கோடைகாலத்தில் உங்கள் காரில் இருக்க வேண்டிய 10 முக்கிய கார் ஆக்ஸசரிகள்

Written By:

பல நாடுகளிலும் கோடைக்காலத்தை உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். தங்களால் முடிந்த அளவுக்கு வெயிலில் செல்வது, பிக்னிக் போவது, கடற்கரைகளில் பொழுதைக் கழிப்பது என சூரியனுடன் உறவு கொண்டாடுவதை பார்க்கலாம். ஆனால் இந்தியாவிலோ நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. நம்மில் பலரும் வெயிலைக் கண்டாலே ஓடி ஒளிந்து கொள்பவர்கள் தான்.

கோடையை சமாளிக்க உதவும் 10 முக்கிய கார் ஆக்ஸசரிகள்

வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, உபயோகமான சில ஆக்ஸசரிகளை உங்கள் காரில் வாங்கிவைத்துக்கொள்வதால் கோடைக் காலத்தில் நம் கார் பயணத்தை சிறப்புடன் அமைக்கலாம். அது என்னென்ன பொருட்கள் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

கூலிங்கிளாஸ் ஹோல்டர்

கூலிங்கிளாஸ் ஹோல்டர்

வெயிலின் தாக்கம் நம் கண்களுக்கு செல்லாமல் தடுப்பது கூலிங்கிளாஸ் மட்டுமே. காரில் கண்ட இடத்தில் கூலிங்கிளாஸை வைப்பதால் ஸ்கிராட்ச் அல்லது உடைந்துவிடும் ஆபத்தும் உள்ளது. டேஷ்போர்டின் ஏதாவது மூலையில் வைத்துவிட்டு அதனை தேடிக்கொண்டிருப்பதே சிலருக்கு வேலையாகவும் இருக்கும். இதற்கென பிரத்யேக சன்கிளாஸ் ஹோல்டர் கடைகளில் கிடைக்கிறது. உங்கள் காரில் உள்ள சூரிய ஒளியைத் தடுக்கும் பேடுகளில் இதனை க்ளிப் போல மாட்டிக்கொள்ளலாம். கூலிங் கிளாஸை எடுக்க, வைக்க மிகவும் எளிதாகவும் இருக்கும். கிளாசும் சேதமாகாது.

இதன் விலை ரூ.250 முதல்..

ஏசி கப்ஹோல்டர்

ஏசி கப்ஹோல்டர்

கோடைகால பயணத்தின் போது காரில் உள்ள கூலிங் வாட்டர் கேனை வாங்கிவைத்தால் கூட அது சுடுதண்ணீராக மாறிவிடும். ஆனால் சில்லென்ற தண்ணீர் குடித்தால் தான் சிலருக்கு தாகம் அடங்கும். ஏசி கப் ஹோல்டர் இருந்தால் குளிரான நீரை எப்போதும் பருகலாம். காரில் ஏசி வெண்டிலேஷன் பகுதியில் இந்த கப் ஹோல்டரை பொருத்திவிட்டால், அதிலிருந்து வெளியேறும் கூலான காற்று உங்கள் பானத்தை எப்போதும் கூலாக வைத்திருக்கும்.

இதன் விலை ரூ.200 முதல்.

ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்

ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்

கார் ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கூட வெளிப்புற உஷ்ணம் காரினுள் புகுந்து உட்புற வெப்பநிலையை அதிகரிக்கச்செய்யும். இதனை தடுத்து எப்போதும் ஒரே வெப்பநிலையில் காரின் உட்புறத்தை வைக்க உதவுவதே ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டமாகும். சில விலை குறைந்த கார்களில் இந்த தொழில்நுட்பம் இருக்காது. அதற்காக கவலைப்படத் தேவையில்லை, இந்த தொழில்நுட்ப சாதனம் வெளிச்சந்தைகளில் மலிவாக கிடைக்கிறது. அதனை உங்கள் காரிலும் பொருத்திக் கொள்ளலாம்.

இதன் விலை ரூ.3,000 முதல்..

ஏர் ஃபிரஷ்னர்

ஏர் ஃபிரஷ்னர்

வெப்பத்தால் ஏற்படும் வியர்வை, நம் காரில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதனை போக்க உதவுவது ஏர் ஃபிரஷ்னர். இது உங்கள் காரின் உட்புறத்தை நல்ல மனத்துடன் வைக்க உதவும்.

