பனி காலத்துல கார் கண்ணாடியை சுடு தண்ணில துடைக்கலாமா? இந்த கேள்விக்கு பதில் தெரியாம நிறைய பேர் தப்பு பண்றாங்க!

குளிர்காலத்தில் (Winter) கார்களை ஓட்டுவது என்பது உண்மையிலேயே மிகவும் சவாலான காரியம்தான். எனவே உங்கள் கார் பயணம் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு சில வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அந்த டிப்ஸ்கள் என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

சுடு தண்ணி வேணவே வேணாம்!

ஜன்னல் கண்ணாடிகள், விங் மிரர்கள், ஹெட்லைட்கள், டெயில் லைட்கள் மற்றும் பனி விளக்குகள் ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் 'விஸிலிபிட்டி' (Visibility) அதிகரிக்கும். அதாவது உங்களால் மிகவும் தெளிவாக பார்த்து, காரை ஓட்ட முடியும். குளிர்காலங்களில் காரை ஓட்டுபவருக்கு பார்வை தெளிவாக இருப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஆகும். அப்போதுதான் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

பனி காலத்துல கார் கண்ணாடியை சுடு தண்ணில துடைக்கலாமா? இந்த கேள்விக்கு பதில் தெரியாம நிறைய பேர் தப்பு பண்றாங்க!

ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும், கண்ணாடிகளை துடைப்பதற்கு மிகவும் சூடான தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். வெப்பநிலையில் ஏற்படும் மாற்றமானது, கண்ணாடியில் விரிசல்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதுதான் இதற்கான காரணம் ஆகும். மிதமான சூட்டில் உள்ள தண்ணீருக்கும், மிகவும் சூடாக உள்ள தண்ணீருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அனைவரும் இங்கே புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் கார் கண்ணாடிகளை நீங்கள் பிரச்னைகள் இன்றி பாதுகாக்கலாம்.

அதே நேரத்தில் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் பனிப்பொழிவு மிகவும் கடுமையாக இருக்கும். எனவே காரின் மேற்கூரையில் பனி குவியலாக படரலாம். உங்கள் காரில் இந்த பிரச்னை ஏற்பட்டால், மேற்கூரையில் உள்ள பனியை உடனடியாக அகற்றி விடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கார் ஓட்டி கொண்டிருக்கும்போது, முன் பக்க கண்ணாடியில் பனி சரிந்து, விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதை தடுக்க வேண்டுமென்றால், மேற்கூரையில் உள்ள பனியை அகற்றி விடுங்கள்.

வைப்பர் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்!

காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என 2 பக்கங்களிலும் அனைத்து விளக்குகளும் சரியான முறையில் வேலை செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேபோல் தேவைப்பட்டால் வைப்பர் பிளேடுகளையும் மாற்றி விடுங்கள். உங்கள் காரின் முன் பக்க கண்ணாடியில் பனி, மழை நீர் மற்றும் குப்பைகள் ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், அதன் மோட்டார்கள் சர்வீஸ் செய்யப்பட்டு சரியான கண்டிஷனில் இருப்பது மிகவும் அவசியம்.

பிரேக் முக்கியம் பிகிலு!

சாலை ஈரமாக இருக்கும்போது, உங்கள் காரின் 'ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ்' (Stopping Distance) மிக கடுமையாக பாதிக்கப்படலாம். எனவே குளிர்காலங்களில் பிரேக்குகள் முறையாக செயல்படுவது மிகவும் அவசியம். பிரேக்குகளை நீங்கள் முறையாக சர்வீஸ் செய்து விட்டால், விபத்துக்களில் சிக்காமல் தப்பி விடலாம். முக்கியமாக உங்கள் காரின் பிரேக் பேடுகளை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவை நல்ல நிலையில் இல்லை என்றால், மாற்றி விடுங்கள்.

பேட்டரியை மாத்தீருங்க!

மிகவும் குளிரான வானிலை, பேட்டரியின் செயல்திறனில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக இன்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது, பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே பேட்டரியையும் முறையாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பேட்டரி மிகவும் பழையது என்றால், அதனை மாற்றி விட்டு, புதிய பேட்டரியை பொருத்தி கொள்வது நல்லது. அதேபோல் கேபிள்களையும் ஒரு முறைக்கு இரு முறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

டயர் வழுக்காம இருக்கணுமா?

வைப்பர்கள், பிரேக், பேட்டரி ஆகியவைற்றை போல், டயர்களும் நல்ல கண்டிஷனில் இருப்பது மிகவும் முக்கியம். இதை உறுதி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. டயர்களில் த்ரெட் போதுமான அளவில் இருக்க வேண்டும். அதேபோல் காற்று சரியான அளவில் நிரப்பப்பட்டிருப்பதும் அவசியம். இல்லாவிட்டால் ஈரமான சாலைகளில் டயர்கள் வழுக்கி செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் போதுமான அளவிற்கு 'க்ரிப்' கிடைக்காமலும் போகலாம்.

Most Read Articles

English summary
Useful tips to take care of your car in winter
Story first published: Wednesday, December 7, 2022, 14:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X