தில் சாலையில் வெப்பம் மிக அதிகமாக இருப்பதால், புதிய டயர் பொருத்தப்பட்டிருந்தாலும் எளிதில் சூடாகி, டயர் வெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தற்போது காரில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பவர்கள், கண்டிப்பாக சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். அதற்காக, சில வழிகாட்டு முறைகளை இங்கே வழங்கியிருக்கிறோம்.

Image Source: The Covai Post

காற்றழுத்தம்

காற்றழுத்தம்

வெயில் காலத்தில் காற்றழுத்தத்தை சரியான பரிந்துரைக்கப்பட்ட அளவில் பராமரிக்க வேண்டும். காற்றழுத்தம் குறைவாக இருந்தால், டயரின் பக்கவாட்டு சுவர் தரையில் உராந்து வெப்பம் அதிகரிக்கும். இதனால், வெடிக்கும் ஆபத்து கூட உள்ளது. வேகமாக தேய்மானமும் ஏற்படும்.

வீல் பேலன்ஸிங்/ அலைன்மென்ட்

வீல் பேலன்ஸிங்/ அலைன்மென்ட்

சரியான இடைவெளியில் வீல் பேலன்ஸ் மற்றும் அலைன்மெனட் செய்வதும் அவசியம். இது டயரை சரியான கோணத்தில் செலுத்துவது மட்டுமல்ல, சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் அமைப்பிற்கு கூடுதல் தலைவலியை கொடுக்கும். இதனால், காரின் கையாளுமையில் பிரச்னை ஏற்பட்டு, டயர் சிறப்பாக இருந்தாலும் விபத்துக்கு வழிகோலும்.

சரியான அளவு

சரியான அளவு

உங்கள் காருக்க பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயர்களை மட்டுமே பொருத்த வேண்டும். இதுவும் விபத்துக்கு வழிகோலும் விஷயமாகவே இருக்கிறது. ஏனெனில், பல எஸ்யூவி வகை மாடல்களில் அதிக விட்டமுடைய டயர்களை பயன்படுத்துகின்றனர்.

டயரை சோதியுங்கள்

டயரை சோதியுங்கள்

சுற்றுலா புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே, காரை சர்வீஸ் சென்டரில் விட்டு முழுமையாக சோதிக்கவும். டயரில் தெறிப்புகள் இருக்கிறதா என்பதை பார்த்துவிடுங்கள். இப்போது மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக, வீட்டிலேயே வந்து காரின் பிரச்னைகளை கண்டறிந்து கூறும் வசதியும் உள்ளது. அவ்வாறு பெரிய பிரச்னை என்றால், சரி செய்த பின்னரே சுற்றுலா செல்லவும். குறிப்பாக, டயர் கண்டிஷனை நன்றாக சோதிப்பது அவசியம்.

 டயர்களை மாற்றி போடும் முறை

டயர்களை மாற்றி போடும் முறை

டயர்களை குறிப்பிட்ட இடைவெளியில் முன்புற டயர்களை பின்புறத்திற்கும், பின்புற டயர்களை முன்புறத்திற்கும் மாற்றி போடலாம். டயர்களை மாற்றிப் போடும் முறை குறித்த எமது விரிவானத் தகவல் தொகுப்பை இந்த செய்தியின் கடைசியில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பிராண்டட் டயர்

பிராண்டட் டயர்

டயர்களை மாற்றும்போது விலை மலிவான டயர்களை மாற்றுவதை அவசியம் தவிர்க்கவும். விலை சற்று அதிகமானாலும் தரமான, நல்ல பிராண்டு டயர்களை வாங்கிப் போடவும். ஏனெனில், உங்கள் உயிருக்கும், குடும்பத்தார் உயிருக்கும் பாதுகாப்பை தரும் டயர் விஷயத்தில் சமரசத்திற்கு இடமில்லை.