டேஷ்போர்டு கவர்

டேஷ்போர்டு கவர்

காரில் வெப்பம் புகும் முதல் இடமாக இருப்பது டேஷ்போர்ட் மட்டுமே. அதிக வெப்பத்தை கிரகிப்பதால் நாளடைவில் உங்கள் டேஷ்போர்டின் நிறம் மங்கும், வெடிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் உள்ளது. மேலும் இவை காரின் உட்புற வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனை தடுக்க டேஷ்போர்டு கவர் உதவுகிறது.

சன் ஷேடு

சன் ஷேடு

சுரியனின் உஷ்னக் கதிர்களில் நம் முகம், தோல் உள்ளிட்ட இடங்களில் நேரடியாகப் படுவதிலிருந்து காப்பதில் சன் ஷேடுகள் உதவுகிறது. இவற்றை காரின் ஜன்னல்களில் பொருத்திக் கொள்ளலாம்.

ரெஃப்ரிஜிரேட்டர்

ரெஃப்ரிஜிரேட்டர்

காரில் செல்லும் போது சில்லென எதையாவது குடிக்க நினைத்தால் அதற்கு கொஞ்சம் பணம் செலவழித்து ரெஃப்ரிஜிரேட்டரை வாங்கி பொருத்திக்கொள்ளலாம். பல அளவுகளில் இவை கிடைக்கின்றன.

இதன் விலை ரூ.4,000 முதல்..

கார் கவர்

கார் கவர்

கார் கவர் என்பது தூசி, மழை, வெயிலில் இருந்து மட்டும் காரை காக்கிறது என்று நினைக்கத்தேவையில்லை. அதிகபட்ச வெயிலின் காரணமாக ஏற்படும் புற ஊதாக் கதிர்கள் காரில் உட்புகாமலும் கார் கவர் காக்கிறது.

சன் ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன்

வெயிலில் இருந்து காக்கும் மற்றொரு முக்கிய பொருள் சன் ஸ்கிரீன், விலை உயர்ந்த கார்களில் கட்டாயம் இடம்பெறும் இப்பொருளை, வெளிசந்தையிலும் வாங்கி மாட்டிக்கொள்ளலாம்.

சீட் கவர்

சீட் கவர்

வெயில் கால வெப்பமானது காரில் லெதர் சீட்டை கடுமையாக உஷ்னமாக்கிவிடும். இதனால் காலின் தோல் சீட்டுடன் ஒட்டிக்கொள்ளும் பிரச்சனை பலருக்கும் ஏற்படுவதுண்டு. உஷ்ணம் லெதர் சீட்டையும் மங்கிப்போக செய்யும். இதிலிருந்து சீட் கவர்கள் காக்கிறது.

கோடையை சமாளிக்க உதவும் 10 முக்கிய கார் ஆக்ஸசரிகள்

தற்போது, பனிக்காலம் முடிந்து கோடை காலத்தை கிட்டத்தட்ட நாம் நெருங்கி விட்டோம். வருடா வருடம் கோடையில் வெயில் அதிகரித்தே வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மட்டும் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 2,500 உயிர்கள் பலியானது நினைவிருக்கலாம்.

கோடையை சமாளிக்க உதவும் 10 முக்கிய கார் ஆக்ஸசரிகள்

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, சேலம் மற்றும் புதுச்சேரி போன்ற நகரவாசிகளும் வெயிலால் கடுமையாக பாதிப்படைகின்றனர். வெயிலானாலும் மழையானாலும் பயணங்கள் என்பது எதிர்பாராத ஒன்று. சுட்டெரிக்கும் வெயிலானது காரில் சென்றாலும் விட்டுவைக்காது என்பது நிதர்சனம்.

எனவே இதைப்போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு கோடை வெயிலை சமாளித்து உங்கள் கார் பயணத்தை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துகிறோம்..

ஸ்போர்ட்ஸ் மாடாலான மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் படங்கள்:

English summary
10 Summer Car Accessories To Beat The Heat
Story first published: Friday, March 10, 2017, 16:29 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos