உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

உங்கள் வாகனத்தின் ஆயுளை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

புதிய வாகனங்களை நாம் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். அதிலும் குறிப்பாக கார் என்றால், பெரிய தொகையை நாம் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அப்படி சிறுக சிறுக சேமித்த பணத்தில் வாங்கும் புதிய வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். எனினும் பராமரிப்பு என வரும்போது, ஒரு சிலர் கோட்டை விட்டு விடுகின்றனர்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

எனவே அவர்களின் வாகனங்கள் நீண்ட காலம் நீடித்து உழைப்பதில்லை. ஆனால் இன்றைய நவீன கால வாகனங்களை முறையாக பராமரித்தால், நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அவை மிக நீண்ட காலம் உழைப்பதுடன், அதிக கிலோ மீட்டர்களும் ஓடும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

வார்ம்-அப் செய்யுங்கள்!

விளையாட தொடங்கும் முன்பு வார்ம்-அப் செய்வது போல், வாகனங்களின் இன்ஜினிற்கும் சிறிய வார்ம்-அப் அவசியம். பழைய தலைமுறை வாகனங்களை, குறிப்பாக டீசல் வாகனங்களை ஸ்டார்ட் செய்தவுடன் நீண்ட நேரம் வார்ம்-அப் செய்வது அவசியமாக இருந்தது. எனினும் இன்றைய நவீன கால வாகனங்களுக்கு, அவ்வளவு நேரம் வார்ம்-அப் தேவையில்லை.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

இன்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன், ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் மட்டும் ஐட்லிங்கில் விட்டு வார்ம்-அப் செய்தால் போதுமானது. இன்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன், வார்ம்-அப் செய்வதன் மூலம், வாகனத்தின் எரிபொருள் சிக்கனம் உயரும். அத்துடன் செயல்திறனும் மேம்படும். எனவே வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் புறப்படாமல், ஓரிரு நிமிடங்கள் ஐட்லிங்கில் விட்டு வார்ம்-அப் செய்யுங்கள்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

ஸ்வீட் ஸ்பாட்டை கண்டுபிடியுங்கள்!

அதிகபட்ச டார்க் திறனை வழங்கும் ஒரு ஸ்வீட் ஸ்பாட் (Sweet Spot), ஒவ்வொரு இன்ஜினிற்கும் இருக்கும். அந்த ஸ்வீட் ஸ்பாட்டை கண்டுபிடியுங்கள். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, இன்ஜினின் அந்த ஆர்பிஎம் அளவில் வாகனத்தை செலுத்த முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் இன்ஜினின் பணிச்சுமை குறைக்கப்படும் என்பதால், அதன் ஆயுள் அதிகரிப்பது உறுதி செய்யப்படும்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

பேலன்ஸ் மற்றும் அலைன்மெண்ட்!

ஒரு சில நூறு ரூபாய்களை மிச்சம் பிடிப்பதற்காக, பெரும்பாலான வாகன ஓட்டிகள் தவிர்க்கும் சர்வீஸாக இது உள்ளது. ஒவ்வொரு வாகனமும் சில ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓடிய பிறகு, கண்டிப்பாக வீல் அலைன்மெண்ட் மற்றும் பேலன்ஸ் சர்வீசுக்கு செல்ல வேண்டும். நீங்கள் மோசமான சாலையில் அடிக்கடி வாகனம் ஓட்டுபவர் என்றால், அலைன்மெண்ட் மற்றும் பேலன்ஸ் சர்வீசுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

சரியான நேரத்தில் அலைன்மெண்ட் மற்றும் பேலன்ஸ் சர்வீஸை செய்வதன் மூலம், உங்கள் வாகனத்திடம் இருந்து நீங்கள் அதிக மைலேஜை பெறலாம். அத்துடன் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் மீது குறைந்த அழுத்தம் மட்டுமே கொடுக்கப்படுவதையும் இது உறுதி செய்யும். மேலும் சஸ்பென்ஸன் அமைப்பின் ஆயுட்காலமும் அதிகரிக்கும்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

கனிவாக நடந்து கொள்ளுங்கள்!

கரடுமுரடான நிலப்பரப்புகளில் அதிவேகத்தில் பயணம் செய்வது என்பது, புதிய காரில் வேண்டுமானால் பிரச்னைகளை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அதனை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால், காலப்போக்கில் எல்லாம் மாறும். அதாவது பிரச்னைகள் ஏற்படும். எனவே கரடுமுரடான நிலப்பரப்புகளில் பயணம் செய்யும்போது, வேகத்தை குறைப்பது நல்லது.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

அதேபோல் வேகத்தடைகளின் மீது ஏறி, இறங்கும்போதும் கண்டிப்பாக வேகத்தை குறைக்க வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால், வாகனத்தின் சஸ்பென்ஸன் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். அத்துடன் சக்கரங்களின் அலைன்மெண்ட்டும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எப்போதும் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

வேறு என்ன செய்ய வேண்டும்?

வாகனத்தை சர்வீஸ் செய்வதை ஒருபோதும் தவற விடாதீர்கள். குறிப்பிட்ட காலத்தில் முறையாக சர்வீஸ் செய்யுங்கள். அதேபோல் குறுகிய பயணங்களுக்கு, அதாவது ஒன்று அல்லது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு செல்வதற்கெல்லாம் காரை எடுக்காதீர்கள். அப்படிப்பட்ட இடங்களுக்கு நடந்து செல்வதுதான் சிறந்தது.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

ஒரு சரியான எரிபொருள் நிலையத்தை தேர்வு செய்து, அங்கேயே தொடர்ந்து எரிபொருள் நிரப்புவது நல்லது. இது உங்கள் வீடு இருக்கும் பகுதிகளில் சாத்தியம்தான். ஆனால் நெடுஞ்சாலைகளின் வழியாக தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும்போது எங்கு எரிபொருள் நிரப்புவது? என்ற சந்தேகம் ஏற்படலாம். இதற்கு நீங்கள் லாரி ஓட்டுனர்களை பின்பற்றலாம்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

அதாவது நெடுஞ்சாலைகளில் அதிகப்படியான லாரிகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், நீங்களும் உங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவது சிறந்ததாக இருக்கும். அதேபோல் உங்கள் வாகனத்தில், தேவையில்லாமல் இருக்கும் பொருட்களை அகற்றி விடுவதும் சிறந்தது. கூடுதல் எடை இருந்தால், வாகனத்தின் இன்ஜின் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.

உங்கள் வாகனத்தின் ஆயுள் 3 மடங்கு உயரும்... எப்படினு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

அத்துடன் கூடுதல் எடை இருந்தால், டயர்கள், பிரேக், சஸ்பென்ஸன் மற்றும் இதர பாகங்களின் மீது அதிக அழுத்தம் கொடுப்பது போல் அமைந்து விடும். எனவே காரில் தேவையற்ற பொருட்களை அகற்றி விட்டு, சுத்தமாக வைத்து கொள்வது நல்லது. மேற்கண்ட வழிமுறைகளை எல்லாம் பின்பற்றினால், உங்கள் வாகனத்தின் ஆயுள் அதிகரிக்கும் என்பது உறுதி.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Useful Tips To Extend The Life Of Your Vehicle. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X