சரி, சரி

சரி, சரி

சரி, டயரை சோதித்து விட்டோம், புதிய டயர்களாகவே மாற்றி விட்டோம், அட காற்றழுத்தம் கூட சரி பார்த்துவிட்டோம். அவ்வளவதானே என்கிறீர்களா?. டயர் பராமரிப்பு இத்துடன் முடிந்துவிடாது. அத்துடன், நாம் டிரைவிங் செய்யும் முறையும் டயரையும், நம் குடும்பத்தையும் பாதுகாக்கும்.

நிதான வேகம்

நிதான வேகம்

காரின் பராமரிப்புக்கு அடுத்து, காரை நிதானமான வேகத்தில் செலுத்துவதும் அவசியம். ஒருவேளே, கார் டயர் வெடித்தால் கூட நிதானமான வேகத்தில் ஓரளவு கட்டுப்படுத்த இயலும். அதாவது, கார் டயர் வெடிக்கும்போது, கார் கட்டுப்பாட்டை இழக்கும். அந்த நேரத்தில் ஸ்டீயரிங்கை எந்த பக்கமும் திருப்பாமல், கெட்டியாக பிடித்துக் கொண்டு வேகத்தை குறைக்க முயலவும். இது அதிவேகத்தில் சாத்தியமில்லை. எனவேதான் நிதான வேகத்தை கடைபிடிப்பதும் மிக அவசியம்.

பிரேக்

பிரேக்

நிதான வேகத்தில் சென்றால் அடிக்கடி பிரேக்கை பிடிக்கும் வாய்ப்பும் இருக்கும். இதனால், டயருக்கு கூடுதல் பளூ குறைந்து, ஆயுள் அதிகரிக்கும். எனவே, அடிக்கடி சடன் பிரேக் போடுவது, டெயில் கேட்டிங் செய்து ஓட்டுவது போன்றவை தவிர்க்கவும்.

 இடைவெளி

இடைவெளி

கோடைகாலத்தில் டயர் விரைவாக சூடாகும் என்பதால், கண்டிப்பாக 2 மணி நேரத்திற்கு ஒருமுறை காரை நிறுத்தி 10 நிமிடங்கள் ஓய்வு கொடுக்கவும். இதனால், டயர், எஞ்சின் போன்றவற்றில் உண்டாகும் அதிகப்படியான வெப்பம் குறையும். டயர் மட்டுமின்றி, உங்களுக்கும் நிதானமான பயணத்தை வழங்கும்.

நைட்ரஜன் வாயு

நைட்ரஜன் வாயு

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவதும் பலன் தரும். நைட்ரஜன் வாயு நிரப்புவதால், அதிக சூடாவது தவிர்க்கப்படும்.

 புதிய டயர்

புதிய டயர்

நெடுஞ்சாலை பயணங்களுக்கு தயாராகும் கார்களில் டயரின் ட்ரெட் போதுமானதாக இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும். தோசைக்கல் டயரும் நெடுஞ்சாலை பயணம் உயிருக்கும் உலை வைத்துவிடும். எனவே, சுற்றுலா அல்லது நெடுஞ்சாலையில் பயணிப்போர் கண்டிப்பாக, புதிய டயர்களை உடனடியாக மாற்றிவிட்டு கிளம்பவும்.

கோடை காலத்தில் டயர் பராமரிப்பு- டிப்ஸ்

டயர் பராமரிப்பு மற்றும் டயரை மாற்றிப் போடுவது குறித்த சந்தேகங்களும், அதற்கான தீர்வுகளும்...!

 கவனம்

கவனம்

எப்போது நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது காரின் ஓட்டுதலில் மாற்றம் தெரிந்தாலோ அல்லது வேறு வித்தியாசமான சப்தம் வந்தாலும் உடனடியாக காரை அருகிலுள்ள மெக்கானிக் ஷாப் அல்லது சர்வீஸ் சென்டரில் ஆய்வு செய்து கொண்டு செல்வது நல்லது.

 
English summary
Tyre care tips for summer. Read now in Tamil.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark